பள்ளியத்திடல் படுகொலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பள்ளியத்திடல் படுகொலை
பள்ளியத்திடல் is located in இலங்கை
பள்ளியத்திடல்
பள்ளியத்திடல்
பள்ளியத்திடல் (இலங்கை)
இடம்பள்ளியகொடல்லை, வடமத்திய மாகாணம், இலங்கை
நாள்15 அக்டோபர் 1992
தாக்குதலுக்கு
உள்ளானோர்
முசுலிம்கள், சிங்களவர்
தாக்குதல்
வகை
ஆயுதத் தாக்குதல்
இறப்பு(கள்)166–285[1][2]
காயமடைந்தோர்தெரியவில்லை
தாக்கியோர்தமிழீழ விடுதலைப் புலிகள்

பள்ளியத்திடல் படுகொலை (Palliyathidal massacre) என்பது 1992 அக்டோபர் 15 ஆம் நாளன்று இலங்கையின் வடமத்திய மாகாணம்|வடமத்தியில் அமைந்துள்ள பள்ளியத்திடல் அல்லது பள்ளியகொடல்லை (Palliyagodella) கிராமத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் முசுலிம் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். நேரில் கண்ட சாட்சியங்களின்படி, ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் உட்பட 285 பேர் வரை கொல்லப்பட்டனர்.[1] ஆனாலும், இலங்கை அரசின் தகவலின்படி, 166 முதல் 171 பேர் வரை இறந்துள்ளனர்.[2][3] கொல்லப்பட்டவர்களில் 40 பேர் சிங்களவர்கள் ஆவர். ஏனையோர் முசுலிம்கள்[1] இன்னும் ஒரு தகவல் இத்தாக்குதலில் 109 முசுலிம்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கிறது.[4]

நிகழ்வு[தொகு]

இப்படுகொலை நிகழ்வின் பின்னணி விடுதலைப் புலிகள் இயக்கத்தினருக்கும் முசுலிம் சமூகத்தினருக்கும் இடையிலேற்பட்ட முறுகல் நிலையாகும். பள்ளியத்திடல் கிராம மக்கள் விடுதலைப் புலிகளின் அழிச்சாட்டியத்திலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இலங்கை இராணுவத்திடம் உதவி கோரியிருந்தனர். இலங்கையின் ஆயுதப் படைகள் அவர்களுக்கு சில சுடுகலன்களை வழங்கியிருந்தன. இதனால் விசனமுற்ற விடுதலைப் புலிகள் முசுலிம்களைத் தாக்கிப் படுகொலை செய்தனர்.[1] விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் இத்தாக்குதலில் பெண் புலி உறுப்பினர்களையும் சிறுவர் போராளிகளையும் ஈடுபடுத்தினர்.[5]

மேற்கோள்கள்[தொகு]

மேலதிக வாசிப்புக்கு[தொகு]