பல்லவர் காலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பல்லவர் காலம் என்பது கி.பி. 600 - கி.பி. 900ம் ஆண்டுகளின் பிற்பகுதிக்கும் இடைப்பட்டதெனலாம். ஏறக்குறைய 300 ஆண்டுகள் பல்லவர் காலத்தினுள் அடக்கம் பெறுகின்றன. இதற்கு முன் வந்தது சங்கம் மருவிய காலம். இயற்கை வாழ்வு வாழ்ந்த சங்க கால தமிழக மக்களின் வாழ்க்கையை மறுத்தலித்தலின் வாழ்வு நெறியாகவே சங்கமருவிய கால சமண, பெளத்த மதங்கள் காட்டிய வாழ்க்கை நெறி அமைந்தது. வாழ்க்கை நிலையாமை, கருமத்தை வெல்ல இயலாமை, உலகியல் இன்பங்களை இழிவு செய்து துறவே வாழ்வின் சிறப்பு என்று காட்டி நின்ற சங்க மருவிய கால அறநெறிப் போதனைகள் ஆரம்ப காலத்தில் வாழ்வில் அமைதி காண விரும்பிய தமிழகத்தால் வரவேற்கப்பட்டாலும், காலப் போக்கில் வாழ்வு முறைகள் மனித வாழ்வின் இயல்புகளுக்குப் பொருந்தாத தன்மை கொண்டு அதைத் தமிழக மக்கள் (கி.பி 5 - 6 நூற்றாண்டு வரை) மறுதலிப்பதாகவே பல்லவர் கால வாழ்க்கை நெறி அமைந்தது. சங்க மருவிய கால கடைக்கூற்றில் பல்லவர் கால வாழ்க்கை நெறி தோன்றத் தொடங்கியது.

மேலும் காணலாம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லவர்_காலம்&oldid=3275359" இருந்து மீள்விக்கப்பட்டது