உள்ளடக்கத்துக்குச் செல்

பல்லே சிந்துரா ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பல்லே சிந்துரா ரெட்டி
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2024
முன்னையவர்துதுகுண்ட சிறீதர் ரெட்டி
தொகுதிபுட்டபர்த்தி சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி

பல்லே சிந்துரா ரெட்டி (Palle Sindhura Reddy-பிறப்பு ஆகத்து 2, 1990) இந்தியாவில் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார்.[1] இவர் ஸ்ரீசத்ய சாய் மாவட்டத்தில் உள்ள புட்டபர்த்தி சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த இவர், 2024 ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2][3][4]

கல்வி

[தொகு]

சிந்துரா தனது பள்ளிப் படிப்பை முழுவதும் கேரளத்தில் முடித்தார். இவர் கோயம்புத்தூரில் உள்ள அமிர்தா பொறியியல் பள்ளியில் வேதியியல் பொறியியலில் இளநிலை தொழில்நுட்பக் கல்வியினை முடித்தார். இவர் முதுநிலைத் தொழில்நுட்பக் கல்வியினையும் முடித்தாளர். 2013-ஆம் ஆண்டு கொச்சி அமிர்தா பல்கலைக்கழகத்தில் உள்ள அமிர்தா நானோ அறிவியல் மற்றும் மூலக்கூறு மருத்துவ மையத்தில் நானோ தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றார். அனந்தபூர் மாவட்டத்தில் பல கல்லூரிகளை நடத்தும் பாலாஜி கல்விச் சங்கத்தின்[5] தலைவரான பல்லே வெங்கட கிருஷ்ணா ரெட்டியை இவர் மணந்தார். இவர்களுக்கு இரட்டையர்கள், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர் தெலுங்கு தேசக் கட்சியின் மூத்த அரசியல்வாதியும் பாலாஜி கல்விச் சங்கத்தின் நிறுவனருமான பல்லே ரகுநாத ரெட்டியின் மருமகள் ஆவார்.[6] இவரின் தந்தை என். சங்கர் ரெட்டி இந்தியக் காவல் பணியில் கேரள தொகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரி.[6]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

2024 ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் புட்டபர்த்தி சட்டமன்றத் தொகுதியில் சிந்துரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் 91,741 (49.87 சதவீதம்) வாக்குகளைப் பெற்றார். மேலும் ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சியின் பதவியிலிருந்த சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீதர் ரெட்டியை 8,760 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[2][3][5][7][8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Benjamin, Ravi P. (2024-05-03). "Vote for TDP to bring people's govt: Sindhura". www.thehansindia.com (in ஆங்கிலம்). Retrieved 2024-06-04.
  2. 2.0 2.1 "Puttaparthi Constituency Election Results 2024: Puttaparthi Assembly Seat Details, MLA Candidates & Winner". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2024-06-04.
  3. 3.0 3.1 "Puttaparthi, Andhra Pradesh Assembly Election Results 2024 Highlights: TDP's Palle Sindhura Reddy with 91741 defeats YSRCP's Duddukunta Sreedhar Reddy". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. Retrieved 2024-06-04.
  4. "Puttaparthi Election Result 2024 LIVE Updates Highlights: Assembly Winner, Loser, Leading, Trailing, MLA, Margin". News18 (in ஆங்கிலம்). 2024-06-04. Retrieved 2024-06-04.
  5. 5.0 5.1 "Puttaparthi Politics: నామినేషన్ వేసిన కాసేపటికే కేసు.. టీడీపీ అభ్యర్థికి ట్విస్ట్ ఇచ్చిన అధికారులు". Samayam Telugu (in தெலுங்கு). Retrieved 2024-06-11.
  6. 6.0 6.1 Benjamin, Ravi P. (2024-04-11). "Palle turns a star campaigner for daughter-in-law in Puttaparthi". www.thehansindia.com (in ஆங்கிலம்). Retrieved 2024-06-04.
  7. "Andhra Pradesh Assembly elections 2024: Complete list of NDA candidates - CNBC TV18". CNBCTV18 (in ஆங்கிலம்). 2024-05-08. Retrieved 2024-06-04.
  8. Telugu, ntv (2024-03-15). "Palle Sindhura Reddy: తొలిరోజు ప్రచారంలోనే టీడీపీ అభ్యర్థికి అస్వస్థత." NTV Telugu (in தெலுங்கு). Retrieved 2024-06-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லே_சிந்துரா_ரெட்டி&oldid=4447003" இலிருந்து மீள்விக்கப்பட்டது