பழவேற்காடு வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சோழமண்டல கடல் பகுதியியல் சுமார் 1680 இல் டச்சு வணிக கப்பல்கள்

பழவேற்காடு வரலாறு என்பது தென்னிந்தியாவின், சோழ மண்டலக் கடற்கரையில் உள்ள சில இயற்கை துறைமுகங்களில் ஒன்றான பழவேற்காடு துறைமுகத்தின் துவக்கக்கால பாத்திரத்தை சுற்றியதாக உள்ளது. பழவேற்காடானது தமிழ்நாட்டின் பழவேற்காடு ஏரி முகப்பில் உள்ளது. 1616 மற்றும் 1690 மற்றும் 1782 முதல் 1825 வரையிலான காலப்பகுதியில் டச்சு சோழமண்டலத்தின் தலைமையகமாக பழவேற்காடு இருந்தது குறிப்படத்தக்கது.

சுருக்கம்[தொகு]

வரலாற்றில் பொது ஊழி 300 துவக்கத்தில் இருந்து 15 ஆம் நூற்றாண்டு வரை பழவேற்காடு ஒரு பெரிய துறைமுகமாக இருந்துள்ளது. இந்த துறைமுக வருவாயின் ஆதாயங்களைப் பெற துவக்கத்திலிருந்தே தமிழ், தெலுங்கு மற்றும் முஸ்லீம் ஆட்சியாளர்கள் போராடியதால் பழவேற்காடு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உருவெடுத்தது. அதன்பிறகு, அரேபியர்கள் மற்றும் போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்களும் பிரித்தானியரும் 1825 வரை இந்தத் துறைமுகத்தில் ஆதிக்கம் செலுத்தினர். 16 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், இது 50,000 க்கும் மேற்பட்ட பல கலாச்சார மக்களைக் கொண்டிருந்தது மேலும் வங்காள விரிகுடாவில் மிக முக்கியமான இந்திய துறைமுகமாகவும் இருந்தது. பின்னர், இது ஒரு மீன்பிடி கிராமமாகவும், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் ஒரு உடல் நலம் பேணுமிடமாகவும் இருந்தது.[1]

17 ஆம் நூற்றாண்டில், சோழமண்டலக் கடற்கரையில் டச்சு முகவர்கள் பழவேற்காட்டின் மூலமாக பெரிய அடிமை வர்த்தகத்தை நடத்தினர். 1621 மற்றும் 1665 க்கு இடையில், பழவேற்காடு, மெட்ராஸ், நாகப்பட்டினம் மற்றும் தேவனாம்பட்டினம் உள்ளிட்ட மத்திய சோழமண்டல துறைமுகங்களிலிருந்து 38,000 க்கும் மேற்பட்ட அடிமைகள் அனுப்பப்பட்டனர்.

பழவேற்காகாடு வரலாற்றில் கிமு 3 ஆம் நூற்றாண்டுக்கும் தற்போதைய விடுதலைக்குப் பிந்தைய காலத்திற்கும் இடைக்காலத்தில் இந்திய மன்னர்கள் மற்றும் வெளிநாட்டு காலனித்துவவாதிகளின் எட்டு காலக்கட்டங்கள் காணப்படுகின்றன.

காலம் ராஜ்ஜியங்கள் / ஆட்சியாளர்கள்
கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் 3 ஆம் நூற்றாண்டு வரை பண்டைய தமிழ் அரசுகள்
3 முதல் 10 ஆம் நூற்றாண்டு வரை பல்லவ காலம் & 9 ஆம் நூற்றாண்டில் முதல் அரபு குடியேற்றம்
10 முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை சோழர் காலம்
13 முதல் 17 ஆம் நூற்றாண்டு வரை விஜயநகரப் பேரரசு & அரபு குடியேறியவர்கள்
1502 முதல் 1606 வரை விஜயநகர பேரரசு & போர்த்துகீசிய வெளி அரண்
1606 முதல் 1825 வரை டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி வர்த்தக மையம் & விஜயநகர பேரரசு
1825 முதல் 1947 வரை பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு வெளி அரண்
சுதந்திரத்திற்குப் பிந்தைய காலம் இந்திய குடியரசு, மீன்பிடி கிராமம்

ஆரம்பகால வரலாறு (பொ.ச.மு. 300 - பொ.ச. 1279)[தொகு]

தென்னிந்தியாவின் கிபி 250 கால தொலெமி வரைபடம். Muziris ( முசிறி நகரம்), R. dunes ( காவிரி ஆறு ) R. Palerif ( பாலாறு ) மற்றும் ஆர் கங்கை ( கங்கை ஆறு ) அடியியல் Tabrobane (இலங்கை ).[2]

பண்டைய தமிழ் இராச்சியங்கள்[தொகு]

பொ.ச.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் 3 ஆம் நூற்றாண்டு வரை, பழவேற்காகாடு என்பது முற்காலச் சோழர்கள், சங்ககாலப் பாண்டியர் மற்றும் சேரர் போன்ற பண்டைய தமிழ் இராச்சியங்களின் வடக்கு வெளி அரண் பகுதியாகும்.[3] 1 ஆம் நூற்றாண்டில், அநாமதேய கடற்பயணி எழுதிய செங்கடல் செலவு என்ற நூலில் போடூகே (பழவேற்காடு) இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள மூன்று துறைமுகங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டது.[4] இரண்டாம் நூற்றாண்டில், தொலெமியின் இந்த கடற்கரையின் துறைமுகங்களின் பட்டியலில் போடூகே (பழவேற்காடு) சேர்க்கப்பட்டுள்ளது.[5]

பல்லவ மற்றும் சோழர் காலங்கள்[தொகு]

