பவுதவுமதா கேபே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பவுதவுமதா கேபே Fatoumata Kébé
பிறப்புமான்டிரியூல் சீய்ன்-செயிண்ட்-தெனிசு
படித்த கல்வி நிறுவனங்கள்பியேர், மேரி கியூரி பல்கலைக்கழகம்
அறியப்படுவதுவிண்வெளி சிதிலங்கள்

பவுதமதா கேபே (Fatoumata Kébé) (பிறப்பு: 1986) ஒரு பிரெஞ்சு வானியற்பியலாளரும் கல்வியாளரும் ஆவார். இவர் விண்வெளிச் சிதிலங்களில் புலமை வாய்ந்தவர் ஆவார். இவர் 2018 இல் உலகில் மிகவும்செல்வாக்குள்ள பிரெஞ்சு நபராக வேனிட்டி பேர் இதழால் பெயரிடப்பட்டுள்ளார்.

இளமையும் கல்வியும்[தொகு]

கேபே சீய்ந்செயிண்ட்-தெனிசில் உள்ள மாண்டிரியூலில் பிறந்து நாயிசி-லெ-செக் நகரில் வளர்ந்துள்ளார். இவர் சிறுமியாக இருந்தபோதில் இருந்தே விண்வெளிபால் ஈர்க்கப்பட்டுள்ளார்.[1] எட்டு அகவைலேயே இவர் தன் தந்தையின் வானியல் களஞ்சியத்தைக் கண்டுள்ளார்.[2] இவருக்குக் காரிக்கோள் மிகவும் பிடித்த கோளாகும்.[3]

இவர் பியேர், மேரி கியூரி பல்கலைக்கழகத்தில் பாய்ம இயக்கவியலில் தன் முதுவர் ஆய்வை மேற்கொண்டார்.[4] இவர் தன் கல்வியின்போதே பல வேலைகளில் பணியாற்றியுள்ளார்.[5] இவர் விண்வெளிச் சிதிலங்களில் தன் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார். இவர் அவற்றின் துண்டாக்கத்தையும் இயக்கத்தையும் கண்காணித்துள்ளார்.[1] இவர் பியேர், மேரி கியூரி பல்கலைக்கழகத்திலும் விண்வெளி இயக்கவியல் நிறுவனத்தின் வான்காணகத்திலும் எப்பிமெரிடெசு கணிப்பிலும் பணிபுரிந்தார்.[6]இவர் தோக்கியோ பல்கலைக்கழகத்தில் ஓராண்டுக்கு விண்வெளிப் பொறியியலில் ப்யிற்சி பெற்ர்ர். அப்போது இவர் சிறு விண்கலக் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ளார்.[7]

இவர் இணைந்த சூழல், எனும் திட்டத்தை தொடங்கினார். இதன்வழி இவர் மிகை வேளாண்மையால் சுற்றுச்சூழல் சீரழியாமல் பாதுகாக்க அஞ்சல்வழிமுறையைப் பின்பற்றி மகளிரை வெற்றிகாணச் செய்தார்.[7][8] இவர் மண்ணின் வறட்சிநிலையைக் கண்காணிக்கும் சூரியத் திறன் கொண்டியங்கும் உணரிகளை வடிவமைத்து அவைதரும் தகவல்களை அவ்வப்போது உழவர்களுக்கு குறுஞ்செய்திகளால் அறிவித்தார்.[7][9] இந்தத் திட்டம் பன்னாட்டு தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் இளமகளிருக்கான புதுமைபுனைவாளர் அறைகூவல் நல்கையைப் பெற்றது.[7]இவருக்கு நாகரிகங்களுக்கான ஐ.நா. கூட்டமைப்பு ஆய்வுநல்கை வழங்கியது. [7]

இவர் 2016 இல் தன் முனைவர் ப்ட்ட்த்தை, Etude de l’influence des incréments de vitesse impulsionnels sur les trajectoires de débris spatiaux, எனும் தலைப்பில் பெற்றார்.[10][11] இவர் நாசா உள்ளகப் பணியாளர் ஆவார். இவர் அப்போது பன்னாட்டு அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திலும் பன்னாட்டு விண்வெளிப் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றினார்.[12]

வாழ்க்கைப்பணி[தொகு]

இன்னும் மறைக்கவேண்டாம் எனும் பன்னாட்டு வருகைதரு தலைமைத் திட்டத்தின் 21 ஆம் நூற்றாண்டு பாக்சு நிகழ்ச்சியில் 2017 இல் கேபே

