பவித்ரா ஜனனி
பவித்ரா ஜனனி | |
|---|---|
| பிறப்பு | பவித்ரா ஜனனி 30 சனவரி 1995 சென்னை |
| தேசியம் | இந்தியா |
| பணி |
|
| செயற்பாட்டுக் காலம் | 2014–முதல் |
| அறியப்படுவது | ஈரமான ரோஜாவே தென்றல் வந்து என்னைத் தொடும் |
பவித்ரா ஜனனி (Pavithra Janani) என்பவர் ஓர் இந்திய நடிகை ஆவார். இவர் ஜனவரி 30, 1995 அன்று இந்தியாவின் சென்னையில் பிறந்தார். இவர் முக்கியமாகத் தமிழ் தொலைக்காட்சியில் பணிபுரிகிறார். விஜய் தொலைக்காட்சியின் ஈரமான ரோஜாவே என்ற தொடரில் மலர் விழி வெற்றிவேல் என்ற பாத்திரத்திற்காக பவித்ரா மிகவும் பிரபலமானவர்.[1] 2024-ஆம் ஆண்டில், இவர் பிக் பாஸ் 8 என்ற மெய்மைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இங்கு இவர் 3வது இடத்தினைப் பிடித்தார்.[2][3]
சரவணன் மீனாட்சி, ஆபிசு, ராஜா ராணி, மகாபாரதம், பகல் நிலவு போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்ததற்காகவும் பவித்ரா அறியப்படுகிறார் .
நடிப்பு
[தொகு]பவித்ரா தனது நடிப்பு வாழ்க்கையை 2013-ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியின் புராண நாடகத் தொடரான மகாபாரதம் மூலம் தொடங்கினார். இதில் இவர் ராணி காந்தாரி வேடத்தில் நடித்தார். பின்னர் இவர் விஜய் தொலைக்காட்சியின் பணியிட நகைச்சுவை தொலைக்காட்சித் தொடரான ஆபிசு மற்றும் குடும்ப நாடகமான சரவணன் மீனாட்சி ஆகியவற்றில் துணை வேடங்களில் நடித்தார். இதில் ஜனனி மற்றும் துளசி என இரட்டை வேடங்களில் நடித்தார்.[4]
2018ஆம் ஆண்டில், விஜய் தொலைக்காட்சியின் ஈரமான ரோஜாவே திரைப்படத்தில் திரவியம் ராஜகுமாரனுக்கு இணையாக மலர்விழி வெற்றிவேல் எனும் பாத்திரத்தில் நடித்தார். 2021 முதல் 2023 வரை, இவர் விஜய் தொலைக்காட்சியின் தென்றல் வந்து என்னைத் தொடும் படத்தில் வினோத் பாபுவுக்கு ஜோடியாக அபிநயா எனும் வேடத்தில் நடித்தார். இதில் இவரது நடிப்பு பரவலான பாராட்டப்பட்டது.[5][6]
2024-ஆம் ஆண்டில், பவித்ரா பிக் பாஸ் 8 என்ற மெய்மைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் இவர் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.[7][8]
தொலைக்காட்சி
[தொகு]| ஆண்டு | தலைப்பு | கதாபாத்திரம் | குறிப்பு | மேற். |
|---|---|---|---|---|
| 2013 – 2016 | மகாபாரதம் | Queen காந்தாரி | ||
| 2014 – 2015 | ஆபிசு | வனிதா | ||
| 2014-2017 | கல்யாணம் முதல் காதல் வரை | காவ்யா கார்த்திக் | ||
| 2015 | நிழல் | பூஜை | [9] | |
| 2015-2016 | சரவணன் மீனாட்சி | ஜனனி/துளசி | ||
| 2015–2017 | லட்சுமி வந்தாச்சு | காயத்ரி | ||
| 2015–2017 | மெல்லத் திறந்தது கதவு | இந்து | ||
| 2015–2018 | குலதெய்வம் | சுருதி | ||
| 2016 – 2018 | சரவணன் மீனாட்சி 3 | ராஜேஸ்வரி வேலுச்சாமி | ||
| 2016–2019 | பகல் நிலவு | கார்த்திகா | ||
| 2017–2018 | ராஜா ராணி | திவ்யா | [10] | |
| 2018–2021 | ஈரமான ரோஜாவே | மலர்விழி வெற்றிவேல் | முன்னணிப் பெண் | [11] |
| 2021–2023 | தென்றல் வந்து என்னைத் தொடும் | ஐஏஎஸ் அபிநயா | முன்னணிப் பெண் | [12] |
| 2022 | ஓ சொல்றியா ஓ ஓம் சொல்றியா | போட்டியாளர் | ||
| 2024–2025 | பிக் பாஸ் 8 | போட்டியாளர் | 3ஆவது இடம் | [13] |
மேலும் காண்க
[தொகு]- இந்திய தொலைக்காட்சி நடிகைகளின் பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Eeramana Rojaave to go off-air soon; Pavithra Janani thanks everyone for the love - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2025-01-11.
- ↑ a, manimegalai (2024-10-06). "மினி பிக்பாஸ் வீட்டுல் இருந்து தான் வருகிறேன்! பாட்டோடு என்ட்ரி கொடுத்த பவித்ரா ஜனனி!". Asianet News. Retrieved 2024-10-06.
- ↑ "Bigg Boss Tamil 8: Eeramana Rojave actress Pavithra Janani steps into the spotlight". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2025-01-11.
- ↑ "5 Tamil soap opera actresses who enjoy massive fan following". zoomtventertainment.com (in ஆங்கிலம்). Retrieved 2025-01-11.
- ↑ "Eeramaana Rojaave crosses 400 episodes; actors Pavithra Janani and Dhiraviam Rajakumaran thank fans". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2025-01-11.
- ↑ "Thendral Vanthu Ennai Thodum to premiere on August 16". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2025-01-18.
- ↑ "Bigg Boss Tamil 8: From strong contender to finalist – Pavithra Janani's remarkable journey". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2025-01-19.
- ↑ "Pavithra Janani: I have learnt people, lessons, and gained an experience of a whole lifetime". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2025-01-23.
- ↑ "Nizhal, a serial on human values, hits a 100". timesofindia.indiatimes.com.
- ↑ "ராஜா ராணி தொடரில் இருந்து விலகிய பவித்ரா". Dinamalar. 21 May 2018.
- ↑ "Actress Pavithra Debuting Main Role In Eeramana Rojave".
- ↑ "Thendral Vanthu Ennai Thodum Completes 150 Episodes; Cast, Crew Celebrate". News 18 (in ஆங்கிலம்). Retrieved 2025-01-11.
- ↑ "Meet 5 finalists of Bigg Boss Tamil 8". India Today (in ஆங்கிலம்). Retrieved 2025-01-18.