பள்ளப்பட்டி (கரூர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பள்ளப்பட்டி
பேரூராட்சி
பள்ளப்பட்டி is located in தமிழ் நாடு
பள்ளப்பட்டி
பள்ளப்பட்டி
தமிழ்நாட்டில் பள்ளப்பட்டி பேரூராட்சியின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 10°43′52″N 77°54′35″E / 10.731111°N 77.909722°E / 10.731111; 77.909722ஆள்கூறுகள்: 10°43′52″N 77°54′35″E / 10.731111°N 77.909722°E / 10.731111; 77.909722
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கரூர் மாவட்டம்
ஏற்றம்174 m (571 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்30,624
மொழிகள்
 • அலுவல் மொழிதமிழ்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்639205, 639207
தொலைபேசு குறியீடு04320
வாகனப் பதிவுTN-47[1]

பள்ளபட்டி (Pallapatti) தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள 11 பேரூராட்சிகளில் ஒன்றாகும். அரவக்குறிச்சி வட்டத்தில் அமைந்த பள்ளப்பட்ட் பேரூராட்சி 18 உறுப்பினர்களைக் கொண்டது. பள்ளப்பட்டி பகுதியில் அமராவதி ஆற்றின் கிளை ஆறான நன்காஞ்சி ஆறு பாய்கிறது.

அமைவிடம்[தொகு]

கரூர் - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அமைந்த பள்ளப்பட்டி, திண்டுக்கல்லிருந்து 47 கிமீ தொலைவிலும், கரூருக்கு தென்மேற்கே 37 கிமீ தொலைவில் உள்ளது. அரவக்குறிச்சிக்கு தெற்கே 7 கிமீ தொலைவில் பள்ளப்பட்டி பேரூராட்சி உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

18 வார்டுகளும், 7,426 வீடுகளும் கொண்ட பள்ளப்பட்டி பேரூராட்சியின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள்தொகை 30,624 ஆகும். அதில் ஆண்கள் 15,069 (49%) ஆகவும்; பெண்கள் 15,555 (51%) ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1032 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு 92.53% ஆகவுள்ளது. பள்ளப்பட்டியின் மொத்த மக்கள்தொகையில் 6 வயதிற்குட்பட்டோர் 3471 ஆகவுள்ளனர். பள்ளப்பட்டி பேரூராட்சியின் பெரும்பாலான மக்கள் தமிழ் மொழி பேசும் இசுலாமியர்களாக (94.90%) உள்ளனர்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பள்ளப்பட்டி_(கரூர்)&oldid=2683484" இருந்து மீள்விக்கப்பட்டது