பாகன் டாலாம் சட்டமன்றத் தொகுதி
| பாகன் டாலாம் (N09) | |
|---|---|
| Bagan Dalam (N09) State Constituency in Penang | |
பினாங்கு தீவில் மஞ்சள் நிறத்தில் பாகன் டாலாம் | |
| வாக்காளர்களின் எண்ணிக்கை | 21,221 (2023) |
| முன்னாள் தொகுதி | |
| உருவாக்கப்பட்ட காலம் | 1974 |
| கட்சி | பாக்காத்தான் அரப்பான் |
| சட்டமன்ற உறுப்பினர் | குமரன் கிருஷ்ணன் |
| முதல் தேர்தல் | 1974 |
| இறுதித் தேர்தல் | 2023 |
| பரப்பளவு | 7 சதுர கி.மீ |
பாகன் டாலாம் சட்டமன்றத் தொகுதி (N09) (மலாய்: Bahagian Pilihan Raya Bagan Dalam; ஆங்கிலம்: Bagan Dalam State Constituency) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி ஆகும். 1974 முதல் பினாங்கு மாநில சட்டமன்றத்தில் பிரதிநிதிக்கப்படுகிறது.
பாகன் டாலாம் சட்டமன்றத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2023-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1974-ஆம் ஆண்டில் இருந்து பாகன் டாலாம் சட்டமன்றத் தொகுதி, பினாங்கு மாநில சட்டமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. தற்போது குமரன் கிருஷ்ணன் என்பவர் இந்தச் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக உள்ளார்.[1]
பாகன் டாலாம்
[தொகு]'பாகான் டாலாம் (Bagan Dalam) என்பது மலேசியா, பினாங்கு, வட செபராங் பிறை மாவட்டத்தில்; அமைந்துள்ள நகரம். நகரப் பகுதியின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமமான கம்போங் பாகான் டாலாம் எனும் கிராமத்தின் நினைவாக இந்த இடத்திற்குப் பெயரிடப்பட்டது. பாகான் டாலாம் என்றால் உள் படகுத் துறை (Dermaga Dalam) என்று பொருள். பட்டர்வொர்த் துறைமுகத்திற்கு அருகில் அமைந்துள்ளது.[3]
செபராங் பிறை மாநிலப் பகுதியில் உள்ள பிறை (பினாங்கு) எனும் பெரிய தொழில்துறை பகுதியுடன் பாகான் டாலாம் நகரம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நகரை பிறை ஆறு கடந்து செல்கிறது. பாகான் டாலாம் நகரம் வடக்கு-தெற்கு விரைவுச்சாலைக்கு அருகில் உள்ளது. பட்டர்வொர்த் துறைமுகத்துடன் இணைக்கும் சாலைகளும் உள்ளன. பினாங்கு, ஜார்ஜ் டவுன் நகரில் இருந்து 25 கி.மீ.; பட்டர்வொர்த் நகரில் இருந்து 11 கி.மீ. தொலைவில்உள்ளது.
வரலாறு.
[தொகு]| பினாங்கு மாநில சட்டமன்றத்தின் பாகன் டாலாம் உறுப்பினர்கள் | |||
|---|---|---|---|
| சட்டமன்றம் | ஆண்டுகள். | உறுப்பினர் | கட்சி |
| பட்டர்வொர்த்; பாகன் ஆஜாமில் இருந்து உருவாக்கப்பட்ட தொகுதி | |||
| 4-ஆவது | 1974 – 1978 | டி. சுப்பையா | பாரிசான் (மஇகா) |
| 5-ஆவது | 1978 – 1982 | ||
| 6-ஆவது | 1982 – 1986 | ||
| தொகுதி நீக்கப்பட்டு, பிறை மற்றும் மாக் மண்டினாகப் பிரிக்கப்பட்டது | |||
| பிறை மற்றும் பாகன் ஜெர்மாலில் இருந்து மீண்டும் உருவாக்கப்பட்டது | |||
| 11-ஆவது | 2004 – 2008 | சுப்பையா பழனியப்பன் | பாரிசான் (மஇகா) |
| 12-ஆவது | 2008 – 2013 | தனசேகரன் அத்தரபதி | பாக்காத்தான் ராக்யாட் (ஜசெக) |
| 13-ஆவது | 2013 – 2015 | ||
| 2015 – 2018 | பாக்காத்தான் அரப்பான் (ஜசெக) | ||
| 14-ஆவது | 2018 – 2023 | சத்தீஸ் முனியாண்டி | |
| 15-ஆவது | 2023–தற்போது வரையில் | குமரன் கிருஷ்ணன் | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]| வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
|---|---|---|---|---|---|
| குமரன் கிருஷ்ணன் | பாக்காத்தான் | 10,506 | 71.49 | 1.01 ▼ | |
| ஜெயராமன் குஞ்சு கண்ணு | பெரிக்காத்தான் | 2,964 | 20.17 | 20.17 | |
| சத்தீஸ் முனியாண்டி | சுயேச்சை | 1,111 | 7.56 | 7.56 | |
| எஸ். ராஜசகானன் | பினாங்கு முன்னணி | 115 | 0.78 | 0.48 | |
| மொத்தம் | 14,696 | 100.00 | – | ||
| செல்லுபடியான வாக்குகள் | 14,696 | 98.84 | |||
| செல்லாத/வெற்று வாக்குகள் | 172 | 1.16 | |||
| மொத்த வாக்குகள் | 14,868 | 100.00 | |||
| பதிவான வாக்குகள் | 21,221 | 14868 | 11.64 ▼ | ||
| Majority | 7,542 | 56.3 | 5.42 | ||
| பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது | |||||
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "14th General Election Malaysia (GE14 / PRU14) - Penang".
- ↑ "15th Penang State Election - Results Overview". live.chinapress.com. Retrieved 2023-08-13.
- ↑ "Bagan Dalam probably got its name from piers along the Prai River. These are "inland piers" compared to those jutting out into the open sea at Bagan Luar. Bagan Dalam is bordered by Jalan Chain Ferry to the north, the Prai River to the south and the sea to the west. It is the area north of the Prai River from the town of Prai". Penang Travel Tips (in ஆங்கிலம்). Retrieved 10 August 2022.