உள்ளடக்கத்துக்குச் செல்

பாகனூர்

ஆள்கூறுகள்: 10°43′54″N 78°36′00″E / 10.731650°N 78.599999°E / 10.731650; 78.599999
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாகனூர்
—  ஊராட்சி  —
பாகனூர்
அமைவிடம்: பாகனூர், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°43′54″N 78°36′00″E / 10.731650°N 78.599999°E / 10.731650; 78.599999
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 1,999 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


பாகனூர் (Paganur) என்பது தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவரங்கம் வட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஓர் ஊராட்சியாகும்.[4][5]

இதனை முன்பு பாவனூர் என்று அழைத்துள்ளார்கள். இந்த ஊராட்சி மூன்றுக்கு மேற்பட்ட கிராமங்களைக் கொண்டுள்ளது. தெற்கே மாத்தூரையையும் வடக்கே நவலூர் குட்டப்பட்டு ஊராட்சியையும் மேற்கே சத்திரப்பட்டி மற்றும் சன்னாசிப்பட்டி ஆகிய ஊர்களையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

ஊர்கள்

[தொகு]
  1. மேலப்பாகனூர்
  2. தெற்குப்பாகனூர்
  3. வடக்குப்பாகனூர்
  4. நடுப்பாகனூர்

மக்கள் தொகை

[தொகு]

2001இன் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பாகனூரில் 1,999 பேர் இருந்துள்ளனர்.972 ஆண்கள் மற்றும் 1027 பெண்கள் ஆவர். பாலின வீதம் 1057 ஆகும். படிப்பறிவு வீதம் 66.97 ஆகும்.

கல்வி

[தொகு]

மூன்று துவக்கப்பள்ளிகள் உள்ளன. மேலும் பிரிஸ்ட் பல்கலைக்கழகமும் உள்ளது.

போக்குவரத்து

[தொகு]
  • இங்குள்ள சில சாலைகள் 2004ஆம் ஆண்டு வரை மண் சாலைகளாக இருந்தன. 2004ஆம் ஆண்டு தார்ச்சாலைகளாக மாற்றப்பட்டன.
  • பேருந்து வசதியானது ஒரு நாளைக்கு 6 தடவைக்கு மேல் வருகிறது.
  • பூங்குடியில் ரயில் நிலையம் உள்ளது. பாகனூரில் இருந்து பேருந்தின் மூலம் அங்கு சென்று வரலாம்.
  • திருச்சி-திண்டுகள் ரயில் பாதையானது பாகனூர் வழியாக செல்கிறது.

அரசு அலுவலகங்கள்

[தொகு]
  • நியாய விலைக்கடை (பழைய பாகனூர்)
  • வி.ஏ.ஒ அலுவலகம் (பழைய பாகனூர்)
  • பஞ்சாயத்து அலுவலகம் (வடக்குப்பாகனூர்)
  • தபால் அலுவலகம் (வடக்குப்பாகனூர்)

பாகனூர் ஊராட்சி மணிகண்டத்தை ஒன்றியமாக கொண்டுள்ளது.

இறை வழிபாட்டுத் தலங்கள்

[தொகு]

மேலப்பாகனூரில் மரியம்மன் கோவில் உள்ளது. வடக்குப்பாகனூரில் இரண்டு கோவில்கள் உள்ளன. தெற்குப்பாகனூரில் அன்னை ஆரேக்கியமாதா தேவாலயம் மற்றும் மாரி அம்மன், விநாயகர் சன்னதி அமைந்துள்ளது.

தொழில்கள்

[தொகு]

இங்கு முக்கிய தொழில் விவசாயமாகும். பெரும்பாலும் கிணற்று பாசனத்தை கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "Manikandam Block – Panchayat Villages". National Informatics Centre-Tamil Nadu. Archived from the original on 2015-02-07. Retrieved 6 சனவரி 2015.
  5. "Srirangam Taluk – Revenue Villages". National Informatics Centre-Tamil Nadu. Archived from the original on 2015-02-07. Retrieved 6 சனவரி 2015.
  6. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகனூர்&oldid=4211225" இலிருந்து மீள்விக்கப்பட்டது