உள்ளடக்கத்துக்குச் செல்

பள்ளி நிதி திரட்டுதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பள்ளி நிதி திரட்டுதல் (School fundraising) என்பது அரசு, பள்ளிகள் அல்லது பெற்றோர்-ஆசிரியர் கழகங்கள் போன்ற பள்ளி குழுக்களால் கல்வி வளப்படுத்தும் திட்டங்களை ஆதரிப்பதற்காக பணம் திரட்டும் நடைமுறையாகும்.

2011 ஆம் ஆண்டு நிலவரப்படி, அமெரிக்கப் பள்ளிகள், பிற இலாப நோக்கற்ற நிறுவனங்கள் ஆகியன பரவலாக அறியப்படும் நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் $1.7 பில்லியனை நிதியாகத் திரட்டியுள்ளன.[1] பத்தில் எட்டு அமெரிக்கர்கள் இந்த வகையான திட்டங்களை ஆதரிக்கின்றனர்.[2]

வரலாறு

[தொகு]

1970களின் முற்பகுதியில் இருந்து வீடு வீடாக நிதி திரட்டுதல் என்பது வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது. இருப்பினும், அமெரிக்காவில் 1997 ஆம் ஆண்டு நியூ ஜெர்சியைச் சேர்ந்த 11 வயது சிறுவன் தனது சுற்றுப்புறத்தில் மேற்பார்வையின்றி நிதி திரட்டும் போது கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்த நடைமுறை கடுமையான கண்காணிப்பின் கீழ் வந்தது. இதன் காரணமாக நிதி திரட்டுபவர்கள் குழந்தைகள் வீடு வீடாகச் செல்ல அனுமதிப்பதில்லை.[3]

தமிழ்நாடு

[தொகு]

தமிழ்நாடு அரசு, சமூகம் மற்றும் பெருநிறுவனங்களின் பங்களிப்பைப் பெற்று அரசுப்பள்ளிகளை மேம்படுத்துவதற்காக நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி எனும் திட்டத்தினை உருவாக்கியுள்ளது. இதற்கு அளிக்கப்படும் நிதிக்கு, இந்திய வருமான வரிச் சட்டத்தின் 80G பிரிவின்படி வரிவிலக்கு கிடைக்கும்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Association of Fund-Raising Distributors and Suppliers (AFRDS) பரணிடப்பட்டது சூன் 3, 2011 at the வந்தவழி இயந்திரம்
  2. Association of Fund-Raising Distributors and Suppliers (AFRDS) பரணிடப்பட்டது சூன் 3, 2011 at the வந்தவழி இயந்திரம்
  3. New York Times, Dec 9, 1997
  4. "Namma School Namma Ooru Palli". nammaschool.tnschools.gov.in. Retrieved 2025-02-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பள்ளி_நிதி_திரட்டுதல்&oldid=4214451" இலிருந்து மீள்விக்கப்பட்டது