பாகல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பாகற்காய்
Momordica charantia Blanco2.357.png
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: Eudicots
தரப்படுத்தப்படாத: Rosids
வரிசை: Cucurbitales
குடும்பம்: வெள்ளரிக் குடும்பம்
பேரினம்: Momordica
இனம்: M. charantia
இருசொற் பெயரீடு
Momordica charantia
Descourt.

பாகற்காய் (Momordica charantia) என்பது உணவாகப் பயன்படும் பாகற்காய் என்னும் காயைத் தரும் ஒரு கொடி. இக்கொடி வெள்ளரிக்காய், பூசனிக்காய், தர்ப்பூசனி முதலான நிலைத்திணை (தாவர) வகைகளை உள்ளடக்கிய குக்குர்பிட்டேசீ (Cucurbitaceae) என்னும் rouch செடிகொடி குடும்பத்தைச் சேர்ந்த கொடி. பாகற்காய் கைப்புச் (கசப்பு, கயப்பு) சுவைமிக்கது. இது உடல் நலத்துக்கான உணவாகக் கருதப்படுகிறது. இதற்கு மருத்துவப் பயன்களும் உண்டு. சம்பலாகவோ, கறியாக்கியோ, வறுத்தோ, பொரித்தோ உண்பர். பாகற்காயின் இரத்த-சர்க்கரையளவைக் குறைக்கும் குணம் (hypoglycaemic activity) அறிவியலறிஞர்கள் பலராலும் அறியப்பட்ட ஒரு உண்மையாகும்.[1]

வகைகள்[தொகு]

பாகற்காயில் 2 வகைகள் உண்டு. பொடியாக இருப்பது மிதி பாகற்காய் பெரிதாக நீளமாக இருப்பது கொம்பு பாகற்காய்.

மருத்துவப் பயன்பாடுகள்[தொகு]

  • நீரிழிவு, ஜூரம், இருமல், மூச்சிரைப்பு, ஆஸ்துமா, மூல நோய், வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களுக்கு ஏற்ற மருந்து பாகற்காய்.
  • பாகற்காயின் இலையும் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. பாகற்காய் இலையில் இருந்து எடுக்கப்படும் சாறு, பல நோய்களுக்கு அருமருந்தாகும். இந்த இலைகளை அரைத்து உடல் முழுவதும் பத்துப்போட்டால் படை, சிரங்கு, அரிப்பு போன்றவை பறந்தோடி விடும்.

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Home remedies-vol.1 T.V.Sairam - p.161
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகல்&oldid=1835661" இருந்து மீள்விக்கப்பட்டது