பவளப்பாறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இயற்கை சமநிலை இன்னும் முற்றக்கெடாமல் இருப்பதின் காட்டாக விளங்குவது பவளப்பாறைகள்.கடல்வாழ் உயிரினங்களின் புகலிடமாகவும் இயற்கை சமன்பாட்டின் எச்சமாகவும் விளங்குகிறது. ஆழமற்ற கடல் பகுதிகளில் காணப்படும் பவளம் (Corals),போன்ற சுண்ணாம்புக் கூட்டின் மீது கூட்டங்கூட்டமாக வாழும் உயிரினங்களிவை கடல் அனிமோன்,இழுதுமீன் ஆகிய உயிரினகளின் குடும்பத்தைச் சேர்ந்தவை.ஒவ்வொரு பவளப்பூச்சியும் பாலிப் (Polyp) என்று அழைக்கப்படும். சுண்ணாம்புக்கூட்டின்மீது வாழும் இதற்கு வாயும் உணர்வுக் கொம்புகளுமுண்டு.பிளாங்டன் போன்ற மிதவை நுண்தாவர உணவைப் பிடிக்க இந்த உணர்வுக்கொம்புகள் பயன்படும். ஆபத்து ஏற்படும்போது உள்ளே இழுத்துக் கொள்ளும் தனமை கொண்டவை இந்த உணர்வுக்கொம்புகள்,பவளப்பூச்சிகள் சுண்ணாம்புக் கூட்டின் மீது ஒட்டிக்கொண்டே காலம்முழுவதும் வாந்தாக வேண்டும். அவற்றால் நகர முடியாது.

பவளப்பாறைகளின் வகைகள்[தொகு]

பவளத்திட்டுகளில் (Coral Reef) பலவடிவங்கள் வகைகள் உண்டு,அவை >மூளை பவளம் >மான்கொம்பு பவளம் >தட்டு பவளம் >காளான் பவளம் >விரல் பவளம் என்பன பவளப்பாறைகளின் வகைகளாகும்.

மூளைப்பவளம்[தொகு]

  மனித மூளையை ஒத்திருப்பதால் இவை இந்தப் பெயர்பெற்றன. பளப்பூச்சிகள் கூட்டின் முகடுகளில் வளர்வதாலிந்தத் தோற்றம் உருவாகிறது. மூளை வடிவப பவளங்கள் மனிதர்களின் தலை அளவுக்கு வளர்வதற்கு 20 ஆண்டுகள் ஆகும்.

மான்கொம்பு பவளம்[தொகு]

  மான் கொம்பின் கிளையை ஒத்த வடிவம் கொண்டுள்ளதால் இவை இந்தப் பெயர் பெற்றன.இந்தப் பவளங்களில் கிளைகள் ஒடிந்து விழுந்தாலும்கூட அதிலிருந்து புதிய கிளை துளிர்த்து வளரும் தன்மை கொண்டது.

தட்டு பவளம்[தொகு]

  இந்த வகை பவளத்தட்டுகள் பல அடுக்குகளைக் கொண்ட தட்டு போலிருக்கும். தெளிந்த நீரில் மட்டுமே இந்த வகை பவளத்திட்டுகளில் காணப்படும்.

காளான் பவளம்[தொகு]

  இவை மனிதனின் விரலை ஒத்திருக்கும்.

விரல் பவளம்[தொகு]

இந்த வகை பவளமும்மனிதனின் விரல்களை ஒத்திருப்பதாலேயே இவைவிரல் பவளம் என்று அழைக்கப்படுகிறது.

பவளப்பாறைகளின் பயன்கள்[தொகு]

  இந்தப் பவளத்திட்டுகள் விலைமதிக்க முடியாத பல சேவைகளை புரிந்துவருகின்றன. அவை:

*கடலோர பாதுகாவலர்கள்

*உணவுக்கிடங்குகள்

*அற்புத சிற்பங்கள்

கலலோர பாதுகாவலர்கள்[தொகு]

  தடுப்பு போல்செயல்பட்டு அலையின் வேகத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் பவளத்திட்டுகள் நமது கடற்கரைகளைப் பாதுகாக்கின்றன். ஆழம் குறைவான பகுதிக்கு அலைகள வரும்போது பவளத்திட்டுகள்மீது பட்டு அவை உடைந்து சிதறுகின்றன.இதன்மூலம் தங்கள் சக்தியைபெருமளவு இழக்கின்றன். பவளத்திட்டுகள் இல்லையென்றால் நமது கடற்கரையின் பெரும்பகுதி அரிக்கப்பட்டு கடலுக்குள் மூழ்கிவிடும்.நமது தீவுகள் குறுகிக்குறுகி சிறியதாகிவிடும்.பவளத்திட்டுகள்தான் இவை அனைத்தையும் பாதுகாக்கின்றன.

உணவுக்கிடங்குகள்[தொகு]

 பல கடல் உயிரினங்கள்,மீன்களுக்கு தங்குமிடம், உணவு தேடுமிடம், இனப்பெருக்கம் செய்யுமிடம்,குஞ்சுகளை வளர்க்குமிடமாக பவளத்திட்டுகளிருக்கின்றன. வணிக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பலமீன்களிங்குதான் உற்பத்தி ஆகின்றன.

அற்புத சிற்பங்கள்[தொகு]

  கடலுக்கு உள்ளே இருந்தாலும்கூட பவளத்திட்டுகளின் பளிச்சிடும் நிறங்களும் வடிவங்களும், உயிர்ச்செழிப்பும்மிகப்பெரியாஅச்சர்யங்கள், பவளத்திட்டுகளின் ஊடாககோமாளி மீன்கள் உள்ளே நுழைந்து வெளியேவரும் காட்சிகள் மிக அற்புத சிற்பங்களை ஒத்திருக்கும்.

ஆபத்தில் இருக்கும் பவளத்திட்டுகள்[தொகு]

பவளத்திட்டுகள் சுண்ணாம்புக்காக வெட்டியெடுக்கப்படுகின்றன்.வெடிவைத்து மீன்பிடிப்பதால் நகர்ந்து போகின்றன. தொழிற்சாலை, வீட்டுக்கழிவால் உயிரிழக்கின்றன. அதிக வெப்பநீர் வெளியேற்றப்படுவதாலும் உயிரிழக்கின்றன.இதற்கெல்லாம் மேலாக அலங்காரப் பொருட்கள் செய்வதற்காக சேகரிக்கப்படுகின்றன.

உசாத்துணைகள்[தொகு]

துளிர் அறிவியல் இதழ் ஜூன் 2010

"https://ta.wikipedia.org/w/index.php?title=பவளப்பாறை&oldid=2321663" இருந்து மீள்விக்கப்பட்டது