உள்ளடக்கத்துக்குச் செல்

பழுப்பு கதிர்க்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பழுப்பு கதிர்க்குருவி
Brown prinia
படம் நிக்கோலசு குயிட் (1838)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சிசுடிகோலிடே[2]
பேரினம்:
பிரினியா
இனம்:
பி. பாலிக்ரோவா
இருசொற் பெயரீடு
பிரினியா பாலிக்ரோவா
(தெம்னிக், 1928)

பழுப்பு கதிர்க்குருவி (Brown prinia)(பிரினியா பாலிக்ரோவா) என்பது சிஸ்டிகோலிடே குடும்பத்தில் உள்ள பறவை சிற்றினமாகும். பர்மா கதிர்க்குருவி (பி. குக்கி) மற்றும் அன்னம் கதிர்க்குருவி (பி. ராக்கி) ஆகியவை முன்பு இந்த சிற்றினத்துடன் இணைந்திருந்தன.[3][4]

பரம்பல்

[தொகு]

பழுப்புக் கதிர்க்குருவி தென்கிழக்காசியாவின் பிரதான நிலப்பரப்பில், அதாவது தாய்லாந்து, லாவோஸ், வியட்நாம் மற்றும் கம்போடியாவின் பெரும்பாலான பகுதிகளிலும், இந்தோனேசியாவின் சாவாகம் தீவிலும் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட காடுகள் ஆகும். மியான்மர், தொலைதூர மேற்கு தாய்லாந்து, தொலைதூர மேற்கு லாவோஸ் மற்றும் தெற்கு சீனாவில் உள்ள கதிர்க்குருவிகள் இப்போது பி. குக்கி சிற்றினத்தினை சேர்ந்தவையாகக் கருதப்படுகின்றன. அதே நேரத்தில் வியட்நாமின் தா லட் பீடபூமி மற்றும் தூரக் கிழக்கு கம்போடியாவில் உள்ள கதிர்க்குருவிகள் இப்போது பி. ராக்கி சிற்றினத்தினைச் சேர்ந்தவையாகக் கருதப்படுகின்றன.[4][3]

துணையினங்கள்

[தொகு]

இந்தச் சிற்றினத்தின் கீழ் இரண்டு அங்கீகரிக்கப்பட்ட துணையினங்கள் உள்ளன. அவை தாய்லாந்து, லாவோஸ், வியட்நாம் மற்றும் கம்போடியாவில் காணப்படும் பி. பி. தெய்க்னானி மற்றும் பி. பி. பாலிக்ரோவா, சாவகம் தீவில் காணப்படுகிறது. பி. பி. தெய்க்னானி முன்பு பி. பி. குக்கி சிற்றினத்தின் கிழக்குக் பகுதி கதிர்க்குருவிகளாக கருதப்பட்டன. 2019 ஆய்வு வரை, இதனை பர்மிய மற்றும் தென் சீன பறவைகளிலிருந்து வேறுபடுத்தியதன் அடிப்படையில், பி. குக்கி மறு வகைப்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டு, தாய்லாந்து, லாவோஸ் மற்றும் கம்போடிய பறவைகளைக் கொண்டு புதிய துணையினமாக மறுவகைப்படுத்தப்பட்டது. [4][3][5]

இதற்கு அமெரிக்க பறவையியலாளர் ஹெர்பர்ட் கிர்டன் தெய்க்னானி நினைவாகப் பெயரிடப்பட்டது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2016). "Prinia polychroa". IUCN Red List of Threatened Species 2016: e.T22713572A94380213. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22713572A94380213.en. https://www.iucnredlist.org/species/22713572/94380213. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Alström, P; Ericson, PG; Olsson, U; Sundberg, P; Per G.P. Ericson, Urban Olsson & Per Sundberg (Feb 2006). "Phylogeny and classiWcation of the avian superfamily Sylvioidea". Molecular Phylogenetics and Evolution 38 (2): 381–397. doi:10.1016/j.ympev.2005.05.015. பன்னாட்டுத் தர தொடர் எண்:1055-7903. பப்மெட்:16054402. 
  3. 3.0 3.1 3.2 "Brown Prinia (Prinia polychroa)". www.hbw.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-22.
  4. 4.0 4.1 4.2 4.3 Alström, Per; Rasmussen, Pamela C.; Sangster, George; Dalvi, Shashank; Round, Philip D.; Zhang, Ruying; Yao, Cheng-Te; Irestedt, Martin et al. (2019). "Multiple species within the Striated Prinia Prinia crinigera-Brown Prinia P. polychroa complex revealed through an integrative taxonomic approach" (in en). Ibis 162 (3): 936–967. doi:10.1111/ibi.12759. பன்னாட்டுத் தர தொடர் எண்:1474-919X. 
  5. Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (2020). "Grassbirds, Donacobius, Malagasy warblers, cisticolas, allies". IOC World Bird List Version 10.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 22 February 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழுப்பு_கதிர்க்குருவி&oldid=3701053" இலிருந்து மீள்விக்கப்பட்டது