இவர் 2015 இல் விண்வெளிசார் மங்கையர், மகளிர் கண்காட்சியில் கலந்து கொண்டார்.[13] இந்தக் கண்காட்சி பாரீசில் Musée des Arts et Métiers அரங்கில் நடந்தது.[14] இவர் இருமுறை Le ciel est un menteur, L'Astronomie, ma passion எனும் தலைப்புகளில் உரையாற்றியுள்ளார்.[15][16]இவர் பெண் வான், விண்வெளி வட்டமேசை மாநாட்டுக்கு ஐரோப்பிய விண்வெளி முகமையால் அழைக்கப்பட்டார்.[17]இவர் 2017 ஆம் ஆண்டின் இப்போதே மாற்றுக எனும் பன்னாட்டு மாநாட்டில் முதன்மைச் சிறப்புரையை ஆற்றினார்.[18] இவர் 2017 அக்தோபரில் ஐக்கிய அமெரிக்க அரசு துறை பன்னாட்டு வருகைதரு தலைமைத் திட்டத்துக்குத் தேர்வானர்.[19]

> இவர் 2017 அக்தோபரில் ஐக்கிய அமெரிக்க அரசு துறை பன்னாட்டு வருகைதரு தலைமைத் திட்டத்துக்குத் தேர்வானர்.[20]இவர் 2018 மார்ச்சில் நடந்த கிளேமர் காணொலி பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்றார்.[21] இவர் e பெண் அறிவியலாளர்கலும் ஆளுமைகளும். அடங்கிய கிரேசியா திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.[22] இவர் 2018 இல் உலகில் மிகவும்செல்வாக்குள்ள பிரெஞ்சு நபராக வேனிட்டி பேர் இதழால் பெயரிடப்பட்டுள்ளார்.[23]

எப்பிமெரிடெசு[தொகு]

