பவானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பவானா
நகரம்
பவானா is located in டெல்லி
பவானா
பவானா
இந்தியாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 28°48′N 77°02′E / 28.8°N 77.03°E / 28.8; 77.03ஆள்கூறுகள்: 28°48′N 77°02′E / 28.8°N 77.03°E / 28.8; 77.03
நாடு இந்தியா
மாநிலம்தில்லி
மாவட்டம்வடமேற்கு
ஏற்றம்213 m (699 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்23,095
மொழிகள்
 • அதிகாரபூர்வம்இந்தி, ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல்110039

பவானா (Bawana) இந்தியாவின் தலைநகர் தில்லியின் வடமேற்கு மாவட்டத்தில் உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரமாகும். இது ஜாட்ஜைலின் பவானா கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது. இது பிரித்தானிய இந்தியப் பேரரசு காலத்தில் தில்லியின் நான்கு வருவாய் பிரிவுகளில் ஒன்றான பவானா வருவாய் பிரிவின் ஜாட் இனத்தைச் சேர்ந்த ஜைல்தார் (நிலக்கிழார் ) எனப்படும் தலைமை நிர்வாகி கட்டமைத்த ஒரு கோட்டையாகும். இவர் தலைமையில் அமைந்த நான்கு நிர்வாகப் பிரிவுகளில் (Zails) மெக்ராலி, டில்லி மற்றும் நசாப்கர் ஆகியவற்றுடன் சேர்த்து பவானாவும் ஒன்றாகும். [1] [2]

சொற்பிறப்பு[தொகு]

பவானா இதற்கு பவானி என்று அழைக்கப்பட்டது.[3] இது "பவன்" (52) என்ற இந்தி மொழி வார்த்தைகளிலிருந்து இந்த பெயரைப் பெற்றது.[1] நரேலாவில் 17 கிராமங்கள், கராலாவில் 17 கிராமங்கள், பாலத்திவில் 6 கிராமங்கள் மற்றும் பவானாவில் கீழ் 12 கிராமங்கள் என்ற எண்ணிக்கையில் இந்த பகுதி 52 கிராமங்களில் 5,200 பிக்கா எனப்படும் நிலத்தின் பரப்பளவை அளவிடும் ஒரு பாரம்பரிய அலகினைக் கொண்ட விவசாய நிலங்களைக் கொண்டுள்ளது. [1] [3]

வரலாறு[தொகு]

பவானா 1168 இல் நிறுவப்பட்ட நிலப்பிரிவாகும். 1860 இல் பவானாவில் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு காலத்தில் பவானா வருவாய் பிரிவாக நிறுவப்பட்டது, மேலும் மெக்ராலியில் வாழ்ந்துவந்த ஜாட் மக்கள், தாவோரு பகுதியின் ஜாட்கள், பின்னர் இங்கே குடியேறத் தொடங்கினர். அவர்கள் இறுதியில், இப்பகுதியின் தலைமை நிர்வாகியாக போதுமான செல்வாக்கு பெற்றனர். ஜாட் நிர்வாகி 1860 களில் பவானா கோட்டையை பவானா வருவாய் பிரிவின் தலைமையகமாக பவானா, அலிபூர் மற்றும் கஞ்சாவாலா ஆகிய 3 கிராமங்களுடன் அதன் அதிகாரத்தின் கீழ் கட்டமைத்தார். காலனித்துவ கால தில்லி மாவட்டத்திற்குள் உள்ள நான்கு வருவாய் பிரிவுகளில் இதுவும் ஒன்றாகும். மெக்ராலி, தில்லி மற்றும் நசாப்கர் ஆகியவை பிற வருவாய் பிரிவுகளாகும்.

