பஸ்பாகே கோறளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பஸ்பாகே கோரளை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

7°3′18″N 80°32′9″E / 7.05500°N 80.53583°E / 7.05500; 80.53583

பஸ்பாகே கோரளை
மாகாணம்
 - மாவட்டம்
மத்திய மாகாணம்
 - கண்டி
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 602 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
மக்கள் தொகை
(2001)
56934

பஸ்பாகே கோரளை இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள 20 வட்டச் செயலாளர் பிரிவுகளில் ஒன்றாகும். இது நிர்வாகம் சார்ந்த பிரிவாகும். நாவலப்பிட்டி இப்பிரிவில் அமைந்துள்ள பெரிய நகரமாகும். நாவலப்பிட்டி நகரின் அரசியல் உள்ளூராட்சி நகரசபையாலும் நகரச் சூழவுள்ள கிராமிய மற்றும் தோட்டப்புறப் பகுதிகளின் அரசியல் உள்ளூராட்சி பஸ்பாகே கோரளை பிரதேச சபையலும் மேற்கொள்ளப்படுகிறது. நகரசபை மற்றும் பிரதேசபை என்பன கூட்டாக பஸ்பாகே கோரளை வட்டச் செயலாளர் பிரிவில் அமைந்துள்ளன.வட்டச் செயலாளர் பிரிவு மற்றும் பிரதேச சபை,நகரசபை என்பன ஒன்றை ஒன்று சார்ந்த சமாந்தர அரசியல், நிர்வாக அலகுகலாகும். இது மாவட்ட தலைநகரான கண்டி நகரத்தில் இருந்து தெற்குத் திசையில் 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

புவியியலும் காலநிலையும்[தொகு]

பஸ்பாகே கோரளை மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 602-1000 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 22-18 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 3750 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.

மக்கள்[தொகு]

இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேச செயளாலர் பிரிவு ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். 2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில மக்களின அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் பின்வருமாறு:

பிரிவு மொத்தம் சிங்களவர் இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழர் முஸ்லிம்கள் பரங்கியர் ஏனைய
மொத்தம் 56934 26030 2358 20210 7807 169 360
நகரம் 13533 4627 1889 2198 4512 111 144
கிராமம் 26907 20000 300 3177 3230 54 155
தோட்டப்புறம் 16494 1403 169 14835 65 4 30

2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில் மத அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் வருமாறு:

பிரிவு மொத்தம் பௌத்தர் இந்து இஸ்லாம் கத்தோலிக்கம் ஏனைய கிறிஸ்தவம் ஏனைய
மொத்தம் 56934 25550 19626 8158 2767 790 43
நகரம் 13533 4435 3524 4683 686 198 7
கிராமம் 26907 19740 2704 3380 825 234 24
தோட்டப்புறம் 16494 1375 13398 95 1256 358 12

கைத்தொழில்[தொகு]

இங்கு மாகாவலிகங்கையின் இருமருங்கிலும் நெற்பயிர்செய்கை மேற்கொள்ளப்படுகிறது. உயரம் கூடிய பகுதிகளில் மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. பெரிய தேயிலைப் பெருந்தோட்டங்களும் இங்கு அமைந்துள்ளன.

குறிப்புகள்[தொகு]


உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஸ்பாகே_கோறளை&oldid=212082" இருந்து மீள்விக்கப்பட்டது