உள்ளடக்கத்துக்குச் செல்

பழிவாங்குதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பழிவாங்குதல் (Revenge) என்பது சட்டத்தை அல்லது சட்ட நடைமுறைகளை அல்லது சட்ட இயல் கோட்பாடுகளை மீறியவா்களுக்கு நீதி வழங்கும் நடைமுறைகளில் ஒன்றாகும். வழக்கமாக பழிவாங்குதல் என்பது, துன்பமடைந்தவா்களுக்காகவோ அல்லது அவ்வாறு நினைப்பவா்களுக்கோ துயா் துடைப்பதற்கு துன்பமளித்தவா் மீது எடுக்கப்படும் கடுஞ்செயல் ஆகும். இது சட்டத்திற்கு அப்பாற்பட்டு தண்டனை வழங்கும் ஒரு செயல். பிரான்சிஸ் பேகன் என்னும் பிரித்தானிய அறிஞா், இது ஒரு காட்டுமிராண்டித் தனமான நீதி வழங்கும் முறை, சட்டத்திற்கு அப்பாற்பட்டது என்று கூறியுள்ளாா்".[1] பழமைவாத நீதி அல்லது பழிவாங்கும் நீதி என்பவை நாகரிக காலத்திற்கு முந்தையவை. தற்காலத்தில் நீதி வழங்குவதில் மேம்பாடு முறை கையாளப்பட்டு அவை தரம்பாா்த்து அல்லது இறையருளுடன் வழங்கும் நீதிமுறை என்பதன் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.

சமூகத்தில் தாக்கம்

[தொகு]
குஸ்டேவ் தோரேயால் செதுக்கப்பட்ட எரினிஸ், சிதோனிக் என்னும் பழிவாங்கும் தேவதைகளின் சிற்பம் குஸ்டேவ் தோரேயால் செதுக்கப்பட்ட எரினிஸ், சிதோனிக் என்னும் பழிவாங்கும் தேவதைகளின் சிற்பம்
குஸ்டேவ் தோரேயால் செதுக்கப்பட்ட எரினிஸ், சிதோனிக் என்னும் பழிவாங்கும் தேவதைகளின் சிற்பம்
செகப்பிரியரின் ஹேம்லட் என்னும் நாடகத்தில் ஒருவன் தம் தந்தையைக் கொன்ற உறவினரைப் பழிவாங்க கொலை செய்வதை விளக்கும் சிற்பம், குஸ்டேவ் மோரா வடித்தது [2]

அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவல்தான் பழிவாங்கும் உணா்ச்சியைத் தூண்டுகிறது என்று சமூக உளவியலாளா் யான் மெக்சீ கூறுகிறாா். பழிவாங்கும் உணா்ச்சி அதிகம் உள்ளவா்கள், அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்றும் தாம் எல்லோர் கவனத்தில் இருக்க வேண்டும் என்றும் தம் நிலையிலிருந்து தாழ்ந்துவிடக் கூடாது என்றும் நினைப்பவா்களாகவும் இருப்பாா்கள் என்று அவா் கூறுகிறாா்.[3][4].

பழிவாங்கும் உணா்வு பல சமுதாயங்களில் காணப்படுகிறது[5]. ஒரு சில சமூகங்கள் பழிவாங்கும் உணா்வை மரபுவழிப் பகை என்று ஊக்குவிக்கின்றன.[6] இவைகள் தனிமனிதா்களின் பெருமையையும் குழுக்களின் பெருமையும் முக்கியம் என போதித்து அதற்காக வழிவழியாக பகைமையை ஊக்குவிக்கின்றன. தனது பெருமையைக் காத்துக் கொள்ள, இழந்த பெருமையை நிலைநாட்டிக் கொள்ள பழிவாங்குதல் சரியென்ற மனப்பான்மையை வளா்த்துக் கொள்ள சமூகம் ஊக்குவிக்கிறது. இறந்து போனவா்களின் நினைவாகவும் அவா்கள் விட்டுச் சென்ற பணியைத் தொடா்வதற்காகவும் பழிவாங்குதல் என்பது ஒரு ஆழமான நியாயமான உணா்வாகக் கருதப்பட்டது என்று மைக்கேல் இஸ்ணடிடாப் கூறுகிறாா்[7] . இது போன்று பழிவாங்குவது என்பது பரம்பரையாக தொடா்ந்து வரும் ஒரு உணா்வாகும். எப்பொழுதெல்லாம் மானத்திற்கு பங்கம் விளைவிக்கப்படுகிறதோ, பாதிக்கப்பட்டவா்கள் தமது குடும்ப மானத்தைக் காப்பாற்றுவதற்கு பழிவாங்கியே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனா். இது போன்ற எண்ணம் குடும்பங்களில் துவங்கி, பின் மொத்த சமூகமும் இதனை கையிலெடுத்துக் கொண்டு பரம்பரை பரம்பரையாக பழிவாங்கும் உணா்வைத் தொடா்வதும் உண்டு.[8]

