பல் பதியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பற்கூரையுடன் பல் பதியம் - ஒற்றைப் பல்லிற்கான மாற்றீடு (implant= பற்பதியம்; abutment = சார்வு; crown = பற்கூரை)

பல் பதியம் (dental implant அல்லது endosseous implant அல்லது fixture) என்பது பல் உறுப்புமாற்று சிகிச்சை மேற்கொள்ள ஏதுவாக தாடை எலும்பு அல்லது கபாலத்துடன் இணைக்கும் ஓர் அறுவை மருத்துவப் பொருளாகும்; இதன் மூலம் பற்கூரை, பல்லிடைப்பாலம், பொய்ப்பல், முகமாற்று சிகிச்சை போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ள முடிகின்றது. பல்லை வலுப்படுத்தும் சாதனமாகவும் பயன்படுத்தப்படுகின்றது. எலும்பிணைவு என்னும் உயிரியல் செயற்பாடே தற்கால பல் பதிய சிகிச்சைகளுக்கான அடிப்படை ஆகும். தைட்டானியம் போன்ற பொருட்கள் எலும்புடன் ஒன்றற இணைவதே எலும்பிணைவாகும். பல் பதியம் முதலில் தேவையான தாடை எலும்பு பகுதியில் இருத்தி எலும்பிணைவு நடக்க காத்திருந்து பின்னர் பல்மாற்று உறுப்பு பொருத்தப்படும். எலும்பிணைவு நடக்க எடுக்கும் நேரம் வேறுபடுகின்றது. எனவே நன்றாக உறுதி செய்த பின்னரே பற்கூரையோ, பல்லிடைப் பாலமோ, பொய்ப்பல்லோ பதியத்தின் மீது பொருத்தப்படுகின்றது.

சிகிச்சை பெறும் நபரின் உடல்நலத்தைப் பொறுத்தே பதியங்கள் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுள்ளனவா என்பது அமையும். அவர் எடுக்கும் மருந்துகள் எலும்பிணைவைப் பாதிக்கும்; வாய்த் தசைகளின் நலமும் வெற்றி வாய்ப்பை முடிவுறுத்தும். தவிரவும் வழமையானப் பயன்பாட்டின்போது பதியங்கள், பொருத்தப்பட்ட செயற்கை உறுப்பு இவற்றின் மீதான தகைவும் மதிப்பிடப்படுகின்றது. மெல்லும்போது உருவாகும் உயிர்விசைகளைத் தாங்கும் வண்ணம் பதியங்கள் எங்கு பொருத்தப்பட வேண்டும், எத்தனை பொருத்த வேண்டும் என்பன முன்னரே ஆய்ந்து திட்டமிடப்பட வேண்டும். இவை பொருத்திய உறுப்புகளின் நீண்டகால நலனுக்கு முதன்மையானதாகும். எங்கு பொருத்தப்படவேண்டும் என்பது அடுத்துள்ள பற்களின் இடத்தையும் கோணத்தையும் சார்ந்தது. இவை ஆய்வக உருவகப்படுத்துதலாலோ வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி மூலமாகவோ முடிவு செய்யப்படுகின்றன. பதியம் பொருத்தப்படும் இடத்திலுள்ள எலும்பு, ஈறுகளின் நலத்தைச் சார்ந்தே நீள்கால வெற்றி அமையும். பற்பிரிகைக்குப் பின்னர் இவ்விரண்டுமே திறன் இழந்திருக்கக் கூடுமாதலால் சில நேரங்களில் எலும்புச் சேர்க்கை (sinus lift) அல்லது ஈறுவலுப்படுத்தல் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு பதிந்த பதியங்கள் மீது நிரந்தரமாக செயற்கைப் பல்லோ பற்கூரையோ பொருத்தப்படலாம். இதனை நோயாளி தானே எடுக்க முடியாது; மாறாக வாயிலிருந்து அவ்வப்போது எடுக்கும் வண்ணம் பொருத்தப்படலாம். ஒவ்வொரு போதும் செயற்கை உறுப்புடன் சார்வு இணைக்கப்படும். நிரந்தரமாக பொருத்தப்படும் போது பற்கூரையோ பல்லிடைப் பாலமோ செயற்கைப் பல்லோ சார்வுடன் திருகாணிகள் மூலமோ பற்காரை மூலமோ இணைக்கப்படும். நீக்கக் கூடிய வகையில் செயற்கை உறுப்புடன் தேவையான இணைப்பி பொருத்தப்படும். இதனால் ஒவ்வொருமுறை வெளியே எடுத்து மீளவும் பொருத்தும்போது சரியாக அமர்ந்து வலுவுடன் இருக்குமாறு வடிவமைக்கப்படும்.

