பல்லி துர்கா பிரசாத் ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பல்லி துர்கா பிரசாத் ராவ்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2019
தொகுதி திருப்பதி மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 15 சூலை 1956 (1956-07-15) (அகவை 66)
நெல்லூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்பு 16 செப்டம்பர் 2020(2020-09-16) (அகவை 64)
அரசியல் கட்சி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
இருப்பிடம் நெல்லூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பணி அரசியல்வாதி
சமயம் இந்து

பல்லி துர்கா பிரசாத் ராவ் (ஆங்கில மொழி:  Balli Durga Prasad Rao, சூன் 15, 1956 - செப்டம்பர் 16, 2020) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு திருப்பதி மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2][3].

இறப்பு[தொகு]

சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கு கொரானா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பின்னர் செப்டம்பர் 16, 2020 அன்று மாலை சுமார் 8 மணி அளவில் பல்லி துர்கா பிரசாத் ராவ் மரணமடைந்தார்.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tirupati Election Results 2019 Live Updates: Balli Durga Prasad Rao of YSRCP Wins". News 18. 23 May 2019. 25 May 2019 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Tirupati Election Results 2019: YSRCP's Balli Durga Prasad Rao has won with 228376 votes". Times Now. 24 May 2019. 30 September 2019 அன்று பார்க்கப்பட்டது.
  3. Report on the General Elections to the Legislative Assemblies of Andhra Pradesh, Goa, Karnataka, and Sikkim Held in 1994: Statistical. Election Commission of India. 1995. பக். 136. https://books.google.com/books?id=VQKLAAAAMAAJ. பார்த்த நாள்: 30 September 2019. 
  4. "திருப்பதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. துர்கா பிரசாத் ராவ் சென்னையில் உயிரிழப்பு". மாலைமலர் (செப்டம்பர் 16, 2020)
  5. "Tirupati MP Balli Durga Prasad Rao dies of Covid-19". Sandeep Raghavan. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 16 September 2020. 16 September 2020 அன்று பார்க்கப்பட்டது.