பவர் ரேஞ்சர்ஸ் சாமுராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பவர் ரேஞ்சர்ஸ் சாமுராய் (Power Rangers Samurai) ஒரு அமெரிக்க தொலைக்காட்சி தொடராகும்.[1] இது பவர் ரேஞ்சர்ஸ் தொடரின் பிரிவு ஆகும். பிவிஎஸ் நிறுவனத்திடம் இருந்து நீயோ-சாபன் நிறுவனம் தயாரிப்பு உரிமையை பெற்ற பிறகு தயாரிக்கப்பட்ட முதல் தொடராகும்.

தயாரிப்பு[தொகு]

பவர் ரேஞ்சர்ஸ் ஆர்பிஎம் தொடருக்கு பின் பவர் ரேஞ்சர்ஸ் தொடர்களை தயாரிக்க போவது இல்லை என பிவிஎஸ் நிறுவனம் அறிவித்து இருந்தது. பின்பு தயாரிப்பு உரிமை சாபன் நிறுவனத்தால் மீண்டும் வாங்கப்பட்டது. அதன் பிறகு இத்தொடர் தயாரிக்கப்பட்டது.

கதை சுருக்கம்[தொகு]

ஜப்பானில் நைலாக் எனப்படும் தீய சக்திகளின் அச்சுறுத்தலில் இருந்து காலம் காலமாக சாமுராய் வீரர்கள் பாதுகாத்து வருகின்றனர். நைலாக் படைகள் மீண்டும் எழுகின்றன. அடுத்த தலைமுறை சாமுராய் வீரர்கள் பவர் ரேஞ்சர்ஸ் சக்திகளுடன் அவர்களை எதிர்க்கிறார்கள். அவர்களுக்கு மென்டார் ஜி பயிற்சி அளித்து தீய சக்திகளை ஒடுக்க உதவுகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. [[தொடர்பிழந்த இணைப்பு] you Know There were This Many Power Rangers Shows?]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவர்_ரேஞ்சர்ஸ்_சாமுராய்&oldid=3370702" இலிருந்து மீள்விக்கப்பட்டது