பழைய உலக பறக்கும் அணில்
Appearance
பழைய உலக பறக்கும் அணில் புதைப்படிவ காலம்:பிலியோசின் – பிந்தைய காலம் முதல் | |
---|---|
சப்பானிய பறக்கும் குள்ள அணில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | டெரோமைசு குவியர், 1800
|
மாதிரி இனம் | |
டெரோமைசு வோலன்சு | |
சிற்றினம் | |
டெரோமைசு வோலன்சு |
பழைய உலக பறக்கும் அணில்கள் என்று பொதுவாக அழைக்கப்படுவன டெரோமைசு பேரின அணில்கள் ஆகும். இவை மிதவெப்பமண்டல ஐரோவாசியா, கொரியத் தீபகற்பம் மற்றும் சப்பான் முழுவதும் காணப்படுகிறது. ஆசியாவில் (குறிப்பாகத் தெற்காசியா) பறக்கும் அணில் சிற்றினங்கள் காணப்பட்டபோதிலும் ஐரோப்பாவில் மட்டுமே டெரோமைசு பேரின அணில்கள் காணப்படுகிறது.
சிறப்பியல்புகள்
[தொகு]பெரிய கண்களையுடைய இந்த விலங்குகள் இரவாடுதல் வகையினைச் சார்ந்தவை. மரத்திலிருந்து மரத்திற்குச் சறுக்குவதற்காக தங்கள் மணிக்கட்டிலிருந்து கணுக்கால் வரை நீண்டிருக்கும் சவ்வைப் பயன்படுத்துகின்றன. நீண்ட தட்டையான வாலினைக் கொண்ட இந்த அணில்களால் 443 அடிகள் வரை சறுக்க முடியும். இவை கொட்டைகள், விதைகள், பழங்கள், மொட்டுகள், பட்டை மற்றும் பூச்சிகளை உண்கின்றன.
சிற்றினங்கள்
[தொகு]இந்த பேரினத்தில் இரண்டு சிற்றினங்கள் உள்ளன:
- டெரோமைசு வோலன்சு - சைபீரியன் பறக்கும் அணில் - வடக்கு ஐரோப்பாவில் (முக்கியமாக உருசியா மற்றும் பின்லாந்து, பால்டிக்சில் சில தனிமைப்படுத்தப்பட்ட உயிரிகள்) மற்றும் சைபீரியாவிலிருந்து ஹொக்கைடோ வரை வடக்கு ஆசியாவில் காணப்படுகிறது.
- டெரோமைசு மோமோங்கா - சப்பானிய குள்ள பறக்கும் அணில் - சப்பானில் காணப்படுகிறது (ஹோன்ஷு மற்றும் கியுஷு).
மேற்கோள்கள்
[தொகு]- நோவாக், ரொனால்ட் எம். 1999. வாக்கர்ஸ் மம்மல்ஸ் ஆஃப் தி வேர்ல்ட், 6வது பதிப்பு. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் யுனிவர்சிட்டி பிரஸ், 1936 பக். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8018-5789-9