பழுப்பு முள்வால் உழவாரன்
முள்வால் உழவாரன் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | H. giganteus
|
இருசொற் பெயரீடு | |
Hirundapus giganteus (Temminck, 1825) |
பழுப்பு முள்வால் உழவாரன் (brown-backed needletail, உயிரியல் பெயர்: Hirundapus giganteus) என்பது உழவாரன்களில் பெரியது ஆகும். சிறிய கால்களை கொண்டது. அதிகமான நேரத்தை வானில் பறந்து செலவிடும். தென் ஆசியா இந்தியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை தாயகமாகக் கொண்டது.
விளக்கம்
[தொகு]பழுப்பு முள்வால் உழவாரன்கள் மிகவும் குறுகிய கால்களைக் கொண்டுள்ளன. அது குகையின் செங்குத்து மேற்பரப்புகளில் ஒட்டிக்கொள்ள மட்டுமே பயன்படுத்துகிறது. ஏனெனில் உழவாரன்கள் எப்போதும் தரையில் தானாக முன்வந்து அமர்வதில்லை. இவை தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை பறந்தே கழிக்கின்றன. இவை தங்கள் அலகால் பறக்கும் பூச்சிகளை பிடித்து உண்டு வாழ்கின்றன.
பழுப்பு முள்வால் உழவாரன்கள் மிகப்பெரிய உழவாரன்கள் ஆகும். இவற்றின் உடல் 23 செ.மீ. நீளம் கொண்டது. முதுகு, இறக்கைகள் வால் ஆகியன தவிர உடலின் பிற பகுதிகள் பசுமை தோய்த்த கரும் பழுப்பு நிறமாக இருக்கும். முதுகு லேசான பழுப்பு நிறம். உடலின் அடிப்பகுதி பழுப்பு. வாலடியும் வாலடி இறகுகளும் வெண்மை.[2]
காணப்படும் பகுதிகளும் உணவும்
[தொகு]இந்த உழவாரன்கள் தெற்கு ஆசியாவில் இந்தியாவில் இருந்து கிழக்கே இந்தோனேசியா மற்றும் பிலிப்பீன்சு வரை உள்ள மலைக்காடுகளில் இனப்பெருக்கம் செய்து வசிக்கின்றன. தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சிமலை சார்ந்த பகுதிகளில் மேற்குத் தமிழ்நாட்டில் 4 முதல் 5 வரையான சிறு குழுவாகவும் 50 வரையான பெருங்கூட்டமாகவும் காடுகளின் மேலே உயரப் பிற உழவாரக் குருவி இனங்களோடு சேர்ந்து பறந்தபடி வண்டுகள், தத்துப்பூச்சி, தேனீ முதலியனவற்றை இரையாகத் தேடி உண்ணும். மணிக்கு 200 முதல் 250 கி.மீ.வேகத்தில் பறக்கும் ஆற்றல் வாய்ந்தவை.
இனப்பெருக்கம்
[தொகு]பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை மேற்கு மலைத்தொடர் சார்ந்த மழைமிகுந்த காடுகளில் பெரிய பொந்துகளை உடைய வெள்ளைக் குங்கிலிய மரத்தின் அடிமரப் பொந்துகளிலும் , மலைப் பொந்துகளிலும் 3 அல்லது 4 முட்டைகள் இடும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Hirundapus giganteus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - ↑ பக்கம் எண்:82, தமிழ்நாட்டுப் பறவைகள், முனைவர் க. ரத்னம், மெய்யப்பன் பதிப்பகம்