பழுப்பு மார்பு ஈப்பிடிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பழுப்பு மார்பு ஈப்பிடிப்பான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
மோனார்க்கிடே
பேரினம்:
மியூசிகாபா
இனம்:
மி. முட்டுயி
இருசொற் பெயரீடு
மியூசிகாபா முட்டுயி
(லேயர்டு, 1854)[2]
வேறு பெயர்கள்

அல்சியோனாக்சு முட்டுயி
புடலிஸ் முட்டுயி

பழுப்பு மார்பு ஈப்பிடிப்பான் அல்லது லேயர்ட் ஈப்பிடிப்பான் (மியூசிகாபா முட்டுயி) என்பது மியூசிகாபிடே என்ற பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பத்தில் உள்ள ஒரு சிறிய குருவி சிற்றினம் ஆகும். இந்த சிற்றினம் வடகிழக்கு இந்தியா, மத்திய மற்றும் தெற்கு சீனா மற்றும் வடக்கு மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகியவற்றில் இனப்பெருக்கம் செய்து, தென்னிந்தியா மற்றும் இலங்கைக்கு வலசை வருகின்றன. இது வன விதானத்திற்குக் கீழே, பெரும்பாலும் காட்டில் நிலப்பகுதியின் அருகில் இருக்கும் பூச்சிகளை உணவாக உண்ணுகிறது.

விளக்கம்[தொகு]

பழுப்பு மார்பு ஈப்பிடிப்பானின் உடல் நீளம் 13-14 செ. மீ. ஆகும். உடல் எடை 10-14 கிராம் ஆகும். டலின் மேல் பகுதி முழுவதும் ஆலிவ் பழுப்பு நிறமுடையது. சில இறகு தண்டுகள் கருமையாக இருக்கும். பறக்கும் இறகுகளின் விளிம்புகளைப் போலவே வால் மேல் உறைகளும் பிரகாசமான பழுப்பு நிறத்தில் இருக்கும். வால் இறகுகள் வெளிப்புற பகுதி பழுப்பு நிறமுடையன. முகட்டலகு வெளிர் நிறத்திலும், கண் வளையம் தெளிவாகவும் இருக்கும். கன்னம் மற்றும் தொண்டை வெண்மையாகவும், மார்பகமும் உடலின் பக்கங்களும் வெளிர் பழுப்பு நிறமாகவும் காணப்படும். புணர் புழை வரை உடலின் நடுப்பகுதி வெண்மையாகக் காணப்படும்.[3] கால்கள் மற்றும் கீழ் தாடை வெளிறிய சதை நிறத்தில் உள்ளன.[4] இதனை மிகவும் ஒத்த இனமாகப் பழுப்பு ஈ பிடிப்பான் உள்ளது. இதனுடைய கால்கள் கருப்பு நிறமுடையன.[5] இந்த மாதிரியை லேயரிடம் வழங்கிய லேயரின் வேலைக்காரரான முட்டு[6] நினைவாகப் பெயரிடப்பட்டது.[2]

இப்பறவையின் வலசைப்போகும் பண்பினை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்றாலும், தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் குளிர்காலத்தில் வருகைதரும் பறவைகள் வடகிழக்கு இந்தியா மற்றும் வடக்கு தாய்லாந்திலிருந்து வருவதாகக் கருதப்படுகிறது. 1922ஆம்[7] ஆண்டில் ஹ்யூகோ வெய்கோல்டால் செக்வானிலிருந்து விவரிக்கப்பட்ட ஸ்டோட்ஸ்நேரி (இசி ஸ்டூவர்ட் பேக்கரால் ஸ்டோட்மணி எனத் தவறாக உச்சரிக்கப்பட்டது)[8] காணக்கூடிய புவியியல் மாறுபாடுகளின் வரம்பிற்குள் வருவது போல் தோன்றினாலும் மற்றும் பொதுவாக அங்கீகரிக்கப்படவில்லை.[4][9]

இதனுடைய வழக்கமான ஒலி மிகவும் சத்தம் குறைவாக செட்டி நெருங்கிய வரம்பில் மட்டுமே கேட்கக்கூடியது அல்லது குறைந்த சிட்-சிட் என முடிவடையும் சி-சி-சி-சி தொகுப்புகளின் தொடர்களைக் கொண்டுள்ளது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Muscicapa muttui". IUCN Red List of Threatened Species 2016: e.T22709220A94197748. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22709220A94197748.en. https://www.iucnredlist.org/species/22709220/94197748. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. 2.0 2.1 Layard, EL (1854). "Notes on the Ornithology of Ceylon, collected during an eight years' residence in the Island". Ann. Mag. Nat. Hist.. Series 2 13: 127. https://archive.org/stream/annalsmagazineof33lond#page/127/mode/1up. 
  3. Oates, Eugene W. (1890). The Fauna of British India. Birds Vol. 2.. Taylor and Francis, London. பக். 36–37. https://archive.org/details/faunaofbritishin02oate. 
  4. 4.0 4.1 4.2 Rasmussen, PC; JC Anderton (2005). Birds of South Asia: The Ripley Guide. Volume 2. Smithsonian Institution & Lynx Edicions. பக். 375. 
  5. Wait, WE (1922). "The passerine birds of Ceylon". Spolia Zeylanica 12: 114. https://archive.org/details/passerinebirdsof00wait. 
  6. Gould, John (1883). The birds of Asia. Volume 6.. https://archive.org/stream/BirdsAsiaJohnGoVIGoul#page/n12/mode/1up/. 
  7. Weigold, Hugo (1922). "Zwei neue formen aus Westchina". Ornithologische Monatsberichte 30 (3): 63. https://www.biodiversitylibrary.org/page/32597934. 
  8. Baker, E.C. Stuart (1930). Fauna of British India, including Ceylon and Burma. Birds. Volume VIII. (2 ). London: Taylor and Francis. பக். 632. https://archive.org/stream/BakerFBIBirds8/BakerFbiBirds8#page/n151/mode/1up. 
  9. Wells, D.R. (1983). "Brown-breasted flycatcher Muscicapa muttui in Thailand". Bulletin of the British Ornithologists' Club 103 (4): 113–114. https://archive.org/stream/bulletinofbritis10319brit#page/113/mode/1up.