உள்ளடக்கத்துக்குச் செல்

பழைய மலாய் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பழைய மலாய் மொழி
Old Malay
Bahasa Melayu Kuno
பிராந்தியம் சுமாத்திரா, சாவகம் (தீவு) சுந்தா தீவுகள், லூசோன்
ஊழி3-ஆம் — 14-ஆம் நூற்றாண்டு வரை
ஆஸ்திரோனீசிய
காவி எழுத்து முறை, பல்லவ எழுத்துமுறை
மொழிக் குறியீடுகள்
ISO 639-3omy
மொழிக் குறிப்புoldm1243[1]
பழைய மலாய் மொழியில், பல்லவ எழுத்து முறைமை; பயன்படுத்தப்பட்ட கெடுக்கான் புக்கிட் கல்வெட்டு

பழைய மலாய் மொழி, (மலாய்: Bahasa Melayu Kuno; ஆங்கிலம்: Old Malay) என்பது 3-ஆம் நூற்றாண்டில் இருந்து 14-ஆம் நூற்றாண்டு வரை, சுமாத்திரா, ஜாவா, சுந்தா தீவுகள், பிலிப்பீன்சு நாட்டின் லூசோன் தீவுப் பகுதிகளில் பல்லவ எழுத்துமுறை (Pallava script), நாகரி எழுத்துமுறை (Nāgarī script) எனும் பழைய எழுத்து முறைமைகளைப் பயன்படுத்திய ஒரு மொழியாகும்.[2]

பொது ஊழி காலத் தொடக்கத்தில், மலாய் தீவுக்கூட்டத்தில் இந்திய நாகரிகத்தின் செல்வாக்கு வளரத் தொடங்கியது. அதில் சமசுகிருதச் சொற்களின் ஊடுருவலும்; தாக்கமும் இருந்தன. அத்துடன் இந்து மதம்; பௌத்தம் போன்ற முக்கிய இந்திய சமயங்களின் செல்வாக்குடன், பண்டைய மலாய் மொழி என்பது பழைய மலாய் மொழி எனும் புதிய பரிமாணத்தில் பரிணமிக்கத் தொடங்கியது.

பொது

[தொகு]

இந்தோனேசியா, மத்திய ஜாவாவில் கிடைத்த 7-ஆம் நூற்றாண்டு சோஜோமெர்த்தோ கல்வெட்டு (Sojomerto inscription); மற்றும் தெற்கு சுமாத்திராவில் கிடைத்த கெடுக்கான் புக்கிட் கல்வெட்டு (Kedukan Bukit Inscription) போன்றவை; பழைய மலாய் மொழியின் மிகப் பழமையான கல்வெட்டுகள் ஆகும்.

7-ஆம் நூற்றாண்டு – 10 ஆம் நூற்றாண்டு வரையில், சுமாத்திரா, ஜாவா, சுந்தா தீவுக்கூட்டத்தின் பிற தீவுகள்; லூசோன், பிலிப்பீன்சில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளும் இவற்றில் அடங்கும்.

இந்திய பண்பாட்டுச் சொற்கள்

[தொகு]

இந்தியப் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடைய சொற்கள் இன்றும் பழைய மலாய் மொழியின் அமைப்பின் பயன்பாட்டில் உள்ளன. குறிப்பாக பூஜை (Puja), பக்தி (Bhakti), சத்திரியர் (Kshatriya), மகாராஜா (Maharaja), ராஜா (Raja), தோசம் (Dosa), பலம் (Pahala), நரகம் (Neraka), சொர்க்கம் (Syurga), விரதம் (Puasa) போன்ற இந்து மதச் சொற்கள்; சுவாமி, மடம் (Biara) போன்ற பௌத்த மதச் சொற்களின் பயன்பாடு இன்று வரை நீடிக்கின்றன.

அந்த வகையில், அந்தக் காலக் கட்டத்தில், பழைய மலாய் மொழியின் அமைப்பு, சமசுகிருத வேதங்களால் பெரிதும் தாக்கம் கண்டு இருந்தது என்பது குறிப்பிடத் தக்கதாகும். தற்போதைய சில மலாய்ப் பெயர்கள் சமசுகிருத மொழியிலிருந்து பெறப்பட்டவை.

