பஹிரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஹிரா
இயக்கம்ஆதிக் ரவிச்சந்திரன்
தயாரிப்புஆர்.வி. பரதன்
கதைஆதிக் ரவிச்சந்திரன்
திரைக்கதைஆதிக் ரவிச்சந்திரன்
இசைகணேசன் சேகர்
நடிப்பு
ஒளிப்பதிவுசெல்வ குமார் எஸ்.கே
அபிநந்தன் ராமானுஜம்
படத்தொகுப்புரூபன்
கலையகம்பரதன் பிக்சர்ஸ்
விநியோகம்பரதன் பிக்சர்ஸ்
வெளியீடுமார்ச்சு 3, 2023 (2023-03-03)[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பஹிரா என்பது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இந்திய தமிழ் மொழி திகில் திரைப்படமாகும்.[2] இப்படத்தில் பிரபுதேவா, அமேரா தஸ்தர், ரம்யா நம்பீசன், சனனி, காயத்ரி, சோனியா அகர்வால், சஞ்சிதா செட்டி மற்றும் சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், சாய் குமார் மற்றும் நாசர் ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[3] இத்திரைப்படத்தை 3 மார்ச் 2023 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது [4]

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

கோவிட்-19 பெருந்தொற்று முன்பே படத்தின் தயாரிப்பு தொடங்கப்பட்டது. படத்தின் முதல் பார்வை விளம்பர தட்டி 14 பிப்ரவரி 2020 அன்று வெளியிடப்பட்டது [5] தொற்றுநோய் காரணமாக படத்தின் தயாரிப்பு நிறுத்தப்பட்டது, ஆனால் அரசாங்கம் அனுமதி வழங்கிய பிறகு படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.[6] படத்தின் ஒரு நிமிட நீளம் கொண்ட முன்னோட்டம் 19 பிப்ரவரி 2021 அன்று வெளியிடப்பட்டது. படத்தின் இரண்டு நிமிட நீளம் கொண்ட முன்னோட்டம் 8 அக்டோபர் 2021 அன்று வெளியிடப்பட்டது [7] படம் முதலில் 2022 இல் வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் அது ஒத்திவைக்கப்பட்டது, மேலும் 3 மார்ச் 2023 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று பிரபுதேவாவால் இன்ஸ்ட்டாகிராம் இல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது [8]

இசை[தொகு]

பஹிரா
ஒலிச்சுவடு
கணேசன் சேகர்
வெளியீடு28 பிப்ரவரி 2023
ஒலிப்பதிவு2020–2021
இசைப் பாணிஒலிச்சுவடு
நீளம்14:39
மொழிதமிழ்
இசைத் தயாரிப்பாளர்கணேசன் சேகர்

இப்படத்தின் இசையமைப்பாளர் கணேசன் சேகர்.[9][10]

 

எண் பாடல் பெயர் பாடல் எழுதியவர் பாடகர்(கள்) நீளம்
1 "சைக்கோ ராஜா" பா. விஜய் ஜி.வி. பிரகாஷ் குமார், மங்லி, சுசித்ரா பாலசுப்ரமணியன், பரத் நாராயண் 3:41
2 ''குச் குச்'' ஆதிக் ரவிச்சந்திரன், ரோகேஷ் தமன் எஸ், கணேசன் சேகர் 3:40
3 "காதலில் பஹிரா" கணேசன் சேகர் டெய்சி யென்சோன் 3:57
4 "உயிர் உயிராய்" பா. விஜய் கணேசன் சேகர், விவேக் 3:21

திரைப்பட வெளியீடு[தொகு]

திரையரங்க வெளியீடு[தொகு]

இத்திரைப்படம் 3 மார்ச் 2023 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

முகப்பு ஊடகம்[தொகு]

இத்திரைப்படத்தின் ஒளிபரப்பு உரிமையினை சன் தொலைக்காட்சிக்கும், படத்தின் இணைய வழி ஒளிபரப்பு உரிமையினை சன் நெக்ட்ஸ்க்கும் விற்கப்பட்டது.[11]

வெளி இணைப்புகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Upcoming Tamil Movie Release March 2023: Jayram Ravi's Agilan, Prabhu Deva's Bagheera and more". Zoom TV (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 1 March 2023.
  2. "Second trailer from Prabhudheva's Bagheera is here". The New Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 1 March 2023.
  3. "Prabhu Deva-Starrer Bagheera To Release On This Date; Film's Poster Out". News18 (in ஆங்கிலம்). 25 February 2023. பார்க்கப்பட்ட நாள் 1 March 2023.
  4. "Prabhu Deva-starrer movie 'Bagheera' to release on March 3, reveals new poster". The Economic Times. 25 February 2023.
  5. "Prabhudeva gets a wacky look in Adhik's new film". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2 March 2023.
  6. "Amyra Dastur joins the shoot of Prabhudeva's psycho-mystery". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2 March 2023.
  7. "'Bagheera' trailer: The new video from the Prabhu Deva starrer hypes fans for the film's release". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 1 March 2023.
  8. "Prrabhudeva on Instagram: "Watch out for 3rd March .."". Instagram (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 1 March 2023.
  9. "Prabhudeva's Bagheera releasing on March 3rd". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 1 March 2023.
  10. "இணையத்தை ஆக்கிரமிக்கும் 'பஹீரா' பட பாடல்". www.maalaimalar.com. 28 February 2023. பார்க்கப்பட்ட நாள் 1 March 2023.
  11. "Bagheera: THIS platform has bagged the digital rights of Prabhu Deva's film". OTTPlay (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2 March 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஹிரா&oldid=3709782" இலிருந்து மீள்விக்கப்பட்டது