பஹ்தா பின்த் ஆசி அல் சுரைம்
பஹ்தா பின்த் ஆசி அல் சுரைம் | |
---|---|
இறப்பு | 1934 |
துணைவர் |
|
குழந்தைகளின் பெயர்கள் |
|
மரபு |
|
தந்தை | ஆசி பின் சுரைம் அல் ஷம்மரி |
பஹ்தா பின் ஆசி அல் சுரைம் (Fahda bint Asi bin Shuraim Al Shammari) (இறப்பு: 1934) சவுதி அரேபியா என அறியப்படும் மூன்றாம் சவுதி அரசின் முதல் அரசரான அப்துல்லா பின் அப்துல் அசீசின் மனைவியரில் ஒருவராகவும், சவுதி அரேபியாவின் முன்னாள் ஆட்சியாளரான அப்துல்லா இப்னு அப்துல் அசீசின் தாயாகவும் இருந்தார். [1]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]இவர், சக்திவாய்ந்த ஷம்மர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த அப்தே பிரிவில் உறுப்பினராக இருந்தார். [2] இவர் முன்னாள் ஷம்மர் பழங்குடித் தலைவரான ஆசி பின் சுரைம் அல் ஷம்மரியின் மகளாவார். [3] அவர் பழங்குடியினரின் தெற்குப் பகுதியின் ஷேக்காக இருந்தார். [4] [5]
இவருக்கு முத்தானி, சுல்தான் மற்றும் காசி என்ற மூன்று சகோதரர்களும், ஷிமா என்ற ஒரு சகோதரியும் இருந்தனர். [5]
சொந்த வாழ்க்கை
[தொகு]பஹ்தா பின் ஆசி முதன்முதலில் பத்தாவது அல் ரஷீத் எமிரான சவுத் பின் அப்துல் அசீசு என்பவரை மணந்தார். 1920 இல் சவுத் பின் அவரது உறவினரால் கொல்லப்பட்டார். [6] முதல் திருமணத்திலிருந்து இவருக்கு அப்துல் அசீசு (பிறப்பு 1916), மிஷால் (பிறப்பு 1918) என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தனர். சவுத் உடனான இவரது திருமணத்தின் போது அவர்கள் ஹெயிலின் பார்சன் அரண்மனையில் வசித்து வந்தனர். [5]
கணவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இவர் 1922 இல் அப்துல் அசீசை[7] in 1922[5] மணந்ததன் [8] மூலம் அவரது எட்டாவது துணைவியானார். [9] இந்தத் திருமணத்திற்குப் பிறகு இவரது இரண்டு மகன்களையும் அப்துல் அசீசு தத்தெடுத்தார். [5]
அவரை திருமணம் செய்த இரண்டு அல் ரஷீத் பெண்களில் இவரும் ஒருவர். திருமணத்திற்கான காரணம், ரஷீதிகளுடன் ஒரு சண்டையை உருவாக்குவது அல்லது அவர்களை நாட்டில் விசுவாசமான கூறுகளாக மாற்றுவதாக கருதப்படுகிறது. [10] வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ரஷீதிகளால் ஏற்படக்கூடிய சிக்கல்களை அகற்றுவதற்காக அப்துல் அசீசு இவரை மணந்தார். [11] கூடுதலாக, பதாவின் தந்தை, ஆசி பின் சுரைம் அல் ஷம்மாரி, மன்னர் அப்துல் அசீசுடன் மிக முக்கியமான ஆதரவாளர்களில் ஒருவரானார். மேலும் சவுதி அரேபியா உருவானபோது 1929 இல் நடந்த சபில்லா போர் உட்பட பல போர்களில் அவர் அசீசின் படைகளில் சேர்ந்தார். [5]
பஹ்தா மற்றும் மன்னர் அப்துல் அசீசுக்கும் மூன்று குழந்தைகள் இருந்தன. [12] இந்த திருமணத்தின் மூலம் இவரது முதல் மகன் அப்துல்லா சவூதி அரேபியாவின் ஆறாவது மன்னர் ஆனார். இவரது மற்ற இரண்டு குழந்தைகள் நௌப் மற்றும் சீதா . பதா 1934 இல் இறந்தார்.