ஆராய்ச்சியில் ஈடுபடுவதோடு மட்டுமின்றி, கேபே வானியல், இயற்பியல் அறிவை அணுகிப் பெறும் வழிவகைகளை மேம்படுத்தும் பரப்புரைகளையும் மேற்கொள்கிறார்.[4] இவர் 2017 இல் பிரான்சு இண்டெர் நிகழ்ச்சியில் தோன்றினார்.[24] கேபே வாய்ப்பில்லாத பின்னணியில் இருந்து படிக்கும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களூக்கு வானியலைக் கற்பிக்கும் வகுப்புகளுக்கேற்ற எப்பிமெரிடெசு எனும் திட்டத்தை வகுத்துள்ளார்.[7][24] இவர் 12 முதல் 15 அகவை மாணவருக்குக் கல்வி கற்பிக்கிறார்.[2] இவர் சீய்ன்-செயிண்ட்-தெனிசு, போபிகினி, வில்லிதனேயூசு ஆகிய கல்லூரிகளுடன் இணைந்து பணிபுரிகிறார் .[25] இவர் 2018 இல் பமாக்கோவில் எப்பிமெரிடெசு நிகழ்ச்சியைத் தொடங்கினார்.[12] இந்தத் திட்டத்துக்கு இவர் பிரெஞ்சு அறக்கட்டளையில் இருந்து நிதிநல்கை பெறுகிறார்.[12]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "Space Girls Space Women - Fatoumata Kebe". http://www.spacewomen.org/space-women/fatoumata-kebe/. 
 2. 2.0 2.1 "Fatoumata Kebe, gardienne de l'espace et passeuse de savoir" (in fr-FR). Le Huffington Post. 2015-07-03. https://www.huffingtonpost.fr/2015/07/03/fatoumata-kebe-gardienne-de-lespace-astronomie_n_7703008.html. 
 3. "Fatoumata Kebe, de la cité aux étoiles" (in fr). LExpress.fr. 2015-10-16 இம் மூலத்தில் இருந்து 2018-11-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181124220313/https://www.lexpress.fr/actualite/societe/de-la-cite-aux-etoiles_1726515.html. 
 4. 4.0 4.1 "Fatoumata KEBE - Annuaire des Experts du Club XXI Siècle" (in fr-FR). Club XXI siècle இம் மூலத்தில் இருந்து 2021-04-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210415164346/http://club21siecle.org/expert/fatoumata-kebe/. 
 5. "L'astronomie : la vocation de Fatoumata Kebe" (in fr-FR). Franceinfo. 2014-06-26. https://www.francetvinfo.fr/replay-radio/itineraires/l-astronomie-la-vocation-de-fatoumata-kebe_1763669.html. 
 6. Magazine, Cheek (2015-06-30). "Fatoumata Kebe: cette scientifique veut éviter qu'un satellite s'écrase dans votre salon" (in fr-FR). ChEEk Magazine இம் மூலத்தில் இருந்து 2018-11-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181124224751/http://cheekmagazine.fr/societe/fatoumata-kebe-cette-scientifique-veut-eviter-quun-satellite-secrase-dans-votre-salon/. 
 7. 7.0 7.1 7.2 7.3 7.4 7.5 "Fatoumata Kebe | UNAOC Fellowship". UNAOC Fellowship. https://fellowship.unaoc.org/fellows/fatoumata-kebe/. 
 8. "Chronique Agriculture et Pêche - Fatoumata Kébé, inventeur d'un système d'arrosage innovant" (in fr-FR). RFI. 2015-11-21. http://www.rfi.fr/emission/20151121-fatoumata-kebe-inventeur-systeme-arrosage-innovant-redif-18042015. 
 9. "Meet the Black female scientist breaking barriers in France and protecting our sky | AFROPUNK". AFROPUNK. 2017-03-30. http://afropunk.com/2017/03/meet-the-black-female-scientist-breaking-barriers-in-france-and-protecting-our-sky/. 
 10. "IMCCE - Research - Teams - PEGASE". https://www.imcce.fr/recherche/equipes/pegase/. 
 11. Fatoumata, Kebe (2016-12-06). "Etude de l'influence des incréments de vitesse impulsionnels sur les trajectoires de débris spatiaux". http://www.theses.fr/. http://www.theses.fr/2016PA066669. 
 12. 12.0 12.1 12.2 paulette-magazine.com. "FATOUMATA KEBE : VISER LA LUNE" (in fr-FR) இம் மூலத்தில் இருந்து 2018-11-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181124220200/http://www.paulette-magazine.com/fr/article/fatoumata-kebe-viser-la-lune/8512. 
 13. "Space Girls Space Women". http://www.spacewomen.org/. 
 14. "WHO ARE YOU...? Fatoumata Kebe, the future astronomer who wants to clean up space". Clique.tv. 2015-06-26. http://www.clique.tv/en/es-fatoumata-kebe-future-astronome-veut-nettoyer-lespace/. 
 15. TEDx Talks (2015-06-12), Le ciel est un menteur | Fatoumata Kebe | TEDxChampsElyseesWomen, retrieved 2018-11-24
 16. TEDx Talks (2016-11-29), L'Astronomie, ma passion | Fatoumata Kébé | TEDxAbidjan, retrieved 2018-11-24
 17. esa. "Fatoumata Kebe at Women in Aerospace Europe Round Table". https://m.esa.int/spaceinimages/Images/2017/06/Fatoumata_Kebe_at_Women_in_Aerospace_Europe_Round_Table. 
 18. "Fatoumata KEBE – ChangeNOW – International summit for change". 2017-01-02. http://www.changenow-summit.com/project-view/fatoumata-kebe/. 
 19. "Hidden No More: Empowering International Women Leaders in STEM | Bureau of Educational and Cultural Affairs". https://eca.state.gov/video/hidden-no-more-empowering-international-women-leaders-stem. 
 20. "Hidden No More: Empowering International Women Leaders in STEM | Bureau of Educational and Cultural Affairs". https://eca.state.gov/video/hidden-no-more-empowering-international-women-leaders-stem. 
 21. Glamour Paris (2018-03-29), Fatoumata Kebe : la femme de ménage de l'espace | GLAMOUR, retrieved 2018-11-24
 22. Grazia.fr (2018-06-17). "Fatoumata Kebe, 32 ans, docteure en astronomie - Femmes scientifiques, des figures dans l'ombre" (in fr-FR). Grazia.fr இம் மூலத்தில் இருந்து 2018-11-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181124220305/https://www.grazia.fr/news-et-societe/societe/femmes-scientifiques-des-figures-dans-l-ombre-891397/(page)/2. 
 23. Fair, Vanity. "Les 50 Français les plus influents du monde en 2018" (in fr). Vanity Fair. https://www.vanityfair.fr/pouvoir/medias/story/classement-vanity-fair-les-50-francais-les-plus-influents-du-monde-en-2018/4521. 
 24. 24.0 24.1 "Fatoumata Kebe, docteure en astronomie" (in fr-FR). France Inter. https://www.franceinter.fr/emissions/les-savantes/les-savantes-12-aout-2017. 
 25. "Noisy-le-Sec : une docteure qui a la tête dans les étoiles" (in fr). leparisien.fr. 2017-01-11. http://www.leparisien.fr/noisy-le-sec-93130/noisy-le-sec-une-docteure-qui-a-la-tete-dans-les-etoiles-11-01-2017-6554748.php. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவுதவுமதா_கேபே&oldid=3625112" இருந்து மீள்விக்கப்பட்டது