பவானி ஜமக்காளம்
பவானி ஜமக்காளம், தமிழகத்திலுள்ள ஈரோடு மாவட்டத்தின் ஒரு பகுதியான, பவானியில் தயாரிக்கப்படும் போர்வைகளையும், விரிப்புகளையும் குறிக்கின்றது.[1][2] இது புவியியல் சார்ந்த குறியீடாக 2005-06 ஆண்டுகளில் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது.[3]
வரலாறு
[தொகு]19-ம் நூற்றாண்டின் இறுதியில் பிரித்தானிய ஆடைகளுக்குப் போட்டியில் இந்திய நெசவாளர்கள் புதுரக ஆடைகளை உருவாக்க தொடங்கினர். [2] பவானியைச் சேர்ந்த ஜங்கன்மார்கள் என்ற ஒரு பிரிவினர் பலநிற சொரசொரப்பான நூல்களைக் கொண்டு புது வகையான போர்வையை ஜமக்காளம் என்ற பெயரில் உருவாக்கினர்.[4] இவ்வகையான தயாரிப்பு பிரபலமானதையடுத்து பிற ஆடைகள், சேலைகள் நெய்யும் நெசவாளர்களையும் கவர்ந்தது, அவர்களும் ஜமக்காளம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.[4]
வகைகள்
[தொகு]இருவேறு வகையான ஜமக்காளங்களை பவானியில் தயாரிக்கின்றனர்.[5] முதல் வகை சொரசொரப்பான பலநிற பருத்தி நூல்களைக் கொண்ட விரிப்புகள்.[5] சொரசொரப்பான நூல்களால் சரியான முறையில் இவ்வகையில் வடிவமைவுகளை நெய்ய இயலாது.[5] எனவே இரண்டாவது வகையான ஜமக்காளங்களை அறிமுகம் செய்தனர், அதைத் தயாரிக்க செயற்கை பட்டு நூல்களைப் பயன்படுத்தினர்.[5] ஜமக்காளங்களைத் தோள்பை தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர்.[6]
சமூகம்
[தொகு]பொதுவாக, ஜமக்காளங்கள் நெசவாளர்களின் வீடுகளில் நெய்யப்படும்.[7] ஒரு சில இடங்களில் தறிப்பட்டறைகளில் இது நெய்யப்படும்.[8] கூலிக்காக பலர் தறிப்பட்டறைகளில் நெய்வர். ஜமக்காளத்திற்கான நூல்கள் ஈரோடு, கோயம்புத்தூர், சேலம், கரூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து பெறப்படும்.[9] சுமார் 1000 பெண்கள் உட்பட 1500 நபர்கள் ஜமக்காளம் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.[10]
நெசவுத் தறி
[தொகு]ஜமக்காளம் நெய்வதற்கு குழித்தறி என்னும் ஓர் வகையான கைத்தறி பயன்படுத்தப்படுகிறது.[10] இது மரத்தினால் செய்யப்பட்டு இருக்கும்; நூற்பாவு கிடைநிலையில் அமைந்து இருக்கும்.[10] நெசவாளர் குழியில் அமர்ந்திருப்பர்.[10] இரு மிதிகளையும், குஞ்சத்தையும் கொண்டிருக்கும்.[10]
ஏற்றுமதி
[தொகு]பவானியில் தயாரிக்கப்படும் ஜமக்காளம், சுவீடன், ஜெர்மனி, இத்தாலி, ஐக்கிய இராச்சியம், அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.[11] 1993-ம் ஆண்டு, சுவீடனின் ஐ.கே.இ.ஏ, அதனுடைய கிளைகளில் விற்பனை செய்வதற்காக, பவானி ஜமக்காளங்களை கொள்முதல் செய்ய ஆரம்பித்தது.[11]
போட்டி
[தொகு]2000-ம் முதல், குழித்தறியில் நெய்யப்பட்ட ஜமக்காளங்கள், விசைத்தறிகளிடம் போட்டி போட முடியாமல் போனது.[12] தமிழ்நாடு அரசு, குழித்தறி நெசவாளர்களுக்கு மானியம் வழங்கியும், விசைத்தறி பயன்படுத்துவதை குறைக்க சட்ட மாறுதல் செய்தும் உதவியது.[12] தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் வாயிலாக தமிழ்நாடு அரசு பவானி ஜமக்காளத்தை விற்பனை செய்கிறது. மகாராட்டிரத்தைச் சேர்ந்த சோலாப்பூர் போர்வை, சீனா, வங்காளதேசம் மற்றும் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விலை குறைந்த போர்வைகளாலும் பவானி ஜமக்காளத்தின் கிராக்கி குறைந்துவிட்டது.[12]
புவியியல் சார்ந்த குறியீடு
[தொகு]2005-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு, பவானி ஜமக்காளத்தை புவியியல் சார்ந்த குறியீடாக அறிவிக்க விண்ணப்பித்தது.[13] அதனை ஏற்றுக்கொண்ட இந்திய அரசு 2005-06 ஆண்டுகளில் புவியியல் சார்ந்த குறியீடாக அங்கீகரித்தது.[3]
குறிப்புகளும் மேற்கோள்களும்
[தொகு]- ↑ Parry, Breman, Kapadia. The worlds of Indian industrial labour. p. 380.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ 2.0 2.1 de Neve. The Everyday Politics of Labour. p. 42.
- ↑ 3.0 3.1 "Geographical indications of India". Government of India. Archived from the original on 26 ஆகஸ்ட் 2013. பார்க்கப்பட்ட நாள் 28 June 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 4.0 4.1 de Neve. The Everyday Politics of Labour. p. 43.
- ↑ 5.0 5.1 5.2 5.3 de Neve. The Everyday Politics of Labour. p. 87.
- ↑ "When passion met fashion". The Hindu. 13 April 2014. http://www.thehindu.com/features/metroplus/events/when-fashion-met-passion/article5909543.ece.
- ↑ de Neve. The Everyday Politics of Labour. p. 167.
- ↑ de Neve. The Everyday Politics of Labour. p. 45.
- ↑ de Neve. The Everyday Politics of Labour. p. 44.
- ↑ 10.0 10.1 10.2 10.3 10.4 de Neve. The Everyday Politics of Labour. p. 86.
- ↑ 11.0 11.1 Assayag, Fuller. Globalizing India: Perspectives from Below. p. 93.
- ↑ 12.0 12.1 12.2 "No takers for Erode blankets". Deccan Chronicle. 31 March 2013. http://www.deccanchronicle.com/140101/news-current-affairs/article/no-takers-erode-blankets.
- ↑ "GI tag: TN trails Karnataka with 18 products". Times of India. 29 August 2013. http://timesofindia.indiatimes.com/city/chennai/GI-tag-TN-trails-Karnataka-with-18-products/articleshow/6458268.cms.
மேலும் படிக்க
[தொகு]- Geert de Neve (2005). The Everyday Politics of Labour: Working Lives in India's Informal Economy. Berghahn Books.
- Jonathan P. Parry, Jan Breman, Karin Kapadia (2000). The worlds of Indian industrial labour. Sage Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780761993957.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - Jackie Assayag, Chris Fuller (2005). Globalizing India: Perspectives from Below. Anthem Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780857287243.