3 ஆம் நூற்றாண்டில், பழவேற்காடு பல்லவ மன்னர்களின் அதிகாரத்தின் கீழ் வந்தது.[3] 7 ஆம் நூற்றாண்டில், பல்லவ காலத்தில், காலிகட்டுக்கு மாமல்ல பட்டினம் என்று பெயரிடப்பட்டதிலிருந்து, இது ஒரு முக்கியமான கடலோர நகரம் என்பது தெரிகிறது.[6] 11 ஆம் நூற்றாண்டில், இடைக்கால சோழர்களின் பொற்காலத்தில் ஒரு முக்கியமான சிவன் கோயிலானது ஆரணி ஆற்றின் கரையில் ராஜேந்திர சோழனால் ஏரியில் தென்மேற்கே 4 கிலோமீட்டர்கள் (2.5 mi) நொலைவில் பழவேகாடுக்கு அருகிலுள்ள திருப்பலைவனத்தில் கட்டப்பட்டது.[7][8]

அரபு குடியேறிகள்[தொகு]

9 ஆம் நூற்றாண்டில், பழவேற்காட்டில் அரபு கடல் வணிகர்களின் குடியேற்றங்கள் இருந்தன.[1] 13 ஆம் நூற்றாண்டில், இசுலாமிய நாட்காட்டி 668 (1269 CE) [9] புதிய கலீஃபாவுக்கு கப்பம் செலுத்த மறுத்ததற்காக மக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டு பின்னர் மதீனாவிலிருந்து அரபு சுனி-ஷாஃபி கதெம்ஸ் இந்த ஏரிக் கரைக்கு குடிபெயர்ந்தனர். அவர்கள் தமிழ் மொழியை ஏற்றுக்கொண்டு அப்பகுதியில் முன்னணி வர்த்தகர்களாக மாறினர்.[10] 1225 முதல் 1275 வரை, மலாய் தீபகற்பத்தில் இருந்து டை, ஓமான் அல்லது துஃபர் ஆகிய இடங்களுக்கு தகரம் கொண்டு செல்லும் அரபு கப்பல்கள் வாடிக்கையாக பழவேற்காட்டில் நிறுத்தப்பட்டன.[11] 12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டில், அராபியத் தீபகற்பம் மற்றும் இந்தியப் பெருங்கடல் துறைமுகங்களுடனான வர்த்தக தொடர்புகளின் விளைவாக, தென்னிந்தியாவில் பழவேற்காடும், சோழமண்டலத்தின் பிற துறைமுக நகரங்களும் முறையான இஸ்லாத்தின் மையங்களாக அடையாளம் காணப்பட்டன. அவர்களில் தமிழ் முஸ்லிம்கள் கணிசமானவர்கள் "நிரந்தர முஸ்லிம்கள்" என்று வகைப்படுத்தப்பட்டனர்.[12] 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், பழவேற்காடு துறைமுகத் தலைவராக கஜோல் என்ற முஸ்லீம் இருந்தார்.[13] இந்த அரேபிய முஸ்லிம்கள் ஒரு காலத்தில் வாழ்ந்த பாழடைந்த வீட்டு கட்டமானங்களைக் கொண்ட வீதிகள் இப்பகுதியில் இன்னும் காணப்படுகின்றன. மீதமுள்ள சில குடும்பங்களிடம் உள்ள அரபு மொழி சான்றுகள் அவர்கள் இப்பகுதிக்கு குடிபெயர்ந்து வந்ததிற்கு சான்றாக உள்ளன.[14][15]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 Pandian pp.72–75
 2. Milleri, Conradi (1887–1888). Tabula Peutingeriana. BIBLIOTHECA AUGUSTANA ca. 250. http://www.hs-augsburg.de/~harsch/Chronologia/Lspost03/Tabula/tab_pe14.html. 
 3. 3.0 3.1 Natarajan p. 72
 4. Nambiar, O.K. (2006). "the Cholas". "AN ILLUSTRATED MARITIME HISTORY OF INDIAN OCEAN" HIGHLIGHTING THE MARITIME HISTORY OF THE EASTERN SEA BOARD. Archived from the original on June 19, 2009. https://web.archive.org/web/20090619060909/http://www.pfr2006.nic.in/MaritimeHistory3.htm. 
 5. Francis, Peter (2002). Asia's Maritime Bead Trade: 300 B.C. to the Present p. 33. https://books.google.com/books?id=zzZBdGQN_TIC&pg=PA33&lpg=PA33&dq=Podouke. 
 6. Azariah pp.34–35
 7. Azariah p.10
 8. Wikimapia: Thirupalaivanam-Sivan-Koil
 9. Muhanna, Waleed (1992-12-08). "Gregorian-Hijri Dates Converter". rabiah.com. மூல முகவரியிலிருந்து 2008-12-09 அன்று பரணிடப்பட்டது.
 10. Pandian p.130
 11. Blanchard, Ian. Mining, Metallurgy and Minting in the Middle Ages. Franz Steiner Verlag. https://books.google.com/books?id=vE30pXxiLFUC&pg=PA901&dq=pulicat+%22twelfth+century%22. 
 12. Bayly p. 78
 13. Županov p. 100
 14. SANJEEVA RAJ, P.J. (October 19, 2003). "... and a placid Pulicat experience". http://www.hinduonnet.com/thehindu/mag/2003/10/19/stories/2003101900280700.htm. பார்த்த நாள்: 2008-11-29. 
 15. CRENIEO (2005). "Alternative Development Paradigm". CRENIEO. மூல முகவரியிலிருந்து 2008-11-20 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழவேற்காடு_வரலாறு&oldid=2867296" இருந்து மீள்விக்கப்பட்டது