பழுது நீக்கும் கருவிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பழுது நீக்கும் கருவிகள் அல்லது பழுதை சரிசெய்யும் உபகரணம் என்பது பல்வேறு கருவி மற்றும் உதிரி பாகங்களை உள்ளடக்கியது. ஒரு சாதனத்தில் ஏற்பட்ட பகுதி அல்லது முழுமையான பழுதினை சரிசெய்வதற்கு பயன்படுத்தப்படும் கருவிகளின் தொகுப்பாகும். பல்வகை கருவி உள்ளடக்கியது. அவை வாகனங்கள், மகிழுந்து, கப்பல், படகு, ஆகாய விமானம், இரு சக்கர மோட்டார் வாகனம், மிதிவண்டி, வீட்டு உபயோகப் பொருள்கள், வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் பொழுது வழியில் பழுதின் காரணமாக பயணம் தடைப்பட்டால் பழுது ஏற்பட்ட இடத்தில் சரிசெய்யும் வகையிலோ அல்லது மனிதருக்கு ஆபத்து ஏற்படும் பொழுது முதலுதவி போன்று அவசர சிகிச்சை மேற்கொள்வது போல் அதே இடத்தில் பழுது நீக்கியோ அல்லது பணிமனைக்கு கொண்டு சென்று சரிசெய்யப்பட்டு பழைய நிலையிலேயே நன்முறையில் செயல்பட வைப்பதற்கு உதவும்.

    உதாரணமாக ஒரு மிதிவண்டி ஏதேனும் ஒரு கருவியாலோ, கல்லாலோ அல்லது முள், கம்பி போன்றவற்றால் வாகன இரப்பர் குழாய் பழுதுபட்டு விட்டால் அவற்றை அவ்விடத்திலே சரிசெய்ய பயன்படும் பசை, ஒட்டுவில்லை போன்றவை கொண்டு துளையை அடைத்து சரிசெய்ய பயன்படுகிறது.
    இதே போன்று துணிப்பொருள்கள், கூடாரங்கள், நெகிழி இலைப் படகுகள் போன்றவையும் சரிசெய்ய பயன்படுபவை ஆகும்.

சான்றாதாரம்

https://en.wikipedia.org/wiki/Repair_kit