பஹிர் சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பஹிர் ஷா (பிறப்பு: பிப்ரவரி 21, 2000) ஒரு ஆப்கான் துடுப்பாட்ட வீரர் .[1] 2017 ஆம் ஆண்டு முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமனார். ஸ்பீன் கர் ரீஜியன் துடுப்பாட்ட அனி சார்பாக இவர் அகமது ஷா அப்தலி நான்கு நாள் கொண்ட போட்டித் தொடரில் இவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 256* ஓட்டங்களை எடுத்தார்.[2] இது அறிமுகமான போட்டியில் ஒருவர் எடுக்கும் இரண்டாவது அதிகபட்ச ஓட்டமாகும். மேலும் இவர் முதல் தர அறிமுகத்தில் இரட்டை நூறுகள் அடித்த 17 வது வீரர் ஆனார்.[3][4] இவர் ஆப்கன் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார், மேலும் இவர் பட்டியல் அ துடுப்பாட்ட ம், முதல் தரத் துடுப்பாட்டம் மற்றும் இருபது20 ஆகிய உள்ளூர்ப் போட்டிகளிலும் விளையாடி வருகிறார்

அடுத்த மாதம், தனது மூன்றாவது முதல் வகுப்பு போட்டியில், இவர் இரண்டு ஆட்டப் பகுதிகளிலும் நூறு ஓட்டங்களை அடித்தார் அதன் முறையே 111 மற்றும் 116 ஓட்டக்கள் ஆகு.[5] பூஸ்ட் பகுதி துடுப்பாட்ட அணிகு எதிரான போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் இவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 303 ஓட்டங்களை எடுத்தார். இதன்மூலம் ஜாவேத் மியாந்தாத்துக்குப் பிறகு, முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் மூன்று நூறுகள் அடித்த இரண்டாவது இளைய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.[6] முதல் தர துடுப்பாட்ட போட்டியில் தனது முதல் ஆறு ஆட்டப் பகுதிகளிலும் சேர்த்து மொத்தமாக 831 ஓட்டங்களை எடுத்தார். இதன் மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் எனும் சாதனை படைத்தார். இதற்கு முன்னதாக பில் போன்ஸ்ஃபோர்டு எடுத்த 741 ஓட்டங்ஜள் எடுத்ததே சாடஹ்னையாக இருந்தது.[7] இவர் தனது பதினொன்றாவது ஆட்டப் பகுதியில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் தனது 1,000 வது ஓட்டங்களை எடுத்தார். இதன்மூலம் விரைவாக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விரைவாக 1,000 ஓட்டங்களை எடுத்த இரண்டாவது வீரர் எனும் சாதனை படைத்தார்.[8] மேலும் அந்தத் தொடரில் மொத்தமாக 1,096 ஓட்டங்களுடன் , 2017–18 அஹ்மத் ஷா அப்தாலி 4 நாள் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார்.[9]

டிசம்பர் 2017 ஆம் ஆண்டில் , இவர் 19 வயதுக்குட்பட்ட துடுப்பாட்டஉலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணியில் இடம் பெற்றார்.[8] ஜனவரி 2018 ஆம் ஆண்டில் , முதல் தர துடுப்பாட்ட போட்டியில் அவரது மட்டையாட்ட சராசரி 121.77 ஆக இருந்தது.[10] குறைந்தபட்சம் 1,000 முதல் தர ரன்கள் எடுத்த எந்த மட்டையாளர்களில் இது மிக அதிகமானதகும். டொனால்ட் பிராட்மேன் பட்டியலில் 95.14 சராசரியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

11 ஜூலை 2018 அன்று நடைபெற்ற 2018 காசி அமானுல்லா கான் பிராந்திய ஒருநாள் போட்டியில் ஸ்பீன் கர் பிராந்தியத்திற்காக பட்டியல் அ போட்டியில் இவர் அறிமுகமானார்.[11] இவர் தொடரின் போது இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினார், மொத்தம் பதினாறு ஓட்டங்கள் எடுத்தார்.[12] ஏப்ரல் 2019 ஆம் ஆண்டில் , முதல் ஆட்டத்தில் 2019 அஹ்மத் ஷா அப்டாலி 4 நாள் போட்டியில் , இவர் 156 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருதினையும் பெற்றார். அந்தத் தொடரில் ஐந்து போட்டிகளில் விளையாடி 400 ஓட்டங்கள் எடுத்தார்.[13]

செப்டம்பர் 2019 ஆம் ஆண்டில் , ஸ்பீன் கர் பிராந்தியத்தின் சார்பாக 2019 காசி அமானுல்லா கான் பிராந்திய ஒருநாள் போட்டியில் விளையாடினார். இந்தத் தொடரின் முதல் போட்டியில், இவர் 103 ஓட்டங்கள் எடுத்தார்.[14] இவர் நான்கு ஆட்டப் பகுதிகளில் இரு நூறுகள் உட்பட 237 ஓட்டங்களை எடுத்தார். மேலும் எட்டு ஓட்டங்களை விட்டுக் கொடுத்து நான்கு இலக்குகளை கைப்பற்றினார்.[15]

நவம்பர் 2019 ஆம் ஆண்டில் , பங்களாதேஷில் நடைபெற்ற 2019 ஏ.சி.சி வளர்ந்து வரும் ஆசிய அணிகள் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணியில் இவர் இடம் பெற்றார்.[16]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஹிர்_சா&oldid=2868087" இருந்து மீள்விக்கப்பட்டது