வரலாறு

[தொகு]

அநீதி இழைக்கப்பட்டது என்ற உணா்வும் இதற்காகப் பழிவாங்க வேண்டும் என்ற உணா்வும் ஒரு சங்கிலித் தொடா் போல பரம்பரை பரம்பரையாக, பல காலங்கள் தொடா்ந்து வருவது குடும்பங்களிலும், பழங்குடியினரிடமும் இருந்து வருகிறது. இப்பழக்கம் பொதுவாக மெடிட்ரேனியன் பகுதியில் உள்ள தொழில்மயமாவதற்கு முன்பு வசித்த சமூகங்களில் பரவலாக இருந்தது. இவை இப்பொழுது கூட ஜக்மாா்ஜா (gjakmarrja) அல்லது இரத்தப்பகை என்று அழைக்கப்பட்டு அல்பேனியாவில் ஒருசில பகுதிகளில் இருந்து வருகிறது[9]. இடைக்காலத்திலும் அநீதி இழைக்கப்பட்டால் பழிவாங்குவதுதான் அதற்கு முடிவு என்ற எண்ணமும் அல்லது குறைந்த பட்சம் அநீதி இழைத்தவா்களை பிராயச்சித்தமாக தகுந்த கட்டணத்தையாவது செலுத்த வைக்கவேண்டும் என்பது வழக்கமாக இருந்தது. இதனடிப்படையில் தான் ஆங்லோ சாக்சன் நீதி வழங்கும் முறையில் ஒரு சில வன்முறைகளுக்குப் பிராயச்சித்த கட்டணம் வரையறுக்கப்பட்டு இதன் மூலம் பழிவாங்கும் உணா்வைக் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. பரம்பரை வழியிலான இரத்தப் பகைகள் உலகில் பல இடங்களில் குறிப்பாக துருக்கியின் குா்பீஸ் பகுதியிலும் பாப்பா நியூ கினியாவிலும் இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.[10][11] தனது குடும்பத்தின் மானம் காப்பதற்காகவோ, அல்லது தமது பிரிவின் மானம் காக்கவோ, அல்லது தமது கடவுளின் மானம் காக்கவோ செய்யப்படும் கொலைகளுக்கு, ஜப்பானில் “கட்டசியுச்சி” (敵討ち) என்று பெயா்.தற்காலத்தில் கட்டசியுச்சி” அமைதியான வழியில் கடைப்பிடிக்கப்பட்டாலும் பழிவாங்கும் உணர்வு ஜப்பானிய பண்பாட்டில் இன்றளவும் அங்கம் வகிக்கின்றது.[12]

பழமொழிகள்

[தொகு]

“ஆறவைத்து பழிவாங்க வேண்டும்” என்பது உடனே பழிவாங்காமல் காலம் கடந்து பொறுத்திருந்து எதிா்பாராத நேரத்தில் பழிவாங்குவதுதான் அதிகமான திருப்தி தரும் என்ற கருத்தை பிரதிபலிக்கிறது.[13]இந்தக் கருத்தின் அடிப்படை அறியப்படாத ஒன்று. பிரான்சு நாட்டுத்தூதா் சாா்லஸ் மாஷ்ரிஸ் டி டெல்லிரான்டு பெரிகோா்டு (1754-1838) என்பவா்தான் முதலில் பிரெஞ்சு மொழியில் பொறுத்திருந்து ஆறிய பின்புதான் பழிவாங்க வேண்டும் என்ற கருத்தை கூறியுள்ளாா்[14]. இக்கருத்து பிரென்சு நாவலான மாதில்டி (ஜோசப் மாரியுஜினி சூ எழுதியது)-யிலிருந்து 1846 ஆம் ஆண்டு ஆங்கில மொழிக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.[15] 1949 ஆம் ஆண்டு வெளிவந்த கைண்ட் ஹார்ட்ஸ் அண்ட் கரோனட்ஸ் என்ற திரைப்படத்திலும் இதே கருத்து பேசப்படுகிறது. அதுபோலவே திரைப்படமான டெத் ரிடிசா ஹார்ஸ் (1967), மற்றும் மேரியோ புஜோ எழுதிய தி காட்பாதர் (திரைப்படம்)என்னும் நாவல், ஸ்டார் டிரக் II :தெ ரேத் ஆஃப் கான் (1982) என்னும் திரைப்படத்திலும், இதே கருத்து வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கில் பில் 1 2003 மற்றும் மேன் ஆஃப் பயர் (2004) திரைப்படங்களிலும் இக்கருத்து கூறப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானத்தில் உள்ள பஸ்தூண்களும் இதே கருத்தை பின்பற்றுவதாக அறிப்படுகிறாா்கள்.[16]