சிறீவிஜய கல்வெட்டுகள்

[தொகு]

எடுத்துக்காட்டாக, இந்திய இந்து தெய்வங்கள் அல்லது வீரர்களின் பெயர்கள் சார்ந்த புத்ரி/புத்ரி (Puteri/Putri), புத்ரா/புத்ரா (Putera/Putra), வீரா (Wira) மற்றும் வதி (Wati) போன்ற சொற்களை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.[3]

இந்தோனேசியாவின் தெற்கு சுமாத்திராவில் கிடைக்கப் பெற்ற சிறீவிஜய கல்வெட்டுகளின் பழைய மலாய் மொழி என்பது, பாரம்பரிய மலாய் மொழியின் மூதாதையர் மொழி என்று பிரபலமாகக் கூறப்படுகிறது.[4]

ஆதித்தியவர்மன்

[தொகு]

1303-ஆம் ஆண்டு முதல் மலாய் தீபகற்பத்தில் பாரம்பரிய மலாய் மொழியின் தொடக்கக் காலச் சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இருந்தாலும், 14-ஆம் நூற்றாண்டின் இறுதி வரை, சுமாத்திராவில் பழைய மலாய் மொழி என்பது எழுத்து மொழியாகப் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.[5]

இதற்கு 1357-ஆம் ஆண்டு புக்கிட் கோம்பாக் கல்வெட்டு (Bukit Gombak inscription) மற்றும் ஆதித்தியவர்மன் ஆட்சிக் காலத்தின் (1347–1375) தஞ்சோங் தானா கையெழுத்துப் பிரதி (Tanjung Tanah manuscript) போன்றவை சான்றுகளாக அமைகின்றன.[6][7]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்

[தொகு]
  1. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Old Malay". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  2. Molen, Willem van der (2008). "The Syair of Minye Tujuh". Bijdragen tot de Taal-, Land- en Volkenkunde 163 (2/3): 356–375. doi:10.1163/22134379-90003689. 
  3. Teeuw 1959, ப. 141–143
  4. Sneddon 2003
  5. Teeuw 1959, ப. 148
  6. Clavé, Elsa; Griffiths, Arlo (2022-10-11). "The Laguna Copperplate Inscription: Tenth-Century Luzon, Java, and the Malay World". Philippine Studies: Historical and Ethnographic Viewpoints 70 (2): 167–242. doi:10.13185/ps2022.70202. பன்னாட்டுத் தர தொடர் எண்:2244-1093. http://dx.doi.org/10.13185/ps2022.70202. 
  7. Adelaar, Alexander (2005). "The Austronesian languages of Asia and Madagascar: A historical perspective". In Adelaar, Alexander; Himmelmann, Nikolaus (eds.). The Austronesian Languages of Asia and Madagascar (in ஆங்கிலம்). Abingdon: Routledge. pp. 1–42. ISBN 9780415681537.

நூல்கள்

[தொகு]
  • Mohamed Pitchay Gani, Mohamed Abdul Aziz (2004), E-Kultur dan evolusi bahasa Melayu di Singapura (Master Thesis), National Institute of Education, Nanyang Technological University
  • Morrison, George Ernest (1975), "The Early Cham Language and Its Relation to Malay", Journal of the Malaysian Branch of the Royal Asiatic Society, 48
  • Ooi, Keat Gin (2008), Historical Dictionary of Malaysia, The Scarecrow Press, Inc., ISBN 978-0-8108-5955-5
  • Sneddon, James N. (2003), The Indonesian Language: Its History and Role in Modern Society, University of New South Wales Press, ISBN 0-86840-598-1
  • Thurgood, Graham (1999), From Ancient Cham to Modern Dialects: Two Thousand Years of Language Contact and Change, University of Hawaii Press, ISBN 978-0-8248-2131-9

வெளி இணைப்புகள்

[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பழைய_மலாய்_மொழி&oldid=4199418" இலிருந்து மீள்விக்கப்பட்டது