பள்ளி இணைப்புத் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பள்ளி இணைப்பு திட்டம் என்பது தனித்தனியாக இயங்கும் பள்ளிகள் முழுமையாக அனைத்து வசதிகளும் இல்லாத நிலையில் அப்பள்ளிகள் அருகருகே உள்ள எல்லா வசதிகளும் உள்ள ஆரம்ப பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளுடன் அல்லது உயர் நிலை,மேல்நிலை பள்ளிகளுடன் இணைந்து முழு வசதிகளையும் பயன்படுத்திக் கொண்டு மற்றும் கூட்டுறவு கல்விச் செயல்களும் தான் பள்ளி இணைப்பு திட்டம் எனப்படும்.

நோக்கங்கள்[தொகு]

ஒரு பள்ளி முழுமையாக செயல்பட வசதி,தேவைகள் ஆகியவற்றை கண்டறிதல். திறன்மிகு பள்ளி நிர்வாகத்திற்கான கருத்தரங்கம்,பயிலரங்கம் நடத்துதல். பொதுவாக கற்றல் கற்பித்தல் செயல் வங்கி,வினா வங்கி,ஆய்வகம், நூலகம், ஆகியவற்றை உருவாக்குதல். கல்விச் செயல்கள் மூலம் பள்ளிகளிடையே நல்லுறவை வளர்த்த்ல். பள்ளி வளர்ச்சிக்கான மேற்பார்வை, செயல் ஆய்வு, கண்டறிதல்.

பயன்படுத்தப்படும் வளங்கள்[தொகு]

கட்டிட வசதி வகுப்பறைகள் குடிநீர், கழிப்பறை விளையாட்டிடம் தோட்டம் ஆய்வகம், நூலகம், தொலைக்காட்சி,வானொலி, மற்றும் மின்னனு கருவிகள்

பயன்கள்[தொகு]

புதிய கற்றல் கற்பித்தல் முறைகள்,மதிப்பீட்டு முறைகள் நடைமுறைப்ப்டுத்த ஆசிரியர் கல்விச்செயல்களில் ஈடுபட மனமாற்றம். அறிவியல் கண்காட்சி, பொருட்காட்சி,சூழல் முறையில் நடத்துதல். பரிசோதனை முறை, ஆய்வகம்.,பங்கேற்றுக் கல்வி, ஆசிரியர்களைக் கொண்டு கருத்தேற்றம் செய்தல். நூலக புத்தகம், விளையாட்டு பொருட்கள், தளவாட பொருட்கள் பயன்படுத்தி கொள்ள்ல் செயல் ஆய்வு,கண்டுபிடிப்பு,செயல்ப்படுத்தி பார்த்தல் பள்ளி,சமுதாயம் பொதுவான நிகழ்ச்சி நடத்துதல்

மேற்கோள்[தொகு]

[1]

    1. பள்ளி இணைப்புத் திட்டம். ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்.