பல் ஊடகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அறிமுகம்[தொகு]

    ஒருவர் தன்னுடைய எண்ணங்கள், கருத்துக்கள், தேவைகள் மற்றும் வாய்ப்புகள் போன்றவற்றை மற்றவரிடம் கூறவும், அவர்களிடம் கேட்கவும் தகவல் தொடர்பு மிகவும் அவசியமாகிறது. தகவல் தொடர்பிற்காக பல ஊடகங்களை/ சாதனங்களை மனிதன் பயன்படுத்துகிறான்.புதியதாக உருவாக்கப்படும் அல்லது கணடறியப்படும் ஒவ்வொரு சாதனத்தையும் தன்னுடைய தகவல் தொடர்பிற்காக பயன்படுத்தி தன்னுடைய வேலைகளை எளிமையாகவும் சிறப்பாகவும் செய்து வருகிறான். ஆங்கில எழுத்துக்கள் உருவாக்கம், முதல் தட்டச்சு இயந்திரம், வானொலி, தொலைக்காட்சிப் பெட்டி, கணினி உருவாக்கம் வரை அனைத்து ஊடகங்களையும் தகவல் தொடர்பிற்காக மிகவும் பயனுள்ளதாக மாற்றி உள்ளான்.

ஊடகம் - வரையறை[தொகு]

    லாக்ஸ் மற்றும் ஆதிசன்(1984) கருத்துப்படி “காட்சி-கேள்வி அல்லது மின்னணு மூலமாகச் செய்திகளை வெளிப்படுத்தக்கூடிய அல்லது ஒலிப்பரப்பக்கூடிய ஒன்றே ஊடகம்” எனப்படும்.

ஊடகம்-எடுத்துக்காட்டு[தொகு]

   அச்சுப்பிரதிகள்
   வரைபடங்கள்
   புகைப்படங்கள்
   தொலைக்காட்சி
   உண்மை மாதிரிகள்
   கணினி

மக்கள் தகவல் தொடர்பு சாதனம்[தொகு]

   ஒரு தகவல் அல்லது செய்தியை ஒரே நேரத்தில் பலருக்கு கொடுப்பதற்கு எப்பொழுது ஒரு ஊடகம் உதவி செய்கிறதோ அப்பொழுது அவ்வூடகம் மக்கள் தகவல் தொடர்பு சாதனம் எனப்படுகிறது

தகவல் தொடர்பின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் தாக்கம்[தொகு]

   முற்காலத்தில் மக்கள் தகவல் தொடர்பானது கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் மூலமாக பரிமாறிக் கொள்ளப்பட்டது. பின்பு அச்சிடப்பட்ட புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் மூலம் பரிமாறப்பட்டது. ஆனால் இன்று தகவல் தகவல் தொடர்பு நுட்பத்தால் எளிமையாக பரிமாறிக் கொள்ளப்படுகிறது. மொகந்தியின் கூற்றுப்படி இக்கால அறிவியல்-தொழில்நுட்ப வளர்ச்சியானது தகவல் தொடர்புத் துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரே ஒரு நாள் கூட இச்சாதனங்களின் உதவியில்லாமல் மக்களால் இருக்க முடியாது.

மேற்கோள்கள்[தொகு]

    அறிவியல் கற்பித்தல்-வளநூல்-இரண்டாம் ஆண்டு.(2009) பக்.66 தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், சென்னை-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்_ஊடகம்&oldid=2722866" இருந்து மீள்விக்கப்பட்டது