உள்ளடக்கத்துக்குச் செல்

பழவிள இரமேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பழவிள இரமேசன்
பிறப்பு(1936-03-30)30 மார்ச்சு 1936
பெரிநாட், கொல்லம், கேரளம், இந்தியா
இறப்பு13 சூன் 2019(2019-06-13) (அகவை 83)
பணிகவிஞர், இதழாளர், பாடலாசிரியர்

பழவிள இரமேசன் (Pazhavila Ramesan, 30 மார்ச் 1936 – 13 சூன் 2019) இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த ஒரு மலையாள மொழி இதழாளரும், கவிஞரும், பாடலாசிரியரும் ஆவார். இவர் 2017ஆம் ஆண்டிற்கான ஒட்டுமொத்த பங்களிப்பிற்கான கேரளச் சாகித்திய அகாதமி விருதைப் பெற்றார்.[1][2]

வாழ்க்கை வரலாறு

[தொகு]

1961 முதல் 1968 வரை கே. பாலகிருஷ்ணனின் கவுமுதி வாரஇதழில் இணை ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் கேரள பாஷா இன்ஸ்டிடியூட் (மாநில மொழிகள் நிறுவனம்) இயக்குநராகவும் பணியாற்றினார். இவரது இலக்கியப் படைப்புகளில் பழவிள இரமேசன்றே கதகள், மழயுடே ஜாலகம் மற்றும் ஞான் எண்டே காடுகளிலேக்கு (கவிதைத் தொகுப்புகள்); ஓர்மயுடே வார்த்தமானம், மாயாத்த வரகள் மற்றும் நேர்வர (கட்டுரைகள்) ஆகியவை அடங்கும். இவர் ஞாட்டடி (1979), ஆசம்சகளோடே (1984), அங்கிள் பன் (1991), மாளூட்டி (1992) மற்றும் வசுதா (1992) உள்ளிட்ட சில மலையாளத் திரைப்படப் பாடல்களுக்கு வரிகளை எழுதியுள்ளார்.

இறப்பு

[தொகு]

பழவிள இரமேசன் உடல்நலக்குறைவு காரணமாக 13 சூன் 2019 அன்று கேரளாவின் திருவனந்தபுரத்தில் காலமானார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழவிள_இரமேசன்&oldid=4650132" இலிருந்து மீள்விக்கப்பட்டது