பழங்கால ஒலிம்பிக் விளையாட்டுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிரேக்கர்கள் கிரேக்க நாட்டில் ஒலிம்பியா என்னுமிடத்தில் தங்கள் கடவுளான ஜியஸ் என்பவரின் நினைவாக நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதங்களில் பெளணர்மி நாட்களில் ஒலிம்பிக் விளையாட்டுகள் நடத்தப்பட்டது.

 பழங்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் தோற்றம் குறித்து பலவகையான கூற்றுக்கள் உள்ளன. அவை பின்வருமாறு
 அ. முற்காலத்தில் பூமியை ஆளவதற்கு,   ஜியஸ், க்ரோனோஸ் ஆகிய இரு கடவுள்களிக்கிடையே மற்போர் நிகழ்ந்தது. அதில்  ஜியஸ் கடவுள் வெற்றி பெற்றதால் ஒலிம்பிக் விளையாட்டுகள் தொடங்கப்பட்டன என்று கூறப்படுகின்றது.
 
 ஆ. முற்காலத்தில் ஏனோமஸ் என்ற அரசன் கிரேக்க நாட்டினைக் கண்டு வந்தான். அவனுடைய மகள் ஹிப்போடோமியா ஆவாள். ஏனேமஸ் தன் மகளை மணம் செய்து வைக்க தேரோட்டப் போட்டி ஒன்றை நடத்தி அதில் வெற்றி பெறுபவர்க்கு தன் மகளை மணம் முடித்து வைப்பதாக அறிவித்தான் பிளாப்ஸ் வெற்றி பெற்று  ஹிப்போடோமியாவை மணந்து கொண்டான அதன் விளைவாக இப்போட்டி நடைபெற்று இருக்கலாம் என்ற கருத்த நிலவுகிறது.
இ) ஹெர்குலஸ் அரசர் சூஜியஸர வென்றதின் நினைவாக இப்போட்டி நடைபெற்று இருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.
 ஈ) சட்ட வல்லுநர்களான லைகர்சஸ் இடிடஸ்டோடு இணைந்து ஒலிம்பிக் விழா கி.மு.220ல் நடத்தியதாக கூறுகின்றனர்.
  கி.மு. 776ஆம் ஆண்டில் தான் பழங்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் நடைபெற்றதாக வரலாறு கூறுகின்றது. இம்முதல் "கொரோபஸ்" ஒலிம்பிக் அவன் பெயரிலேயே வழங்கப்பட்டடது.