வரலாறு[தொகு]

விழுந்த பற்களுக்கு மாறாக வேர்வடிவ பதியங்களைக் கட்டமைக்க ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முயன்று வருவதை அகழ்வாராய்ச்சி ஆதாரங்கள் வெளிப்படுத்துகின்றன. தொன்மைச் சீனாவில் (4000 ஆண்டுகளுக்கு முன்பாகவே) மூங்கில் ஆப்புகளை எலும்பில் செலுத்தி இழந்த பற்களுக்கு மாற்றீடாக பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. தொன்மையான எகிப்திலும் 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே மதிப்புமிகு மாழைகளால் செய்யப்பட்ட பதியங்கள் பயன்படுத்தப்பட்டன; சில எகிப்திய பதப்படுத்திய சடலங்களில் மனிதபற்கள் மூலம் பல்மாற்று நடந்திருப்பதும் தந்தங்கள் மூலமான பதியங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதும் தெளிவாகின்றன.[1] (p26)[2][3]

சிக்கல்களும் தீவாய்ப்புகளும்[தொகு]

பல் பதியங்களின் சில பொதுவான வகைகள்
A standard 13 mm root form dental implant with pen beside it for size comparison
ஓர் சீர்தர 13 மிமீ பல்வேர் வடிவ பல் பதியம் - அளவு ஒப்பீடிற்காக எழுதுகலமொன்று வைக்கப்பட்டுள்ளது.
A zygomatic implant is longer than standard implants and used in people without adequate bone in the maxilla. It secures to the cheek bone.
முகத்தாடை எலும்பு பதியம் சீர்தர பதியங்களை விட நீளமானது. முகத்தாடையில் போதுமான எலும்பில்லாதவர்களுக்கு இது பயன்படுத்தப்படுகின்றது. இது கன்ன எலும்புடன் இணைக்கப்படுகிறது.
Small diameter implant with single piece implant and abutment
சிறிய விட்டமுள்ள இப்பதியம் ஒரே கூறாக உள்ள பல்பதியமாகும். இதில் சார்வு இல்லை, குறைந்த எலும்பே போதுமானது.
Ultrashort Plateau Root Form (PRF) or "finned" dental implants used in regions that would otherwise require a sinus lift or bone graft.
மீச்சிறு வேர்ச்சமன் வடிவம் - எலும்புச் சேர்க்கை அல்லது எலும்பு ஒட்டல் தேவைப்படுவோருக்கு மாற்றாக பயனாகிறது.
An orthodontic implant is placed beside teeth to act as an anchor point to which braces can be secured.
பல்லுக்கு அண்மையில் பல்நேர்த்து பதியம் வைக்கப்படுகின்றது; இது பல்இறுக்கிகளை பொருத்த ஆதாரமாக விளங்குகிறது.

பல் பதியம் வைக்கும்போது ஏற்படும் சிக்கல்களை மூன்று விதமாக நோக்கலாம்;

 • பதியம் வைக்கும்போது எழும் சிக்கல்கள்:
சிகிச்சையின்போது கூடுதல் குருதி வெளியேற்றம்
நரம்பு சேதமடைதல்
 • முதல் ஆறுமாதங்களில் எழக்கூடிய சிக்கல்கள்:
நோய்த்தொற்று
எலும்பிணைவு நடக்காதிருத்தல்
 • நீள்காலச் சிக்கல்கள்:
பதியத்தைச் சூழ்ந்துள்ள பல்வேர்ச் சவ்வுகளில் அழற்சி (peri-implantitis)
பொறிமுறைத் தோல்வி

நலமாகவுள்ள பற்சவ்வுகளில் நன்றாக இணைந்த பதியங்கள் ஐந்தாண்டுகள் வரை தாக்குப் பிடிக்கும் வாய்ப்பு 93 முதல் 98 விழுக்காடாகும்;[4][5][6] இவற்றில் பொருத்தப்பட்ட செயற்கை பற்களுக்கு 10 முதல் 15 ஆண்டுகளாக வாழ்நாள் மதிப்பிடப்படுகிறது.[7] நீண்டகால ஆய்வுகளின்படி 16- முதல் 20-ஆண்டுக்காலம் தொந்தரவின்றி விளங்கும் பதியங்களின் வாய்ப்பு 52%இலிருந்து 76% வரை உள்ளது; 48% நேரம் ஏதாவது சிக்கல்கள் எழுகின்றன.[8][9]

மேற்கோள்கள்[தொகு]