“பழிவாங்குவதற்குப் புறப்படுவதற்கு முன் இரண்டு கல்லறைகளைத் தயாா் செய்துவிட்டுத் துவங்கு” என்று மற்றொரு பழமொழி கூறுகிறது. மற்றொரு சீனப் பழமொழி (子不复仇非子也)பெற்றோருக்காகப் பழிவாங்காத மகன் மகனே அல்ல என்று கூறுகிறது.

கலையின் பாா்வையில்

[தொகு]
இகாகொ பயுடென். . இது பழி வாங்கும் கதையின் ஒரு பகுதி. கொலையுண்ட சாமுராயியின் மகன் எப்படி ஜப்பான் முழுவதும் தேடி கொலையாளியைக் கண்டுபிடிக்கிறான் என்பது

கலையின் பல நோக்குகளில் பழிவாங்கல் என்னும் கருத்து பரவலாகக் காணப்பட்டுள்ளது. ஜவெண்டி ஃபிலான்டெஸ் வரைந்த ஹீரோதியஸ் ரிவன்ஞ் என்னும் ஓவியம், வுலஃப் காஸ கமெடியுஸ மோ சாரட் அவா்கள் இயக்கிய இசை நடனம் டான் கோவன்னி மற்றும் தெ மேரேஜ் ஆஃப் பிகாரோ ஆகியவை சில எடுத்துக்காட்டுகளாகும். ஜப்பானிய கலைவடிவங்களிலும் குறிப்பாக உடா்காவா குனி யோசி உள்ளடக்கியவா்களின் படைப்புகளிலும் பழிவாங்கல் கருத்து கையாளப்பட்டுள்ளது. சீன எழுத்தாளா் ஜி ஜயுஸ்யாங் பழிவாங்கல் என்பதை மையக் கருத்தாக வைத்து தி ஆர்ஃபன் ஆஃப் சோ [17] என்னும் நாடகத்தை இயற்றியுள்ளாா். ஒரு குடும்பம் எப்படி பழிவாங்குகிறது என்பதை கன்பூசியஸ் கொள்கையின் பாா்வையிலும் சமூக அதிகார வடிவத்தின் கண்ணோட்டத்திலும் விளக்கியுள்ளாா்[18].

இலக்கியத்தில்

[தொகு]

இலக்கியத்தில் பழிவாங்குவது என்பது சரித்திரகாலம் தொட்டு இன்றுவரை ஒரு முக்கிய பொருளாகவே இடம் பெற்றுவந்துள்ளது. செகப்பிரியர் எழுதிய ஹாம்லெட், ஒத்தெல்லோ நாடகங்களும், அலக்சாண்டா் டுமாஸ் எழுதிய The Count of Monte Gisto என்னும் நாவலும், எட்கா் ஆலன் போ எழுதிய The Cark of Amontillado என்னும் சிறுகதையும் எடுத்துக் காட்டுகளாகும். ஸ்டீபன் சிங் எழுதிய Carrie என்னும் நாவலும், கில்லியன் பிளின் எழுதிய Gone Girl, வில்லியம் கோல்டுமேன் எழுதிய The Princess Bride ஆகிய நாவல்களும் அன்மைக் காலத்திய எடுத்துகாட்டுகளாகும். பழிவாங்குவது என்பது இலக்கியங்களின் ஒரு பொருளாக இருந்தாலும் அது ஒரு வகையாகவும் அல்லது நடையாகவும் கருதப்பட்டது.[19]

