பல்லார்பூர்

ஆள்கூறுகள்: 19°50′N 79°21′E / 19.833°N 79.350°E / 19.833; 79.350
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பல்லார்பூர்
பலார்ஷா
நகரம்
பல்லார்பூர் is located in மகாராட்டிரம்
பல்லார்பூர்
பல்லார்பூர்
இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் சந்திரபூர் மாவட்டத்தில் பல்லார்பூரின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 19°50′N 79°21′E / 19.833°N 79.350°E / 19.833; 79.350
நாடு India
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்சந்திரபூர்
பரப்பளவு
 • மொத்தம்18.50 km2 (7.14 sq mi)
பரப்பளவு தரவரிசை3rd in Chandrapur dist
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்89,452
 • தரவரிசைChandrapur dist: 2nd
 • அடர்த்தி4,800/km2 (13,000/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
தொலைபேசி குறியீடு07172 (area code)
வாகனப் பதிவுMH 34

பல்லார்பூர் (Ballarpur) (பழைய பெயர்:பலார்ஷா) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் கிழக்கில் விதர்பா பகுதியில் உள்ள சந்திரபூர் மாவட்டத்தில் அமைந்த நகரம் ஆகும்.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 18.5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 32 வார்டுகளும், 19,596 குடும்பங்களைக் கொண்ட பல்லார்பூர் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 89,452 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 45877 மற்றும் பெண்கள் 43,575 உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 950 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 10.08% ஆகும். சராசரி எழுத்தறிவு 78.39% ஆகும். மக்கள் தொகையில் பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 26,026 மற்றும் 6,497 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 64.47%, இசுலாமியர்கள் 12.69%, பௌத்தர்கள் 19.55%, கிறித்துவர்கள் 1.64%, சீக்கியர்கள் 1.36% மற்றும் பிறர் 0.28% ஆக உள்ளனர். சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இத்தாலுகாவின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பேர் வீதம் வாழ்கின்றனர்.[1] [2]

போக்குவரத்து[தொகு]

பல்லார்பூர் நகரத்தில் உள்ள பல்ஹர்சா சந்திப்பு தொடருந்து நிலையம் நாக்பூர், புனே மற்றும் மும்பை நகரங்களுடன் இணைக்கிறது. மாநில நெடுஞ்சாலை எண் 264, பல்லார்பூர் நகரத்தை நாக்பூருடன் இணைக்கிறது.

பொருளாதாரம்[தொகு]

மேற்கு நிலக்கரி வயல்கள் நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கங்கள் பெல்லார்பூர் நகரத்தைச் சுற்றிலும் உள்ளது. மூங்கில் காடுகள் இந்நகரத்தைச் சுற்றியுள்ளதால், பல்லார்பூரில் காகித தொழிற்சாலைகள் உள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லார்பூர்&oldid=3399760" இருந்து மீள்விக்கப்பட்டது