பவித்ரா வெங்கடேஷ்
தனிநபர் தகவல் | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழு பெயர் | பவித்ரா வெங்கடேஷ் | |||||||||||||
தேசியம் | ![]() | |||||||||||||
பிறப்பு | 8 திசம்பர் 2001 தமிழ்நாடு, இந்தியா | |||||||||||||
விளையாட்டு | ||||||||||||||
நாடு | India | |||||||||||||
விளையாட்டு | தடகளம் | |||||||||||||
நிகழ்வு(கள்) | தடியூன்றித் தாண்டுதல் | |||||||||||||
சாதனைகளும் விருதுகளும் | ||||||||||||||
தனிப்பட்ட சாதனை(கள்) | 4.10 m (2022) | |||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
பவித்ரா வெங்கடேஷ் (Pavithra Vengatesh:பிறப்பு; டிசம்பர் 8,2001) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இந்தியத் தடகள வீராங்கனை ஆவார்.[1] இவர் தடியூன்றித் தாண்டுதல் போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். சீனாவின் காங்சூவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணியில் இவர் ஒரு பகுதியாக இருந்தார். பவித்ரா தனிப்பட்ட முறையில் 4.10மீ உயரம் தாண்டியுள்ளார்.[2] 4.15மீ என்ற தேசிய சாதனையை 2014 இல் வா. சு. சுரேகா பெற்றுள்ளார்.[3]
இளமை
[தொகு]பவித்ரா தமிழ்நாட்டின் சேலத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை தினசரி கூலித் தொழிலாளியாகவும், இவரது தாயார் வீட்டு வேலைக்காரராகவும் உள்ளனர். ஒரு சகோதரி மற்றும் ஒரு சகோதரர் என இவருக்கு இரண்டு உடன்பிறப்புகள் உள்ளனர். இவர் சேலம் சாரதா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார்.[4] தற்போது சேலம், ஏ. வி. எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை (ஆங்கிலம்) இறுதி ஆண்டு படித்து வருகிறார். கடந்த பத்து ஆண்டுகளாக இவர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு பயிற்சியாளர் கே இளம்பரிதியின் கீழ் பயிற்சி பெற்று வருகிறார்.[5] இவர் தனது 9 வயதில் தடகளத்தில் 400 மீட்டர் ஓட்டத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[5] பின்னர் 2013 ஆம் ஆண்டில், இவர் தடியூன்றித் தாண்டுதலுக்கு மாற முடிவு செய்தார். ஆகஸ்ட் 2022 இல், விளையாட்டுக்கான ஒதுக்கீட்டில் இரயில்வேயில் ஒரு வேலையைப் பெற்றார்.
பதக்கங்கள்
[தொகு]- 2018: கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம்.
- 2019: கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம்.
- 2021: செப்டம்பரில், தெலங்காணா மாநிலம், வாரங்கலில் உள்ள ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற 60 வது தேசிய தடகள போட்டியில் பவித்ரா தங்கம் வென்றார்.[6][7]
- 2021:தெற்கு மண்டல இளையோர் தடகள போட்டியில் தங்கம் வென்றார்.[6]
- 2022: பெங்களூரில் நடைபெற்ற கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டின் பெரியார் பல்கலைக்கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். விளையாட்டுகளின் முதல் நாளில் போல் வால்ட் நிகழ்வில் 4.01மீ இவர் தாண்டி 4 மீட்டர் தூரத்தை கடந்த ஐந்தாவது பெண் தடகள வீரர் ஆனார்.[5][8]
- 2022:ஒடிசாவின் புவனேசுவரத்தில் நடைபெற்ற 81 வது அகில இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிர் தடகளப் போட்டிகளில் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கிடையேயான 4 மீ உயரத்தைத் தாண்டினார்.[9]
- 2023:சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமானார். கசகஸ்தானின் அஸ்தானாவில் நடந்த ஆசிய உள்ளரங்கப் போட்டிகளில் 4 மீட்டர் தூரத்தை தாண்டி வெள்ளி வென்றார்.[10][11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Singh, Navneet (2023-09-22). ""Asian Games will be a good opportunity for me to showcase that Indian pole vaulters have potential" - Pavithra Venkatesh looks forward to plying her trade at Asian Games 2023". www.sportskeeda.com (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-09-27.
- ↑ Mazumdar, Riya (2023-09-27). "Pavithra Venkatesh Biography: Personal Life, Career, Age, Height, Facts & Networth -". Sportzcraazy (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-09-27.
- ↑ "TN girl Pavithra Venkatesh wins pole vault gold". The Times of India. 2021-09-15. https://timesofindia.indiatimes.com/sports/more-sports/athletics/tn-girl-pavithra-venkatesh-wins-pole-vault-gold/articleshow/86238160.cms.
- ↑ ANI (2022-05-01). "For perfection, Pole-vaulter Pavithra Venkatesh sought pictures". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-09-27.
- ↑ 5.0 5.1 5.2 Manoj, S. S. (2022-04-30). "Trained by Mariyappan Thangavelu's coach, Pavithra sets new record in pole vault". thebridge.in (in ஆங்கிலம்). Retrieved 2023-09-27.
- ↑ 6.0 6.1 "TN girl Pavithra Venkatesh wins pole vault gold". https://timesofindia.indiatimes.com/sports/more-sports/athletics/tn-girl-pavithra-venkatesh-wins-pole-vault-gold/articleshow/86238160.cms.
- ↑ migrator (2021-09-16). "Tamil Nadu girl Pavithra Venkatesh wins pole vault gold". www.dtnext.in (in ஆங்கிலம்). Retrieved 2023-09-27.
- ↑ Sudarshan, N. (2022-04-30). "Khelo India University Games: Pavithra sets pole-vault record; B'lore City University enters hockey finals". Sportstar (in ஆங்கிலம்). Retrieved 2023-09-27.
- ↑ Agencies (2022-02-23). "Pavithra sets pole vault meet record". The Shillong Times (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-09-27.
- ↑ PTI. "India names 25-member team for Asian Indoor Athletics Championships". Deccan Herald (in ஆங்கிலம்). Retrieved 2023-09-27.
- ↑ "Asian Indoor Athletics Championships 2023: Indian Contingent Results". Sportslumo (in ஆங்கிலம்). Retrieved 2023-09-27.