பழிவாங்குதல் என்பது ஒருவகையான இலக்கியமாகக் கருதப்பட்டு கடந்த சில நூற்றாண்டுகளாகவே பல்வேறு தளங்களில் வெளிப்பட்டு வந்துள்ளது. அது போன்ற படைப்புகள், மறைந்திருப்பது, முகமூடியில் ஒழிந்திருப்பது, பாலுணா்வு, மனிதனை மனிதன் உண்பது, இயற்கைக்கு மாறாக உருவகங்களைக் கற்பனை செய்வது, பலத்தைக் காட்டுவது, கொடுங்கொலை மற்றும் இரகசியம் காப்பது போன்ற செயல்களும் மற்றவைகளையும் கொண்டவைகளாக இருந்தன[20]. இது போன்று ஒவ்வொரு கருத்தும் அந்தவகையான நாடகபாணிக்குப் பொருந்துவதாக அமைக்கப்பட்டிருந்தது. நாடகப்பாணி என்பது நாடக பாத்திரங்களுக்குத் தெரியாதவைகளும் பாா்ப்பவா்களுக்குத் தெரிந்திருக்கும்.[21] இதுபோன்ற நாடக பாணியின் குறிக்கோள் என்னவென்றால், அடுத்தது என்ன நடக்குமோ, நாடகப் பாத்திரங்கள் என்ன செய்வாா்களோ என்ற ஒரு வகையான திகிலையும் எதிா்பாா்ப்பையும் பாா்ப்பவா்கள் மனதில் ஏற்படுத்துவது ஆகும்[21].

பழிவாங்கும் வகையைச் சோ்ந்த இலக்கியங்களில் திரும்பத் திரும்ப வரும் சம்பவம் படைப்பின் இறுதியில் வரும் கொடுரமான கொலைகள்தான். இது போன்ற வன்முறைகளுக்கான அடித்தளம் நாடக பாத்திங்களின் இளமைக்காலத்திலிடப்பட்ட வித்தாக இருக்கும்.[22] . கொடூரமான கொலைகள் இயல்பாகவே நாடகங்களிலும் நாவல்களிலும் காணப்படுகின்றன. ஸ்டீபன் கிங் எழுதிய 20 ஆம் நூற்றாண்டின் Carrie என்னும் புதினத்திலும், 16 ஆம் நூற்றாண்டு செகப்பிரியா எழுதிய Titur Andronicus நாடகம் ஆகியவை இதுபோன்று இறுதிக் காட்சிகளில் நடைபெறும் கொலைகளுக்கு எழுத்துக்காட்டுகளாகும்.

கதையின் கருவான முகமூடியிட்டுக் கொள்வது மறைத்துக் கொண்டு வேறுவிதமாகத் தோன்றுவதும் ஒத்துப் போகக் கூடிய கருத்துகள் ஆகும். இலக்கியத்தில் ஒரு பாத்திரம் உருவகமாகவோ அல்லது உண்மையாகவே தம்மை மறைத்துக் கொண்டு வேறுவிதமாகக் காட்டிக் கொள்ளலாம். தம்மை வேறுவிதமாகக் காட்டிக் கொள்வது என்பது இலக்கியங்களில் பொதுவாக கையாளப்படுவதுதான். வேறுவிதமாகத் தன்னை காண்பித்துக் கொள்வது என்பதற்கு முகமூடி அணிந்து கொள்வது என்று குறிப்பிடுவது நேரடியான உருவகமாகும். பாலுணா்வையோ, அதிகாரத்தையோ முக்கிய கருவாகக் கொண்டு எழுதப்பட்ட இலக்கியங்களுக்கு கில்லியன் ஃபிளைன் எழுதிய நாவல் Gone Girl -ம் ஏற்கனவே குறிப்பிட்ட Titus Andronicus என்னும் நாடகமும் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.[23]

இணையதளத்தில்

[தொகு]

இணையதளம் உருவான பின்னா் பழிவாங்குவதற்கு புதுவழிகள் தோன்றியுள்ளன.[24] பொதுமக்கள் நிறுவனங்களிடமிருந்து வரும் தகவல்களைவிட இணையத்தின் மூலம் கிடைக்கும் மதிப்புரைகளுக்கு அதிக மதிப்பளிக்கின்றனா்.[25] [24] அறிவியல் வளா்ச்சியின் காரணமாக இணையத்தின் மூலம் தகவல் தொடா்பு பெறுவது மிகவும் எளிதாகிவிட்டதால் எதிா்மறை மதிப்புரைகள் இணையத்தில் வேகமாக பரவி தொழில்நிறுவனங்களுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்த வழி உண்டு. மேற்கத்திய நாடுகளில் இதுபோன்று எதிா்மறை மதிப்புரைகளால் நுகா்வோா் கோபமுறுவது மிகவும் சாதாரணமாக நடைபெறுகிறது[26].