கோட்டையில் ஒரு வளைந்த நுழைவாயில் உள்ளது, தாழ்வாரங்களால் சூழப்பட்ட ஒரு முற்றத்தில், இடதுபுறத்தில் இரண்டு அறைகள் உள்ளன, ஜமீந்தாரி வரி செலுத்தத் தவறியவர்களுக்கு, இது சிறைச்சாலையாகப் பயன்படுத்தப்பட்டது. மேலும், சிறை அறைகளுக்கு அடுத்து ஒரு சிறிய படிக்கட்டு பாதுகாப்பு இடுகையுடன் மொட்டை மாடிக்கு செல்கிறது. இதன் நான்கு மூலைகளிலும் கோட்டைகள் உள்ளன. கிண்ற்றிலுள்ள பழைய கிணறு காய்ந்து அதன் நீரும் உப்பு நீராக மாறியுள்ளது. 1930-40களில் அதிகாரிகள் பவானா வருவாய்ப் பிரிவுக் கோட்டையை ஒரு பள்ளியாகப் பயன்படுத்தத் தொடங்கினர். பின்னர் இது அனாதை இல்லமாகப் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு ஒரு குறுகிய காலத்திற்கு கால்நடை மருத்துவமனையாகவும் செயல்பட்டது. 1996-98 காலகட்டத்தில் தில்லியின் ஜாட் இன முதலமைச்சர் சாகிப் சிங் வர்மாவின் ஆட்சியில் இது கிராமக் கணக்காளர் அலுவலகமாக மாற்றப்பட்டது. கோட்டையும் "பவானா வட்டம்" என்று அழைக்கப்பட்டது. இறுதியில் இந்த கட்டிடம் கைவிடப்பட்டது. தில்லியில் நடந்த 2010 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்காக 2004 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் சிறிய மறுசீரமைப்புகளைக் கண்டது. ஆனால் இதற்கு முன்னர் 2004 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர சுதந்திர போராளிகளுக்கான நினைவுச்சின்னமாக மாற்றும் திட்டம் நிறைவேறவில்லை. தட்டையான மெல்லிய சிவப்பு நிற சுட்ட களிமண் செங்கற்கள் மற்றும் சுண்ணாம்பு காரை உள்ளிட்ட அசல் கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்தி பிப்ரவரி 2017 இல் ஒரு பெரிய மறுசீரமைப்பு தொடங்கியது. [1] [2]

நிலவியல்[தொகு]

பவானா சராசரியாக 213 மீட்டர் (698 அடி) உயரத்தில் உள்ளது. இது நங்கல் தக்ரான், பசித்பூர், தர்யாப்பூர், மச்ரா தபாசு, பூத் குர்த், ஓலாம்பி குர்த், கெதா குர்த், ஓலாம்பி கலான், சுல்தான்பூர் தபாஸ் மற்றும் கோகா கிராமங்களால் சூழப்பட்டுள்ளது. [4] விவசாயத்தின் கீழ் உள்ள கிராமத்தின் பரப்பளவு 52000 என்ற அலகாக இருந்தது, ஆனால் இப்போது இந்த நிலத்தின் பெரும்பகுதி தில்லி அரசாங்கத்தால் தொழில்துறை பயன்பாட்டிற்காக கையகப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கு யமுனை ஆற்றின் கால்வாய் மற்றும் குளங்களின் அதிக அடர்த்தி காரணமாக பவானா, அதன் புது வண்டல் மண்ணுடன், மிகவும் வளமானதாக உள்ளது. [5] இப்பகுதியில் காலநிலை தீவிரமானது, கோடையில் மிக அதிக வெப்பநிலை மற்றும் குளிர்கால மாதங்களில் கிட்டத்தட்ட பூஜ்ஜிய நிலை வெப்பநிலை நிலவுகிறது.. [6] தில்சாத் காலனியின் சேரிப் பகுதியான ஜே. ஜே. காலனி, பவானாவிலிருந்து ஒரு கால்வாயால் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் சிறந்த திட்டமிடப்பட்ட தொழில்துறை பகுதிகளில் ஒன்றான மருத்துவர் சியாமா பிரசாத் முகர்ஜி தொழில்துறை பூங்கா பவானாவில் உள்ளது. 1500 மெகாவாட் இயற்கை எரிவாயு மின் நிலையமும் இப்பகுதியில் கட்டுமானத்தில் உள்ளது. [7] இந்தப் பிராந்தியத்தின் தண்ணீர் தட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு 20 எம்ஜிடி நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. பவானாவில், ஒரு விமானப்படை நிலையம் மற்றும் ஒரு மத்திய சேமக் காவல் படையின் அடிப்படை முகாம் ஒன்றும் இயங்குகிறது [8]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பவானா&oldid=2897862" இருந்து மீள்விக்கப்பட்டது