பல்லவி சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பல்லவி சாPallavi Shah
நாடுஇந்தியா
பிறப்பு15 நவம்பர் 1979 (1979-11-15) (அகவை 44)
பட்டம்பெண்கள் அனைத்துலக மாசுட்டர் (1999)

பல்லவி சா (Pallavi Shah) என்பவர் ஓர் இந்திய சதுரங்க விளையாட்டு வீர்ர் ஆவார். இவர் 1979 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் நாள் பிறந்தார். இந்தியப் பெண்கள் அனைத்துலக மாசுட்டர் என்ற பட்டம் இவருக்கு 1999 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

வாழ்க்கை வரலாறு[தொகு]

உலக இளையோர் சதுரங்கச் சாம்பியன் பட்டப் போட்டிகளின் வெவ்வேறு வயது பிரிவு போட்டிகளில் பல்லவி சா கலந்து கொண்டுள்ளார். 2001 ஆம் ஆண்டில் கொழும்பில் நடைபெற்ற பெண்கள் உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தின் போட்டியின் ஆசிய மண்டல போட்டியில் பல்லவி வெற்றி பெற்றார்[1]. பெண்கள் உலக சதுரங்கச் சாம்பியன் பட்டப் போட்டியின் வெளியேற்றும் சுற்று போட்டியில் பங்கேற்ற இவர் அண்டோவனேட்டா சிடெஃபனோவாவிடம் தோற்று வெளியேறினார்[2].

பெண்கள் சதுரங்க ஒலிம்பியாடு போட்டிகளில் இவர் இந்தியாவின் சார்பில் பங்கேற்று விளையாடினார்:[3].

  • ஏரவானில் 1996 இல் நடைபெற்ற பெண்களுக்கான 32 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் (+3, =2, -2),
  • எலிசுட்டாவில் 1998 இல் நடைபெற்ற 33 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் (+4, =5, -1)
  • இசுதான்புல்லில் 2000 இல் நடைபெற்ற 34 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் (+1, =0, -4) புள்ளிகள் எடுத்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Hindu : Pallavi capable of bringing more laurels to India". www.thehindu.com.
  2. "2001-02 FIDE Knockout Matches : World Chess Championship (women)". www.mark-weeks.com.
  3. "OlimpBase :: Women's Chess Olympiads :: Pallavi G. Shah". www.olimpbase.org.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லவி_சா&oldid=3434770" இலிருந்து மீள்விக்கப்பட்டது