பல்லவி பௌஸ்தார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பல்லவி பௌஸ்தார்
Pallavi Nari Shakti Award.jpg
புதுதில்லியின் குடியரசுத் தலைவர் இல்லத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் நாரி சக்தி விருது வழங்கும் நிகழ்ச்சியில் பல்லவி
பிறப்பு20 திசம்பர் 1979 (1979-12-20) (அகவை 42)
ஆக்ரா
பணிமோட்டார் சைக்கிள் சவாரி செய்பவர், சமூக்க ஆர்வலர்
அறியப்படுவதுஅதிக உயரமான இடத்தில் தனியே மோட்டார் சைக்கிள் சவாரி செய்து சாதனை படைத்தது

பல்லவி பௌஸ்தார் (Pallavi Fauzdar) (பிறப்பு: திசம்பர் 20, 1979) அதிக உயரமான இடத்தில் மோட்டார் சைக்கிள் சவாரி செய்தவரும் தனது சமூகப் பணிகளுக்கு மிகவும் பிரபலமான இந்தியப் பெண்ணாவார். இவரது பல சாதனைகள் லிம்கா சாதனைகள் புத்தகத்தில் முதல் என்ற சாதனையாக இடம் பெற்றுள்ளன.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

பல்லவி இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் பிறந்தார். இவரது தந்தை அசோக் பௌஸ்தார், ஓய்வு பெற்ற மின் பொறியாளர் ஆவார். இவர் தனது 14 வயதில் இரு சக்கர வாகனத்தில் சவாரி செய்வதில் ஆர்வம் காட்டினார். தனது தந்தையின் இரு சக்கர வாகனத்தில் சவாரி செய்தார். இவர் 2004இல் திருமணம் செய்து கொண்டு 2 குழந்தைகளுடன் புது தில்லியில் வசிக்கிறார். [1]

தொழில்[தொகு]

பல்லவி புதுடில்லியில் ஒரு சவாரி குழுவில் சேர்ந்து தனது சவாரி வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது முதல் குறிப்பிடத்தக்க சாதனை 2015இல், கடல் மட்டத்திலிருந்து 5638 மீ அல்லது 18774 அடி உயரத்தில் அமைந்துள்ள உலகின் மிக உயர்ந்த கணவாயான மணா கணவாய்க்கு தனியே சென்ற சவாரியில் தொடங்கியது. இவரது சாதனையை லிம்கா சாதனைகள் புத்தகம் அங்கீகரித்தது. [2] [3] அந்த ஆண்டு இவர் ஒரு பயணத்தில் 5000 மீட்டருக்கு மேல் எட்டு மலைப்பாதைகளுக்குச் சென்று மற்றொரு சாதனையை உருவாக்கினார். பின்னர் புதிய கணவாய்கள் மற்றும் தொலைதூர பாதைகளை உள்ளடக்கிய மலைகளில் தொடர்ந்து சவாரி செய்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காரண-விழிப்புணர்வு சவாரிகளைச் செய்து சமூகப் பணிகளையும் செய்தார். 2017ஆம் ஆண்டில் இந்தியாவின் லடாக் பகுதிக்குச் சென்று 5803 மீ அல்லது 19323 அடி உயரத்தில் அமைந்துள்ள அம்லிங் லா கணவாயை அடைந்த முதல் நபரானார். அம்லிங் லா கண்வாய் இப்போது உலகின் மிக உயர்ந்த சவாரி கணவாய் ஆகும்.

பதிவுகள்[தொகு]

பல்லவி தற்போது பின்வரும் லிம்கா புத்தக பதிவுகளை வைத்திருக்கிறார்:

பதிவு வழங்கியவர் தேதி இடம் குறிப்பு
ஒரே பயணத்தில் 5000 மீட்டருக்கு மேல் எட்டு மலைப்பாதைகள் சவாரி செய்த முதல் பெண் லிம்கா சாதனைகள் புத்தகம், இந்தியா 18 சூலை 2015 லடாக், இந்தியா [4]
5638 மீ அல்லது 18774 உயரத்தில் அமைந்துள்ள மணா கணவாய்க்கு தனியே மோட்டார் சைக்கிளில் சென்ற முதல் பெண் லிம்கா சாதனைகள் புத்தகம், இந்தியா 24 செப்டம்பர் 2015 உத்தராகண்டம், இந்தியா [5]
5471 மீ அல்லது 17950 அடி உயரத்தில் அமைந்துள்ள மிக உயர்ந்த நன்னீர் ஏரிக்கு தனியே மோட்டார் சைக்கிளில் சென்ற முதல் பெண் லிம்கா சாதனைகள் புத்தகம், இந்தியா 24 செப்டம்பர் 2015 உத்தராகண்டம், இந்தியா [3]

