பழூர் பெரும்திரிக்கோயில்
பழூர் பெரும்திரிக்கோயில் இந்தியாவின் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் பிறவம் நகரில் அமைந்துள்ள இந்துக் கோயிலாகும். இதன் மூலவர் சிவன் ஆவார்.
சாந்தார வகை
[தொகு]இக்கோயிலானது சாந்தார வகையைச் சார்ந்ததாகும். இது நான்கு பக்கங்களிலும் கார்டினல் கதவுகள் உள்ளன. பீடமும், சுவரும் கிரானைட் கல் வேலைப்பாடு கொண்டுள்ளது. மற்றவை மரத்தால் ஆனவை. விமானம் வட்ட வடிவமாக உள்ளது. மரத்தால் ஆன துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவர் சிவன்கிழக்கு நோக்கி உள்ளார். சதுர அர்த்தமண்டபத்தின் கூரையில் அழகிய மர வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. பிரநாளம் எனப்படுகின்ற பொதுவான அலங்கரிக்கப்பட்ட கேரள வகைக் கட்டடக்கலைப்பாணியானது நுனியில் இயக்கர்களைத் தாங்கி நிற்கிறது. இது மரத்தில் அழகிய பழைமையான வேலைப்பாடுளைக் கொண்டுள்ளது. பாகவத புராணம், ராமாயணம்,மகாபாரதம் ஆகியவற்றிலிருந்து பல்வேறு புராணங்களும், உருவங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இக்கோயில் கி.பி.12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்.[1]
இக்கோயிலின் கட்டமைப்பு, சுவரோவியத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, 1994 ஆம் ஆண்டு கேரள மாநில தொல்லியல் துறை இதனை பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவித்துள்ளது.[2] [3]
தொல்லியல் விவரங்கள்
[தொகு]நினைவுச்சின்னத்தின் பெயர் | பெரும்திரிக்கோயில், பழூர் |
அம்சங்கள் | 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கட்டமைப்பு கோயில். மர வேலைப்பாடுகள் மற்றும் சுவரோவியங்கள். கோயில் வளாகத்திற்கு வெளியே பாரம்பரிய அமைப்பு கொண்ட அரண்மனை உள்ளது |
நகராட்சியின் பெயர் | பிறவம் |
வட்டத்தின் பெயர் | மூவாட்டுப்புழா |
நினைவுச்சின்னத்தின் மொத்த பரப்பளவு | 1.45 ஏக்கர்கள் (5,900 m2) சை எண்.590/ 30.75 ஏக்கர்கள் (124,400 m2) 590/5மொத்தம் : 2.20 ஏக்கர்கள் (8,900 m2) |
அறிவிப்பு எண் | N0.5500/B1/93/CAD தேதி 22.1.1994 |
சான்று - அரசிடமிருந்து தொல்லியல் தரவு[4]
மேலும் பார்க்கவும்
[தொகு]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "പെരുംതൃക്കോവിലപ്പന് ശതകലശാഭിഷേകം നടത്തിയാൽ ഐശ്വര്യവും സമൃദ്ധിയും".
- ↑ http://enchantingkerala.org/kerala-monuments/pazhoor-perumthrikkovil.php
- ↑ Pazhoor perum thrikovil Piravam 1 2 3 - Kshethrayanam
- ↑ "Welcome to the official website of Department of Archaeology, Government of Kerala".