உள்ளடக்கத்துக்குச் செல்

பழனி விரைவுத் தொடருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பழனி அதிவிரைவுத் தொடருந்து
பழனி அதிவிரைவுத்தொடருந்து
பழனி அதிவிரைவுத் தொடருந்து

பழனி அதிவிரைவுத் தொடருந்து அல்லது சென்னை சென்ட்ரல்-பழனி அதிவிரைவு தொடருந்து (வண்டி எண்: 22651) (ஆங்கிலம்: Chennai Central-Palani Supper Fast Express) என்பது சென்னை சென்ட்ரல் சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்து பழனிக்கும், பழனியிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கும் (வண்டி எண்: 22652) என்று இரு வழித்தடங்களில் இயங்கும் ஒரு விரைவுத் தொடருந்தாகும். 551 கி.மீ பயணத் தொலைவு கொண்ட இந்தத் தொடருந்துச் சேவை செப்டம்பர் 2, 2013 முதல் அறிமுகம் செய்யப்பட்டு நாள்தோறும் இயங்கிக் கொண்டிருக்கிறது.[1] இந்தத் தொடருந்து பழனிக்கும் திண்டுக்கல்லுக்கும் இடையே சத்திரப்பட்டி, ஒட்டன்சத்திரம், அக்கரைப்பட்டி, திண்டுக்கல் வரையிலும் சாதாரண பயணிகள் தொடருந்தாகவும் திண்டுக்கல்லிலிருந்து விரைவுத் தொடருந்தாகவும், கரூர், நாமக்கல், ராசிபுரம், சேலம், ஜோலார்பேட்டை, குடியாத்தம், காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் போன்ற ஊர்களில் நிறுத்தங்களாகக் கொண்டுள்ளது. இந்தத் தொடருந்து 17 பெட்டிகளில் இரண்டாம் வகுப்பு 3 அடுக்கு படுக்கை, குளிர்சாதன 2 அடுக்கு, 3அடுக்குப் படுக்கை மற்றும் இரண்டாம் வகுப்பு இருக்கை போன்றவைகளை உள்ளடக்கமாகக் கொண்டு 1,240 பயணயிடங்களைக் கொண்டுள்ளது. இதன் தொடக்கவிழா திண்டுக்கல் தொடருந்து நிலையத்தில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் என். எஸ். வி. சித்தன், முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம் ஆகியோர் கொடியசைக்க தொடருந்து சேவை துவக்கி வைக்கப்பட்டது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Central-Palani Expressexpress-22651-ms-to-plni/22095 "Chennai Central-Palani ExpressExpress/22651". Indian Railway. பார்க்கப்பட்ட நாள் 3 September 2013. {{cite web}}: Check |url= value (help)
  2. September 2013

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழனி_விரைவுத்_தொடருந்து&oldid=3700528" இலிருந்து மீள்விக்கப்பட்டது