 1. . 
 2. Balaji, S. M. (2007). Textbook of Oral and Maxillofacial Surgery. New Delhi: Elsevier India. பக். 301–302. ISBN 9788131203002. 
 3. Anusavice, Kenneth J. (2003). Phillips' Science of Dental Materials. St. Louis, Missouri: Saunders Elsevier. பக். 6. ISBN 978-0-7020-2903-5. 
 4. Papaspyridakos, P.; Mokti, M.; Chen, C. J.; Benic, G. I.; Gallucci, G. O.; Chronopoulos, V (Jan 2013). "Implant and Prosthodontic Survival Rates with Implant Fixed Complete Dental Prostheses in the Edentulous Mandible after at Least 5 Years: A Systematic Review". Clinical Implant Dentistry and Related Research 16 (5): 705–717. doi:10.1111/cid.12036. பப்மெட் 23311617. 
 5. Berglundh, T.; Persson, L.; Klinge, B. (2002). "A systematic review of the incidence of biological and technical complications in implant dentistry reported in prospective longitudinal studies of at least 5 years". Journal of clinical periodontology 29 (Suppl 3): 197–212. doi:10.1034/j.1600-051X.29.s3.12.x. பப்மெட் 12787220. 
 6. Pjetursson, B. E.; Thoma, D.; Jung, R.; Zwahlen, M.; Zembic, A. (2012). "A systematic review of the survival and complication rates of implant-supported fixed dental prostheses (FDPs) after a mean observation period of at least 5 years". Clinical Oral Implants Research 23: 22–38. doi:10.1111/j.1600-0501.2012.02546.x. பப்மெட் 23062125. 
 7. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; bozini என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 8. Simonis, Pierre; Dufour, Thomas; Tenenbaum, Henri (2010-07-01). "Long-term implant survival and success: a 10-16-year follow-up of non-submerged dental implants". Clinical Oral Implants Research 21 (7): 772–777. doi:10.1111/j.1600-0501.2010.01912.x. ISSN 1600-0501. பப்மெட் 20636731. 
 9. Chappuis, Vivianne; Buser, Ramona; Brägger, Urs; Bornstein, Michael M.; Salvi, Giovanni E.; Buser, Daniel (2013-12-01). "Long-term outcomes of dental implants with a titanium plasma-sprayed surface: a 20-year prospective case series study in partially edentulous patients". Clinical Implant Dentistry and Related Research 15 (6): 780–790. doi:10.1111/cid.12056. ISSN 1708-8208. பப்மெட் 23506385. 

மூலங்கள்[தொகு]

 • c Branemark, Per-Ingvar; Zarb, George (1989). Tissue-integrated prostheses (in English). Berlin, German: Quintessence Books. ISBN 0867151293. 
 • Branemark, Per-Ingvar Worthington, Philip, ed (1992). Advanced osseointegration surgery: applications in the maxillofacial region (in english). Carol Stream, Illinois: Quintessence Books. ISBN 0867152427. 
 • Laskin, Daniel (2007). Decision making in oral and maxillofacial surgery. Chicago, IL: Quintessence Pub. Co.. ISBN 9780867154634. 
 • Lee, SL (2007). Applications of orthodontic mini implants. Hanover Park, IL: Quintessence Publishing Co, Inc. பக். 1–11. ISBN 9780867154658. 
 • Sclar, Anthony (2003). Soft tissue and esthetic considerations in implant dentistry (in english). Carol Stream, IL: Quintessence Books. ISBN 0867153547. 
 • Buser, Daniel; Schenk, Robert K (1994). Guided bone regeneration in implant dentistry (in english). Hong Kong: Quintessence Books. ISBN 0867152494. 
 • Pallaci, Patrick (1995). Optimal implant positioning and soft tissue management for the Branemark system (in english). Germany: Quintessence Books. ISBN 0867153083. 
 • Renouard, Frank (1999). Risk Factors in Implant Dentistry: Simplified Clinical Analysis for Predictable Treatment. Paris, France: Quintessence International. ISBN 0867153555. 
 • Lindhe, Jan; Lang, Niklaus P; Karring, Thorkild, eds. (2008). Clinical Periodontology and Implant Dentistry 5th edition (in English). Oxford, UK: Blackwell Munksgaard. ISBN 9781405160995. 
 • Newman, Michael; Takei, Henry; Klokkevold, Perry, eds. (2012). Carranza's Clinical Periodontology (in English). St. Louis, Missouri: Elsevier Saunders. ISBN 9781437704167. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்_பதியம்&oldid=2649063" இருந்து மீள்விக்கப்பட்டது