பல்ஹர்சா சந்திப்பு தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 19°50′56″N 79°20′53″E / 19.849°N 79.348°E / 19.849; 79.348
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பல்ஹர்சா சந்திப்பு
விரைவு தொடருந்து, பயணிகள் தொடருந்து நிலையம்
Balharshah nameplate.jpg
பொது தகவல்கள்
அமைவிடம்இந்தியா
ஆள்கூறுகள்19°50′56″N 79°20′53″E / 19.849°N 79.348°E / 19.849; 79.348
ஏற்றம்188 மீட்டர்கள் (617 ft)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்மத்திய இரயில்வே மண்டலம்
தடங்கள்தில்லி-சென்னை வழித்தடம்
கோண்டியா–நாக்பீர்–பல்ஹர்சா வழித்தடம்
நடைமேடை5
இருப்புப் பாதைகள்8
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரைத்தளம்
தரிப்பிடம்ஆம்
மாற்றுத்திறனாளி அணுகல்Handicapped/disabled access
மற்ற தகவல்கள்n
நிலைபயன்பாட்டில்
நிலையக் குறியீடுBPQ
இரயில்வே கோட்டம் Nagpur CR
மின்சாரமயம்ஆம்
போக்குவரத்து
பயணிகள் 15000
அமைவிடம்
பல்ஹர்சா தொடருந்து நிலையம் is located in மகாராட்டிரம்
பல்ஹர்சா தொடருந்து நிலையம்
பல்ஹர்சா தொடருந்து நிலையம்
மகராட்டிராவில் அமைவிடம்

 

பல்ஹர்சா சந்திப்பு தொடருந்து நிலையம் (Balharshah Junction Railway Station)(நிலையக் குறியீடு: BPQ ) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள பல்லார்பூர் நகரத்திற்குச் சேவை செய்யும் தொடருந்து நிலையமாகும். இது இந்திய இரயில்வேயின் மத்திய ரயில்வே மண்டலத்தின் நாக்பூர் சிஆர் ரயில்வே பிரிவின் கீழ் உள்ளது. இந்திய ரயில்வேயின் புது தில்லி-சென்னை முதன்மை வழித்தடத்தில் உள்ள முக்கியமான சந்திப்பாகும். இது கடல் மட்டத்திலிருந்து 185 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இந்நிலையத்தில் 5 நடைமேடைகள் உள்ளன். பல்லர்சா-வர்தா-நாக்பூர் பிரிவு 1989இல் மின் மயமாக்கப்பட்டது. [1]

வரலாறு[தொகு]

1929இல் பல்ஹார்சா-காசிபேட் இணைப்பு பணி முடிந்தவுடன் சென்னை நேரடியாகத் தில்லியுடன் இருப்புப் பாதைமூலம் தொடர்புப்படுத்தப்பட்டது.[2]

1908ஆம் ஆண்டில் கோண்டியா-நாக்பீர்– நாக்பூர் இரயில் போக்குவரத்துக்காகப் பயணத்திற்காகத் திறக்கப்பட்டது. நாக்பீர்-ராஜோலி பாதை 1913இல் திறக்கப்பட்டு சாந்தா கோட்டை வரை நீட்டிக்கப்பட்டது. [3] 240 km (149 mi) நீள கோண்டியா-சாந்தா கோட்டை குறுகிய பாதையானது டிசம்பர் 1992இல் அகலப்பாதையாக மாற்றும் பணி தொடங்கியது. நாக்பீர்-சந்தா கோட்டை பகுதியை உள்ளடக்கிய நான்காவது கட்ட அகலப்பாதைப் பணி ஜனவரி 13, 1999 அன்று முடிவடைந்து உபயோகத்திற்காகத் திறக்கப்பட்டது. சாந்தா கோட்டை-பல்ஹர்சா பிரிவு ஜூலை 2, 1999 முதல் திறக்கப்பட்டது.[4]

இராமகுண்டம்-பல்ஹர்சா-வர்தா-நாக்பூர் பகுதி 1988-89ல் மின் மயமாக்கப்பட்டது.[5] கோண்டியா - நாக்பீர் - பல்ஹர்சா பாதையானது 2018 இல் மின் மயமாக்கப்பட்டது.

வசதிகள்[தொகு]

இந்த இரயில் நிலையத்தில் கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையம், பொது தொலைப்பேசி நிலையம், ஓய்வு எடுக்கும் அறை, காத்திருப்பு அறை, சைவம் மற்றும் அசைவ சிற்றுண்டிச் சாலை மற்றும் புத்தகக் கடைகள் உள்ளன. [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://irfca.org/docs/electrification-history.html
  2. "IR History: Early Days – III". Chronology of railways in India, Part 3 (1900–1947). 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Major Events in the Formation of S.E. Railway". South Eastern Railway. 1 April 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-11-10 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Nagpur Division" (PDF). South East Central Railway. 2012-11-10 அன்று பார்க்கப்பட்டது.
  5. "History of Electrification". IRFCA. 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Balhashah to Bangalore trains". Make My Trip. 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

வெளி ஒளிதங்கள்
Tamil Nadu Express entering Balharpur Junction
முந்தைய நிலையம்   [[{{{title}}}]]   அடுத்த நிலையம்
மத்திய இரயில்வே மண்டலம்
TerminusSouth East Central Railway zone