பழங்காலத் தமிழர் வாணிகம் (நூல்)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பழங்காலத் தமிழர் வாணிகம் என்னும் நூல் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதிய நூலாகும். இந்நூலை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரவேட் லிமிடெட் நிறுவனத்தார் 1990இல் மூன்றாம் பதிப்பாக வெளியிட்டனர்.
நூலைப் பற்றி
[தொகு]இந்நூல் கடைச்சங்க காலத்தில் (அதாவது கி.மு.இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி.இரண்டாம் நூற்றாண்டுவரையில்) தமிழர் நடத்திய வாணிகத்தைப் பற்றிக் கூறுகிறது. அந்தக் காலத் தமிழர் இந்தியாவின் வடக்கே கங்கைக்கரை (பாடலிபுத்திரம்) முதலாகக் கிழக்குக்கரை மேற்குக்கரை நாடுகளில் நடத்திய வாணிகத்தைப் பற்றியும் தமிழகத்துக்கப்பால் கிழக்கே இலங்கை, சாவகநாடு (கிழக்கிந்தியத் தீவுகள்),மலேயா,பர்மா,முதலான கடல் கடந்த நாடுகளில் வாணிகத்தைப்பற்றியும், மேற்கே அரபு நாடுகள், எகிப்து, உரோம சாம்ராச்சியம் ஆகிய நாடுகளுடன் செய்த வாணிகத்தைப்பற்றியும் கூறுகிறது.
உள்ளடக்கம்
[தொகு]- சங்க கால மக்கள் வாழ்க்கை
- பண்ட மாற்று
- போக்குவரத்துச் சாதனங்கள்
- தமிழ் நாட்டு வாணிகம்
- பிறநாட்டு வாணிகம்
- பழங்காலத் துறைமுகப்பட்டிணங்கள்
- தமிழகத்தின் மேற்குக்கரை துறைமுகங்கள்
- இலங்கைத் துறைமுகங்கள்
- விளைபொருளும் உற்பத்திப் பொருளும்