பவினா படேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பவினா படேல்
தனிநபர் தகவல்
பிறப்புமெக்சனா, குசராத்து, இந்தியா
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)இணை மேசைப்பந்தாட்டம் C4

பவினா ஹஸ்முக்பாய் படேல் இந்திய குசராத்துமாநில மெக்சனா நகரைச் சேர்ந்த இணை மேசைப் பந்தாட்ட விளையாட்டு வீரர்.[1] இவர் தற்போது நடைபெறும் 2020 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று பதக்கம் பெறும் வாய்ப்பினைக் கொண்டுள்ளார்.

வாழ்க்கைப் பயணம்[தொகு]

தனது சக்கர நாற்காலியிலிருந்து மேசைப் பந்தாட்டம் விளையாடும் படேல், பல தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பல தங்க வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்.[2] 2011இல் தாய்லாந்தில் நடந்த உலகளாவிய மேசைப்பந்தாட்ட போட்டியில் தனிநபர் வகையில் வெள்ளிப் பதக்கம் பெற்று உலகத் தரவரிசையில் இரண்டாமிடம் வென்றார். அக்டோபர் 2013இல் பெய்ஜிங்கில் நடந்த ஆசிய இணை மேசைப் பந்தாட்ட போட்டிகளில் நான்காம் பிரிவில் மகளிர் ஒற்றையர் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.[3]

2017 ஆகத்து 23 முதல் 31 வரை பெய்ஜிங்கில் நடந்த ஆசிய மேசைப்பந்தாட்ட போட்டிகளில் வெங்கலப் பதக்கம் வென்றார். கொரிய நாட்டு வீராங்கனை காங்குடன் மகளிர் ஒற்றையர் நான்காம் பிரிவு ஆட்டத்தில் 3-0 என்ற கணக்கில் வெற்றி கண்டு இந்த வெங்கலப் பதக்கத்தை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்தார்.[4][5]

தற்போது நடைபெறும் 2020 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுக்களில் மகளிர் ஒற்றையர் நான்காம் பிரிவு ஆட்டத்தில் ரியோ இணை ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவரும் உலக தரவரிசையில் இரண்டாவது நிலையில் இருப்பவருமான போரிஸ்லாவா ராங்கோவிச்சை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார். [6]இந்த அரையிறுதியில் சீனாவின் ஷாங் மியோவை தோற்கடித்து ஆகத்து 29 அன்று நிகழும் இறுதிச் சுற்றில் சீனாவின் சௌ யிங்கிடம் 3-0 என்ற கணக்கில் தோல்வியுற்று வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.[7]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Shastri, Parth; Cherian, Sabu (3 July 2021). "Girl power from Gujarat in Tokyo-bound India contingent". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-24.
  2. Hindustan Times-Physically challenged table tennis players - Bhavina Hasmukh Patel பரணிடப்பட்டது அக்டோபர் 31, 2013 at the வந்தவழி இயந்திரம்
  3. Bhavina winsSilver Medal in Asia Wheelchair Para Table Tennis championship பரணிடப்பட்டது அக்டோபர் 29, 2013 at the வந்தவழி இயந்திரம்
  4. "India won Bronze medal in Para Table Tennis Championship 2017". enabled.in (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-09-01. பார்க்கப்பட்ட நாள் 2019-10-19.
  5. "Gujarat's super six women make it to Olympics". Ahmedabad Mirror (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-24.
  6. "Results". International Paralympic Committee (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-27.
  7. "பாராலிம்பிக் வெற்றி நாயகி பவினாபென்னுக்கு ரூ.3 கோடி ஊக்கத் தொகை: குஜராத் அரசு அறிவிப்பு". தி இந்து தமிழ். ஆகத்து 29,2021. https://www.hindutamil.in/news/india/710378-gujarat-to-give-3-crore-to-paralympic-silver-medallist-bhavina-patel.html. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பவினா_படேல்&oldid=3842345" இலிருந்து மீள்விக்கப்பட்டது