உள்ளடக்கத்துக்குச் செல்

பழக்கமான குற்றவாளிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வழக்கமான குற்றம் செய்பவர் அல்லது மீண்டும் மீண்டும் குற்றம் செய்பவர் அல்லது தொழில்முறை குற்றவாளி, (Habitual offender), திருட்டு, கொள்ளை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதை பரம்பரைத் தொழிலாகக் கொண்டவர்களையும், இரண்டு முறைக்கு மேல் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறை தண்டனை பெற்றவர்களைக் குறிக்கும். இது போன்ற பழக்கமான குற்றவாளிகளின் உடல் அடையாளங்கள், கைரேகைகள் காவல்துறை மற்றும் சிறைச்சாலைகளில் ஆவணப்படுத்தப்படும்.

இந்தியாவில்

[தொகு]

1857 சிப்பாய்க் கிளர்ச்சியைத் தொடர்ந்து, பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் 1931-ஆம் ஆண்டில் 1924 குற்றப் பரம்பரை சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்தின் கீழ், 237 சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கு குற்றப் பிறப்புக் குறியீடு வழங்கப்பட்டது. இந்திய விடுதலைக்குப் பின் 1952-ஆம் ஆண்டில் குற்றப்பரம்பரை சட்டம் நீக்கப்பட்டது. அதற்குப் பதிலாக 1956-ஆம் ஆண்டில் பழக்கமான குற்றவாளிகள் சட்டம் இயற்றப்பட்டது.[1]பழக்கவழக்கக் குற்றவாளிகள் சட்டத்தின்படி, ஒரு பழக்கவழக்கக் குற்றவாளி என்பது அகநிலை மற்றும் புறநிலை தாக்கங்களுக்குப் பலியாகி, குற்றத்தில் ஒரு குறிப்பிட்ட நடைமுறையை வெளிப்படுத்தி, அவர்கள் வாழும் சமூகத்திற்கு ஆபத்தை இழைப்பவர் ஆவார். பொதுவாக பழக்கவழக்கக் குற்றவாளிகள் தங்கள் வாழ்ககையின் பெரும்பகுதியை சிறைகளில் கழிக்கின்றனர். ஏனென்றால் அவர்கள் சிறையிலிருந்து விடுதலையான உடன் மீண்டும் குற்றங்களைச் செய்து மீண்டும் சிறைக்குச் செல்கிறார்கள்.

இன்றளவும் பார்திகள், கஞ்சர்கள், ராமோஷிகள், கேப்மாரிகள், குறவர்கள் மற்றும் வஞ்சாரிகள் போன்ற 'குற்றவாளி' பழங்குடியினரின் பல வகைகள் உறுதியான அரசின் நடவடிக்கைக்கு வெளியே தொடர்ந்து இருக்கின்றன. பெரும்பாலும் இத்தகைய பழங்குடியினரின் உறுப்பினர்களை, காவல்துறையால் கைது செய்யத் தவறிய குற்றவாளிகளுக்கு மாற்றாக மாற்றப்படுகிறார்கள்.[2]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழக்கமான_குற்றவாளிகள்&oldid=3607928" இலிருந்து மீள்விக்கப்பட்டது