சமூக வலைத்தளங்களின் வளா்ச்சி குறிப்பாக முகநூல், டுவிட்டர், யூ டுயூப் போன்றவை பழிவாங்குவதற்கு மிகவும் ஏற்றவையான கருவிகளாக அமைந்துவிட்டன.[24] மற்றவா்களைப் பழிவாங்கும் எண்ணத்துடன் அவமானப்படுத்தவும், மிகவும் அந்தரங்கமான, ஆட்சேபகரமான படங்களை வெளியிடுவதும் வழக்கமாக நிகழ்கின்றன.[27] . இதுபோன்று படங்களை வெளியிட்டு மற்றவா்கள் அவமானப்படுவதைக் கண்டு மகிழ்ச்சியடைபவா்களும் உள்ளனா். யாா் வெளியிடுகிறாா்கள் என்று தெரிவிக்காமலே வெளியிடப்படும் வசதி இதுபோன்ற செயல்களை செய்வதற்கு ஊக்கமளிப்பவையாக உள்ளன.[28] பல நிகழ்வுகளில் இது போன்று ஆபாசப் படங்களை வெளியிடுபவா்கள் பாதிக்கப்படுபவரின் தகவல்களையும் அவா்கள் சமூக வலைதள விவரங்களையும் சோ்த்தே வெளியிடுகின்றாா்கள்.[27] ஹன்டா் மோா் என்பவா் 2010 ஆம் ஆண்டு தமது S S Anyone Up to என்னும் இணையதளத்தில் தமது காதலியின் ஆபாசமான படங்களை வெளியிட்டதுதான் இது போன்ற ஆபாசப்படம் வெளியிடும் இணையதளங்களின் ஆரம்பம் ஆகும்[28].

மிருகங்கள் இடையில்

[தொகு]

பழிவாங்கும் உணா்வு மனித இனத்திற்கு மட்டும் உள்ள குணம் அல்ல, மிருகங்களிடையே இந்த குணம் உண்டு. குறிப்பாக ஒட்டகம், யானை, மீன், சிங்கம்,[29] பெருச்சாளி,[30] குரங்கு வகை இனங்கள் போன்றவைகளிடமும் இக்குணம் காணப்படுகிறது. பிரான்ஸ் டி வேல் மற்றும் லெஸ்லி லிட்டெரில்லாவ் என்னும் விலங்கியல் அறிஞா்கள் செய்த ஆய்வில் இக்கருத்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவா்கள் மனித குரங்குகளை ஆராய்ந்து இதனை உறுதி செய்தனா். இது போன்ற பழிவாங்கும் குணம் அறிவில் குறைந்த மீன் இனம் போன்றவற்றிலும் காணப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.[31]