மரபு
[தொகு]மொராக்கோவின் போஸ்கோராவில் ஆகத்து 2009 இல் பஹ்தா பிந்த் ஆசி அல் சுரைம் மேல்நிலைப் பள்ளியை இவரது மகனும், மன்னருமான அப்துல்லா திறந்து வைத்தார். பொதுப் பயிற்சிக்காக பதினெட்டு வகுப்பறைகள், ஒன்பது அறிவியல் வகுப்பறைகள், மேலும் மூன்று வகுப்பறைகள், ஒரு நூலகம் மற்றும் விளையாட்டுக்கான சிறப்புப் பகுதிகள் இந்த பள்ளியில் கட்டப்பட்டது. [13]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Abdullah bin Abdulaziz Al Saud". Jewish Virtual Library.
- ↑ Sultan Al Qassemi (1 February 2012). "Tribalism in the Arabian Peninsula: It Is a Family Affair". Jadaliyya. http://www.jadaliyya.com/pages/index/4198/. பார்த்த நாள்: 16 April 2013.
- ↑ Talal Kapoor (22 November 2010). "King Abdallah's Hospitalization - Succession Endgame?". Datarabia. பார்க்கப்பட்ட நாள் 8 June 2012.
- ↑ Talal Kapoor (8 June 2012). "Nayif's Departure: Spring Cleaning In The Royal Court?". Datarabia. பார்க்கப்பட்ட நாள் 10 June 2012.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 Kholoud Al Abdullah (23 September 2014). "سعوديات خلدهن التاريخ". Rouge Magazine இம் மூலத்தில் இருந்து 14 மே 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210514065719/http://www.rougemagz.com/2014/09/23/%D8%B3%D8%B9%D9%88%D8%AF%D9%8A%D8%A7%D8%AA-%D8%AE%D9%84%D8%AF%D9%87%D9%86-%D8%A7%D9%84%D8%AA%D8%A7%D8%B1%D9%8A%D8%AE/. பார்த்த நாள்: 9 September 2020.
- ↑ Talal Kapoor (1 February 2007). "Analysis: Al Rashid Opposition Group (part one)". Datarabia. பார்க்கப்பட்ட நாள் 23 June 2012.
- ↑ Mark Weston (28 July 2008). Prophets and Princes: Saudi Arabia from Muhammad to the Present. John Wiley & Sons. p. 169. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-18257-4.
- ↑ Saudi Arabia King Fahd bin Abdulaziz Al Saud Handbook. Int'l Business Publications. 1 January 2005. p. 28. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7397-2740-9.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Saudi Arabia King Fahd bin Abdulaziz Al Saud Handbook. 1 January 2005.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Robert Baer (May 2003). "The Fall of the House of Saud". Atlantic Magazine. https://www.theatlantic.com/magazine/archive/2003/05/the-fall-of-the-house-of-saud/4215/2/.
- ↑ Abdullah Mohammad Sindi. "The Direct Instruments of Western Control over the Arabs: The Shining Example of the House of Saud" (PDF). Social sciences and humanities. Archived from the original (PDF) on 1 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 25 May 2012.
- ↑ Iris Wurm (March 2008). "Operation: Reforming the Kingdom External and Internal Triggers of the Reform Process in Saudi-Arabia" (Paper presented at the 49th ISA Annual Convention). Peace Research Institute Frankfurt. பார்க்கப்பட்ட நாள் 18 December 2020.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Public Affairs". Saudi Embassy at Washington D.C. Archived from the original on 12 June 2010. பார்க்கப்பட்ட நாள் 5 May 2012.