பழைய கெய்ரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோப்திய கெய்ரோவில் அமைந்துள்ள புனித ஜோர்ஜின் கன்னிமாடம் பழைய கெய்ரோவிலுள்ள புகழ்பெற்ற இடமாகும்.

பழைய கெய்ரோ (எகிப்திய அரபு: Masr el Adīma) எகிப்துத் தலைநகர் கெய்ரோவின் ஓர் பகுதியாகும். இது கெய்ரோவிற்கு முன்பாக ஃபூசுடாட் போன்ற எகிப்தின் தலைநகரங்களாக விளங்கிய நகரங்களின் எச்சங்களை உள்ளடக்கி உள்ளது. மேலும் இப்பகுதியில் கோப்திய கெய்ரோ மற்றும் அதன் பல தொன்மையான தேவாலயங்களும் உரோமானியக் கோட்டைகளின் இடிபாடுகளும் உள்ளன. தற்காலச் சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள கோப்திய அருங்காட்சியகம், பாபிலோன் கோட்டை, தொங்கு தேவாலயம், மற்றும் பிற கோப்திய தேவாலயங்களையும், பென் எச்ரா யூதக்கோவிலையும் அமிர் இபன் அல்-அசு மசூதியையும் காணச் செல்கின்றனர். பாபிலோன் கோட்டை என்பது உரோமானியர்கள் கட்டிய கோட்டை ஆகும்; இதனைச் சுற்றியே எகிப்திய கிறித்துவர்களின் பல தொன்மையான தேவாலயங்கள் கட்டப்பட்டுள்ளன.

ரோடாத் தீவிற்கும் பழைய கெய்ரோவிற்கும் இடையேயுள்ள கால்வாய்

சிற்றரசர் காபிரீயல் அபீப் சக்காக்கினி பாஷா (1841–1923), சக்காக்கினி என்னுமிடத்தில் 1897இல் ஓர் அரண்மனையையும் தேவாலயத்தையும் கட்டினார்.[1] இவர் பழைய கெய்ரோவில் உரோமானிக் கத்தோலிக்க கல்லறையையும் ஏற்படுத்தினார்.[2]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Egy.com". 2010-09-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-08-12 அன்று பார்க்கப்பட்டது.
  2. Report on Sakakini Pasha's granddaughter Asma el Bakri

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Old Cairo
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழைய_கெய்ரோ&oldid=3562231" இருந்து மீள்விக்கப்பட்டது