பல்வகை ஊடக வீழ்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

== #பல்வகை ஊடக வீழ்த்தி தலைப்பு


 பொதுவாக கணினியின் வன்தட்டில் உள்ள தகவல்கள் திரையகம் மூலம் பார்க்கப்படும். திரையகத்தின் திரை சிறியதாக இருப்பதால் அதில் தெரியும் தகவல்களை ஒரு சில நபர்களை மட்டுமே ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பார்க்க இயலும்.
  கணினியின் உதவியுடன் காட்சி மென்பொருளை பெரிய திரையில் வீழ்த்த பயன்படுகின்றது. இதனை பயன்படுத்தி, படங்கள், ஒளிபுகும் தாள்கள், நழுவங்கள் இவற்றை பெரிய திரையில் வீழ்த்தலாம். செயற்கை இயக்கத்துடன் படங்களை திரையில் வீழ்த்தலாம். கணினியின் வன்தட்டில் உள்ள எந்த ஒரு தகவல்களையும், படங்களையும் பார்க்கலாம். இதனை அதிக எண்ணிக்கையுள்ள நபர்கள் ஒரே நேரத்தில் பார்க்க இயலும்.

செயல்படும் விதம்:

  பல்வகை ஊடக வீழ்த்தி கணினியுடன் இணைந்து செயல்படுகின்றது. திரையில் காட்டப்பட வேண்டிய செய்திகள் கணினியின் விசைப்பலகை மூலம் தட்டச்சு செய்யப்படுகின்றது. இது கணினியின் மையச் செயலகம் மூலம் பல்வகை ஊடக வீழ்த்திக்கு அனுப்பப்பட்டு பெரிய திரையில் வீழ்த்தப்படும். நெகிழ்வட்டு, நெருக்கவட்டு இவற்றில் உள்ள செய்திகளை கணினி வன்தட்டில் ஏற்றி பின்பு பல்வகை ஊடக வீழ்த்தி மூலம் திரையில் காட்டலாம்.

சிறப்புகள்:

 • பல்வகை ஊடக வீழ்த்தி மூலம் கணினியில் உள்ள எந்த ஒரு செய்திகளையும் பெரிய திரையில் வீழ்த்தலாம்
 • படங்கள், நழுவங்கள், படச்சுருள், ஒளிபுகும் தாள்கள் இவற்றை திரையில் வீழ்த்தலாம்
 • பல்வகை ஊடக முறையில் செய்திகளை அளிக்க பயன்படுகிறது
 • நெகிழ்வட்டு, நெருக்க வட்டு இவற்றில் உள்ள செய்திகளை திரையில் வீழ்த்தலாம்.
 • திரையில் வீழ்த்தப்படும் செய்திகளை, ஒரே நேரத்தில் கணிணியின் திரையகத்திலும் காணலாம், வேண்டிய மாற்றங்களை உடனுக்குடன் செய்யலாம்
 • இந்த வீழ்த்தி அளவில் சிறியது. எங்கும் எளிதாக எடுத்து செல்லலாம்
 • நெருக்கவட்டு இயக்கி மூலம் நெருக்க வட்டுக்களில் உள்ள செய்திகளை பல்வகை ஊடக வீழ்த்தி மூலம் நேரடியாக திரையில் வீழ்த்தலாம்
 • இந்த வீழ்த்தி மூலம் செய்திகள், படங்கள் முதலியவை பெரிய திரையில் வீழ்த்தப்படுவதால் இது ஒரு மக்கள் தொடர்பு சாதனமாக செயல்படுகிறது.

குறைகள்:

 • இக்கருவி விலை உயர்ந்ததாகும்.
 • கணினியை இயக்குவதில் பயிற்சி பெற்ற ஒருவரே இந்த வீழ்த்தியை இயக்க இயலும். எனவே ஆசிரியர்க்கு தனிப்பயிற்சி தேவைப்படுகின்றது.

கல்வியில் தகவல் மற்றும் தொடர்பு நுட்பவியல்- பேரா. முனைவர். கே. மோகனசுந்தரம், பேரா. ஆர். சி. வில்லியம்சு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்வகை_ஊடக_வீழ்த்தி&oldid=2380258" இருந்து மீள்விக்கப்பட்டது