பழுதை கட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பழுதை என்னும் சொல் வைக்கோலால் திரிக்கப்பட்ட கயிற்றைக் குறிக்கும். சைவ ஆசாரியருள் சிலரைப் பழுதை கட்டி எனக் குறிப்பிடுவது வழக்கம். இவர்கள் தமது உடலைப் பழுதை எனக் கூறிக்கொண்டனர். இவர்கள் இறந்த பின்னர் தம் உடலாகிய பழுதையை எரிக்கவோ, புதைக்கவோ வேண்டாம் எனவும், தன் உடலின் காலில் பழுதைக் கயிற்றால் கட்டி இழுத்துச் சென்று ஆற்று நீரில் எரிந்துவிடும்படி தம் மாணாக்கர்களுக்குக் கூறி வைத்திருந்தனர். இதனால் இவர்கள் 'பழுதை கட்டி' என்னும் அடைமொழியுடன் குறிப்பிடப்பட்டனர். [1] [2]

ஆகிய மூவர் இந்தச் 'சிறப்படை' பெற்றவர்கள்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005, பக்கம் 29
  2. பழுத்துச் செத்தாலும் பிறந்து செத்தாலும் பாழ் உடலம்
    கொழுத்துச் செத்தாலும் மெலிந்து செத்தாலும் கொலைப் படினும்
    புழுத்துச் செத்தாலும் புதைத்தாலும் காலில் புரியைக் கட்டி
    இழுத்துச் செத்தாலும் சிதம்பரத்தே சென்று இறத்தல் நன்றே.

    (பழுதை கட்டிச் சிற்றம்பல நாடிகள் எழுதிய தில்லைக் கலம்பகம் பாடல் 8)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பழுதை_கட்டி&oldid=1832854" இலிருந்து மீள்விக்கப்பட்டது