பவானி தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பவானிதேவி
தனித் தகவல்கள்
தேசியம்இந்தியர்
பிறந்த நாள்அக்டோபர் 18, 1990 (1990-10-18) (அகவை 32)
வசிப்பிடம்தமிழ்நாடு, இந்தியா
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுவாள்வீச்சு fencing
சாதனைகளும் பட்டங்களும்
மிக உயர்ந்த உலகத் தர வரிசைவாள்வீச்சு போட்டியில் தங்கம்
 
பதக்கங்கள்
பெண்கள் வாள்வீச்சு
நாடு  இந்தியா
தங்கப் பதக்கம் – முதலிடம் தங்கம் {{{2}}}

பவானி தேவி இந்தியாவைச் சேர்ந்த வாள்வீச்சு வீரர் ஆவார்.

வாள் வீச்சு போட்டியில் இந்தியா வென்றது கிடையாது. வாள் வீச்சு போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் தமிழக வீராங்கனை பவானிதேவி.

சாதனை[தொகு]

சர்வதேச வாள்வீச்சு போட்டியான சாட்டிலைட் உலக கோப்பை வாள்வீச்சு போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த பவானிதேவி சேபர் பங்கேற்றார்.

அடுத்தடுத்த போட்டிகளில் வென்று பவானிதேவி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதிப்போட்டியில் ஜெர்மனி வீராங்கனை சாரா ஜேன் ஹாம்சனுடன் மோதினார்.

அதில் 15க்கு 13 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதுவரை சர்வதேச வாள்வீச்சு போட்டியில் இந்தியா சார்பில் தங்கம் வென்றதில்லை. இந்தநிலையில் தமிழகத்தை சேர்ந்த பவானிதேவி முதல்முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இவர் வெள்ளிப்பதக்கம் வென்று இருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

http://www.dailythanthi.com/Sports/OtherSports/2017/05/29014206/International-folk-competitionTN-Sportswoman-PavaniteviGold.vpf http://makkalkural.tv/videos/bhavani-devi-wins-gold-in-fencing/[தொடர்பிழந்த இணைப்பு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பவானி_தேவி&oldid=3654098" இருந்து மீள்விக்கப்பட்டது