பாஃபின் விரிகுடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாஃபின் விரிகுடா
Baffin Bay, Canada.svg
ஆள்கூறுகள்73°N 67°W / 73°N 67°W / 73; -67 (Baffin Bay)ஆள்கூறுகள்: 73°N 67°W / 73°N 67°W / 73; -67 (Baffin Bay)
அதிகபட்ச நீளம்1,450 km (901 mi)
அதிகபட்ச அகலம்110–650 km (68–404 mi)
மேற்பரப்பளவு689,000 km2 (266,000 sq mi)
சராசரி ஆழம்861 m (2,825 ft)
அதிகபட்ச ஆழம்2,136 m (7,008 ft)
நீர்க் கனவளவு593,000 km3 (142,300 cu mi)
மேற்கோள்கள்[1][2]

பாஃபின் விரிகுடா (Baffin Bay, இனுக்ரிருற் மொழி: Saknirutiak Imanga;[3] பிரெஞ்சு மொழி: Baie de Baffin),[a] பாஃபின் தீவிற்கும் கிறீன்லாந்தின் தென்மேற்கு கடலோரத்திற்கும் இடையிலுள்ள வட அத்திலாந்திக்குப் பெருங்கடலின் கரையோரக் கடலாகும்.[1][2][5] இந்த விரிகுடா அத்திலாந்திக்குடன் டேவிசு நீரிணையாலும் லாப்ரடார் கடலாலும் இணைந்துள்ளது. குறுகிய நாரெசு நீரிணை பாஃபின் விரிகுடாவை ஆர்க்டிக் பெருங்கடலுடன் இணைக்கிறது. பனிப் போர்வையும் அடர்ந்த மிதக்கும் பனியும் பனிமலைகளும் நிறைந்துள்ளதால் ஆண்டின் பெரும் பகுதியிலும் இந்த விரிகுடாவில் பயணம் மேற்கொள்ளவியலாது. இருப்பினும், வடக்கு நீர் என அறியப்படும், கிட்டத்தட்ட 80,000 km2 (31,000 sq mi) பரப்புள்ள பனிக்கட்டிப்பரப்பிலுள்ள இடை நீர்ப்பரப்பு (பாலின்யா) இசுமித் சவுண்டிற்கு வடக்கில் வேனிற்காலங்களில் உருவாகின்றது. [6] இவ்விரிகுடாவிலுள்ள பெரும்பாலான கடல்வாழ் உயிரினங்கள் இந்தப் பகுதியிலேயே குவிந்துள்ளன.

Arctic cultures 900-1500.png

குறிப்புகள்[தொகு]

  1. Former names include Baffin's Bay and Baffin's Sea.[4]

மேற்கோள்கள்[தொகு]

  • Baffin, William (1881), Markham, Clements R. (ed.), The Voyages of William Baffin, 1612–1622, Hakluyt Society.
  •   "Baffin Bay and Baffin Land". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 3. (1911). Cambridge University Press. 192–193. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஃபின்_விரிகுடா&oldid=3428563" இருந்து மீள்விக்கப்பட்டது