பவர் ரேஞ்சர்ஸ் மெகாஃபோர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Power Rangers Mega Force in New York Comic Con 2013

பவர் ரேஞ்சர்ஸ் மெகா போர்ஸ் (Power Rangers Mega Force) ஒரு பவர் ரேஞ்சர்ஸ் தொடராகும். இரண்டு சூப்பர் சென்டாய் தொடர்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட முதல் பவர் ரேஞ்சர்ஸ் தொடர் இதுவாகும்.

கதை சுருக்கம்[தொகு]

உயர்கல்வி மாணவரான "திராய்" ஒரு கனவில் பழைய பவர் ரேஞ்சர்களுடன் இணைந்து சண்டையிடுவது போல கனவு காண்கிறார். அதன் பிறகு தீய சக்திகள் வெளிப்பட்டதை உணர்ந்த ஜோர்டான்னின் சீடரான கோசெ விழித்தெழுந்து புதிய ஐந்து ரேஞ்சர்களை தேர்ந்தெடுக்க தனது உதவி இயந்திரத்திற்கு கட்டளை இடுகிறார். திராய் உட்பட ஐந்து நபர்கள் புதிய ரேஞ்சர்களாக தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். புதியதாக தேர்ந்தெடுக்க பட்ட ரேஞ்சர்கள் எவ்வாறு தீய சக்திகளை அழிக்கிறார்கள் என்பதே தொடரின் கதை.