உள்ளடக்கத்துக்குச் செல்

பவானி சிங் பதானியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பவானி சிங் பதானியா
Bhawani Singh Pathania
இமாச்சலப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2 நவம்பர் 2021
முன்னையவர்சுச்சன் சிங் பதானியா
தொகுதிபத்தேபூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 ஆகத்து 1974 (1974-08-20) (அகவை 52)
தரம்சாலா, இமாச்சலப் பிரதேசம்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பெற்றோர்
  • சுச்சன் சிங் பதானியா (தந்தை)

பவானி சிங் பதானியா (Bhawani Singh Pathania) என்பவர் இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1974ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 20ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[1] இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இவர் இமாச்சலப் பிரதேச அரசியலில் இயங்கினார். பத்தேபூர் சட்டமன்ற தொகுதிக்காக நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வென்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். இமாச்சலப் பிரதேசத்தின் பத்தேபூர் சட்டமன்றத் தொகுதிக்கு நடந்த தேர்தலில் இவர் தனது நெருங்கிய போட்டியாளரும் பாரதியா சனதா கட்சி வேட்பாளருமான பல்தேவ் தாக்கூரை சுமார் 6000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இப்போட்டியில் மொத்தம் ஐந்து வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.[2][3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bhawani Singh Pathania(Indian National Congress(INC)):Constituency- FATEHPUR : BYE ELECTION ON 30-10-2021(KANGRA) - Affidavit Information of Candidate:". myneta.info. Retrieved 2021-11-02.
  2. "फतेहपुर उपचुनाव परिणाम: कांग्रेस के भवानी सिंह पठानिया ने लहराया जीत का परचम". Amar Ujala (in இந்தி). Retrieved 2021-11-02.
  3. "Election Commission of India". results.eci.gov.in. Retrieved 2 November 2021.
  4. "Congress wins Fatehpur bypoll in Himachal". Tribuneindia News Service (in ஆங்கிலம்). Archived from the original on 2 November 2021. Retrieved 2021-11-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவானி_சிங்_பதானியா&oldid=4389795" இலிருந்து மீள்விக்கப்பட்டது