அங்கீகாரமும் விருதுகளும்[தொகு]

பல்லவியின் பணிகள் மற்றும் சாதனைகள் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும் இவர் பின்வரும் விருதுகளைப் பெற்றுள்ளார்:

விருது வழங்கியவர் தேதி இடம் குறிப்பு
இந்தியக் குடியரசுத் தலைவர் வழங்கிய நாரி சக்தி விருது இந்திய அரசு 8 மார்ச் 2017 தில்லி, இந்தியா [6]
உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சரால் உத்தரபிரதேசத்தின் சிறந்த உலகளாவிய பெண் உத்தரப் பிரதேச மாநில அரசு, இந்தியா 30 ஏப்ரல் 2016 லக்னோ, இந்தியா [7]
டி.எல்.ஏ ஆண்டின் சிறந்த பெண் விருது 2016-2017 டி.எல்.ஏ செய்தித்தாள் 24 மே 2017 ஆக்ரா, இந்தியா [1]

சமூகப் பணி[தொகு]

பல்லவி அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் துறை ஆகியவற்றுடன் பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண் 181ன் விளம்பரத் தூதராகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆதரவிற்காக "பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் பிரச்சாரத்திலும் பணியாற்றியுள்ளார். [8][9]

தொலைக்காட்சி[தொகு]

பல்லவி தொடர்ந்து தூர்தர்ஷன் உள்ளிட்ட பல தொலைக்காட்சி ஊடக நிறுவனங்களுக்கு நேர்காணல்களை வழங்குகிறார். [10][11][12][3]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 Hemant Anand (2017-03-24), Pallavi Fauzdar - DLA Honours 2017 - Woman of the Year, 2017-11-07 அன்று பார்க்கப்பட்டது
 2. "Pallavi enters Limca book of records for crossing Mana pass". affairscloud.com (ஆங்கிலம்). 2017-11-07 அன்று பார்க்கப்பட்டது.
 3. 3.0 3.1 3.2 "Jai Ho Episode 38: Inspiring Story Of Pallavi Fauzdar | News World India". newsworldindia.in. 2018-01-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-11-07 அன்று பார்க்கப்பட்டது.
 4. "Mother of two, she rode her bike through eight Himalayan passes - Times of India". The Times of India. https://m.timesofindia.com/city/agra/Mother-of-two-she-rode-her-bike-through-eight-Himalayan-passes/articleshow/48875325.cms. "Mother of two, she rode her bike through eight Himalayan passes - Times of India". The Times of India. Retrieved 7 November 2017.
 5. "यह महिला अकेले पहुंची 18700 फीट की ऊंचाई पर, मर्द नहीं कर पाए ऐसी हिम्मत". dainikbhaskar. http://www.bhaskar.com/news/UP-LUCK-lucknow-biker-pallavi-fauzdar-limca-record-at-mana-pass-news-hindi-5368187-PHO.html. 
 6. "Nari Shakti Awards 2016 | Ministry Of Women & Child Development | GoI". wcd.nic.in. 2017-11-07 அன்று பார்க்கப்பட்டது.
 7. "मिलिए खतरों की खिलाड़ी इस महिला से, स्टंट देख दहल जाएगा दिल, देखें वीडियो". https://m.patrika.com/news/agra/globle-women-of-up-awarded-pallavi-faujadar-special-story-on-international-women-s-day-2017-in-hindi-1525411. 
 8. "पल्लवी फौजदार के नेतृत्व में ‘धूम’ मचाएंगी महिला बाइकर्स". https://www.gaonconnection.com/uttar-pradesh/pallavi-faujdar-led-womens-bikers-gang. 
 9. "काशी पहुंची महिला बाइकर्स की रैली, जहां से गुजरती है वहां खास संदेश देती है- Amarujala" (in en). Amar Ujala. http://www.amarujala.com/photo-gallery/uttar-pradesh/varanasi/pallavi-fauzdar-lady-bikers-rally-reach-varanasi. 
 10. DD News (2017-04-23), Tejasvini: Interaction with Motorcyclist Pallavi Fauzdar, 2017-11-07 அன்று பார்க்கப்பட்டது
 11. Sea education channel (2016-05-14), Mothers day Episode 01, 2017-11-07 அன்று பார்க்கப்பட்டது
 12. News World India (2017-03-09), Women's Day Special Show With NWI Journalist Pranjali Singh, 2017-11-07 அன்று பார்க்கப்பட்டது

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லவி_பௌஸ்தார்&oldid=3614308" இருந்து மீள்விக்கப்பட்டது