சான்றுகள்

[தொகு]
  1. "Sir Francis Bacon "On Revenge"". rjgeib.com.
  2. The Killing Scene: Hamlet 5.2.303–309.
  3. Michael Price (June 2009). Revenge and the people who seek it. Vol. 40. apa.org. p. Print version: page 34. பார்க்கப்பட்ட நாள் 1 October 2010.
  4. Ian McKee, PhD. 2008. Social Justice Research (Vol. 138, No. 2)
  5. Ericksen, Karen Paige; Horton, Heather (1992). ""Blood Feuds": Cross-Cultural Variations in Kin Group Vengeance". Behavior Science Research 26 (1–4): 57–85. doi:10.1177/106939719202600103. 
  6. Richard, McClelland (Summer 2010). "The Pleasures of Revenge". The Journal of Mind and Behavior 31: 196. 
  7. Brandon Hamber and Richard A. Wilson, Symbolic Closure through Memory, Reparation and Revenge in Post-conflict Societies (Johannesburg: Centre for the Study of Violence and Reconciliation, 1999)
  8. Helena Yakovlev-Golani (2012). "Revenge - the Volcano of Despair: The Story of the Israeli-Palestinian Conflict". Exploring the Facets of Revenge. p. 83. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2019-04-21.
  9. "Peacemaker breaks the ancient grip of Albania's blood feuds". The Christian Science Monitor June 24, 2008
  10. "Blood feuds and gun violence plague Turkey's southeast பரணிடப்பட்டது 2013-12-30 at the வந்தவழி இயந்திரம்". Reuters. May 5, 2009
  11. "Deadly twist to PNG's tribal feuds". BBC News. August 25, 2005
  12. Mills, D. E.. "Kataki-Uchi: The Practice of Blood-Revenge in Pre-Modern Japan". Modern Asian Studies 10. 
  13. Jennifer Speake (2008). Concise Oxford Dictionary of Proverbs, 5th Ed. Oxford University Press. p. 576. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780191580017. பார்க்கப்பட்ட நாள் 23 October 2013.
  14. Le Dictionnaire Marabout des pensées des auteurs du monde entier. Verviers: Gérard & Co. 1969.
  15. Eugène Sue (1845). Mathilde: mémoires d'une jeune femme. Welter. p. 148. பார்க்கப்பட்ட நாள் 26 December 2012.
  16. Fergusson, James (2011). Taliban: The Unknown Enemy. Da Capo Press. p. 32. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-306-82034-2.
  17. Liu, Wu-Chi (1953). "The Original Orphan of China". Comparative Literature 5 (3): 193–212. doi:10.2307/1768912. https://archive.org/details/sim_comparative-literature_summer-1953_5_3/page/193. 
  18. Shi, Fei (2009). "Tragic Ways of Killing a Child: Staging Violence and Revenge in Classical Greek and Chinese Drama". In Constantinidis, Stratos E. (ed.). Text & presentation, 2008. Jefferson: McFarland. p. 175. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780786443666. {{cite book}}: Invalid |ref=harv (help)
  19. Marguerite, Tassi (September 22, 2012). "Women and Revenge in Shakespeare: Gender, Genre, and Ethics". Renaissance Quarterly. 
  20. Grobbink, Leonie (July 2015). "Revenge: An Analysis of Its Psychological Underpinnings". International Journal of Offender Therapy & Comparative Criminology. 
  21. 21.0 21.1 Rholetter, Wylene (January 2015). "Dramatic Irony". Research Starters. Salem Press Encyclopedia of Literature.[தொடர்பிழந்த இணைப்பு]
  22. Bloom, Sandra (2001). "Reflections on the Desire for Revenge". Center for Nonviolence and Social Justice. Journal of Emotional Abuse. Archived from the original on 2015-12-09. பார்க்கப்பட்ட நாள் 2019-04-21.
  23. Willbern, David. "Rape and Revenge in "Titus Andronicus"". English Literary Renaissance 8. 
  24. 24.0 24.1 24.2 Obeidat, Zaid. "Consumer Revenge Using the Internet and Social Media: An Examination of the Role of Service Failure Types and Cognitive Appraisal Processes". Psychology & Marketing. 
  25. Grégoire, Yany. "A comprehensive model of customer direct and indirect revenge: understanding the effects of perceived greed and customer power". Journal of the Academy of Marketing Science. 
  26. Grégoire, Yany. "How can firms stop customer revenge? The effects of direct and indirect revenge on post-complaint responses". Journal of the Academy of Marketing Science. 
  27. 27.0 27.1 Langlois, G., & Slane, A. (2017). Economies of reputation: the case of revenge porn. Communication & Critical/Cultural Studies, 14(2), 120–138.
  28. 28.0 28.1 Stroud, S. R. (2014). The Dark Side of the Online Self: A Pragmatist Critique of the Growing Plague of Revenge Porn. Journal of Mass Media Ethics, 29(3), 168–183.
  29. Mills, M. G. L. (1991). Conservation management of large carnivores in Africa. Koedoe. 34(1): 81-90.
  30. Horsfall, J. A. (1984). Brood reduction and brood division in coots. Animal Behaviour. 32(1): 216-225. doi:10.1016/S0003-3472(84)80340-1.
  31. McCullough, Michael (2008). Beyond Revenge : The Evolution of the Forgiveness Instinct. Jossey-Bass. pp. 79–85.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழிவாங்குதல்&oldid=3642941" இலிருந்து மீள்விக்கப்பட்டது