பவுண்டரீகபுரம் சோமநாதசுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பவுண்டரீகபுரம் சோமநாதசுவாமி கோயில் கும்பகோணம் காரைக்கால் சாலையில் ஆண்டலாம்பேட்டை என்ற ஊரிலிருந்து தெற்கே 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. தற்போது பவுண்டரீகபுரம் என்றழைக்கப்பட்டாலும் இவ்வூருக்கு ஏனாதிமங்கலம் என்ற பெயரும் உண்டு.

அமைப்பு[தொகு]

கிழக்கு நோக்கிய இக்கோயில் கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம், ஆகியவற்றுடன் விளங்குகிறது. கருவறையில் இறைவன் லிங்கத்திருமேனியாகக் காணப்படுகிறார். மகாமண்டபத்தை ஒட்டி தெற்கு நோக்கிய சன்னதியில் அம்மன் சன்னதி உள்ளது.[1]

காலம்[தொகு]

இக்கோயில் பிற்கால சோழர் காலத்தை சேர்ந்ததாக விளங்குகிறது. முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தைச் சார்ந்ததாகக் கொள்ளலாம். சுங்கம் தவிர்த்த சோழன், சோழன் திரிபுவனசக்ரவர்த்தி என்றெல்லாம் சிறப்புப்பெயர் பெற்றவன் குலோத்துங்கன்.[1]

சிற்பங்கள்[தொகு]

கோயிலின் நுழைவுவாயிலின் வலப்புறம் அதிகார நந்தியும், இடப்புறம் சிவபெருமான் அருச்சுனனுக்குப் பாசுபதம் வழங்கும் கதையை நினைவூட்டும் வகையில் கிராதார்ஜுன வடிவையும் தேவக்கோட்டத்தில் காணலாம். கங்கைகொண்ட சோழபுரம் போன்று சண்டேசுவர அனுக்கிரகமூர்த்தி சிற்பமும் ஒரு தேவக்கோட்டத்தில் காணப்படுகிறது. மேலும் கோட்டத்தில் காணப்படும் சிற்பங்களில் பல உடைந்தும் காணப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 கி.ஸ்ரீதரன், பவுண்டரீகபுரம் சோழர் காலத் திருக்கோயில், தினமணி, 30.1.2015